மாலிக்கிற்காக கொட்டும் மழையில் விநாயகர் கோயிலில் வேண்டுதல்! கோடி ரூபா காரில் வந்த உலக அழகி! அவங்களா இது!
இந்தியாவை சேர்ந்த 6 பெண்கள் மிஸ் வேர்ல்டு பட்டத்தை (Miss World Title) வென்றுள்ளனர். இந்த பட்டத்தை முதல் முறையாக வென்ற இந்திய பெண் ரெயிட்டா ஃபாரியா (Reita Faria) ஆவார். அவர் கடந்த 1966ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டத்தை தட்டி சென்றார்.
அதற்கு பிறகு கடந்த 1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் பச்சனும் (Aishwarya Rai Bachchan), 1997ம் ஆண்டு டயானா ஹைடனும் (Diana Hayden), 1999ம் ஆண்டு யுக்தா முகியும் (Yukta Mookhey) மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றனர். இந்த வரிசையில் கடந்த 2000ம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) இந்த பட்டத்தை தட்டி சென்றார்.

அதற்கு பிறகு சுமார் 17 வருடங்கள் இந்திய பெண்கள் யாராலும் இந்த பட்டத்தை வெல்ல முடியவில்லை. இறுதியில் கடந்த 2017ம் ஆண்டு மனுஷி சில்லார் (Manushi Chhillar) மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். அவருக்கு பிறகு இந்திய பெண்கள் யாரும் இன்னும் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வெல்லவில்லை.
கடைசியாக மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற இந்திய பெண்ணான மனுஷி சில்லார் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. Instant Bollywood இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்த வைரல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவில், மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றில் இருந்து இறங்கி, மனுஷி சில்லார் நடந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால், அவருக்கு உதவியாளர் ஒருவர் குடை பிடித்ததையும் நாம் இந்த வைரல் வீடியோவில் காணலாம்.
மும்பையில் (Mumbai) உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு (Siddhivinayak Temple) மனுஷி சில்லார் வந்த சமயத்தில்தான், இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு வர மனுஷி சில்லார் பயன்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) கார் ஆகும்.
பதிவு எண்ணை வைத்து தேடியதில், இது மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரின், E 220d வேரியண்ட் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட் 81.50 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 1 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் E 220d காரில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 194 பிஹெச்பி பவர் மற்றும் 440 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மனுஷி சில்லார் பயன்படுத்தியது சுமார் 7 ஆண்டுகள் பழைய கார் ஆகும். இது கடந்த 2018ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மனுஷி சில்லாரிடம் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) மற்றும் ரேஞ்ச் ரோவர் (Range Rover) போன்ற கார்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக இந்தியாவின் மற்ற பெரும்பாலான நடிகைகளை போலவே, மனுஷி சில்லாரும், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இதற்கிடையே மனுஷி சில்லார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் மாலிக் (Maalik) என்ற பாலிவுட் திரைப்படம் இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே மும்பை சித்தி விநாயகர் கோயிலில், மனுஷி சில்லார் பிரார்த்தனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Source: @Instant Bollywood via Instagram


Click it and Unblock the Notifications








