இந்தியாவை தலை நிமிர வைத்த மனு பாக்கரை பற்றிய இந்த விஷயம் ஒருத்தருக்கு கூட தெரியாது! இப்ப நாடே அதைதான் தேடுது!
பாரிஸ் ஒலிம்பிக் (Paris Olympics) திருவிழா வெகு சமீபத்தில் தொடங்கியது. இதில் இந்தியா தற்போது தனது பதக்க கணக்கை தொடங்கியுள்ளது. இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்திருப்பவர் மனு பாக்கர் (Manu Bhaker) ஆவார். இவர் துப்பாக்கி சுடுதல் (Shooting) போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (10m Air Pistol) பிரிவில், வெண்கல (Bronze) பதக்கம் வென்றுள்ளார். இதுதான் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கம் (India's 1st Medal) ஆகும். இதற்காக மனு பாக்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா உள்பட அரசியல் தலைவர், விளையாட்டு வீரர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் மனு பாக்கருக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்தியவர் என்பதால், மனு பாக்கர் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே அவரை பற்றிய பல்வேறு விஷயங்களை தற்போது இணையத்தில் தேட தொடங்கியுள்ளனர். இதில், மனு பாக்கர் வாகனங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவரா? என்பதும் ஒன்றாகும்.
இந்த கேள்விக்கான பதிலை நாங்களும் தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். மனு பாக்கருக்கு தற்போது 22 வயது மட்டுமே ஆகிறது. இந்தியாவின் மற்ற இளம்பெண்களை போலவே, மனு பாக்கரும் இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் ஆக்டிவ்-ஆக இயங்க கூடியவர். எனவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நாங்கள் ஆராய்ந்தோம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர் செய்த பதிவுகளில், கார்கள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் எதுவும் பெரிதாக இல்லை. துப்பாக்கி சுடுதல், உடற் பயிற்சி, சுற்றுப்பயணங்கள் தொடர்பான பதிவுகளைதான் மனு பாக்கர் அதிகமாக செய்துள்ளார். ஆனால் ஒரே ஒரு புகைப்படத்தில் மட்டும், ஒரு காருக்கு மிக அருகில் மனு பாக்கர் நிற்பதை எங்களால் காண முடிந்தது.
அனேகமாக அதுதான் மனு பாக்கர் பயன்படுத்தும் காராக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். அது எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) கார் ஆகும். இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி (Full-size SUV) ரகத்தை சேர்ந்தது. இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) உள்ளிட்ட கார்களுடன், எம்ஜி க்ளோஸ்ட்டர் போட்டியிட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 38.80 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 43.87 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது தெரிய வந்துள்ள தகவல்களின்படி பார்த்தால், மனு பாக்கர் கார்கள் மீது அதிக ஆர்வம் இல்லாதவர் போல் தெரிகிறது. ஆனால் கூடிய விரைவில் அவர் கார் பரிசு மழையில் நனையலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
பொதுவாக ஒலிம்பிக் போன்ற விளையாட்டு திருவிழாக்களில் சாதனை படைப்பவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் பலவும் கார்களை பரிசாக வழங்குவதை வழக்கமான கொண்டுள்ளன. மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இந்த வரிசையில் மனு பாக்கருக்கும் புதிய கார்கள் பரிசாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








