மாறன் பிரதர்ஸும், அவர்களது மோட்டார் உலகமும்...!!

By Saravana

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தால், பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் மாறன் பிரதர்ஸ் பற்றிய செய்திதான் இப்போது ஊடகங்களின் ஹாட் டாப்பிக். குறுகிய காலத்தில் அசுரவேக பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழகத்தை மட்டுமின்றி, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர்கள், அதே சொத்துக்களால் இன்று நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

தொலைக்காட்சி, வானொலி, விமான போக்குவரத்து, விளையாட்டு, சினிமா மற்றும் ஊடகத்துறை என அனைத்திலும் பிரம்மாண்டத்தை காட்டி மிரட்டிய மாறன் பிரதர்ஸின் மோட்டார் உலக ஆர்வமும் அவ்வாறே இருக்கிறது. அவர்களின் பொருளாதார செழிப்புக்கு இலக்கணமாக விளங்கும் அவர்களது மோட்டார் வாகன பயன்பாடு குறித்த சிறப்புத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ரகசியமாய்...

ரகசியமாய்...

மாறன் பிரதர்ஸ் பயன்படுத்தும் கார் மற்றும் இதர வாகனங்கள் குறித்த அனைத்தும், இதுவரை ரகசியமான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களை கண்டுபிடிக்க ஒரே வழி இருக்கிறது. அது என்ன என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

பேன்ஸி நம்பர்

பேன்ஸி நம்பர்

மாறன் பிரதர்ஸ் இருவருமே பயன்படுத்தும் கார் மற்றும் வாகனங்கள் 1515 என்ற பதிவெண் கொண்டதாக இருக்கும். அவர்களது குடும்பத்தின் வாகனங்கள் என்று கண்டுபிடிப்பதற்கு இருக்கும் ஒரே வழி இதுதான்.

லம்போ ஸ்போர்ட்ஸ் கார்...

லம்போ ஸ்போர்ட்ஸ் கார்...

பொருளாதாரத்தில் சிறப்பான இடத்தை பெற்ற பின் மாறன் பிரதர்ஸில் மூத்தவரான கலாநிதி மாறன் 'மஞ்சள் வண்ண' லம்போர்கினி மூர்சிலாகோ காரை வாங்கி பயன்படுத்தினார். மஞ்சள் வண்ணத்தை அவர் பெரிதும் விரும்புவதற்கு வேறு காரணமும் இருந்திருக்கலாம்.

 லம்போ விற்பனை

லம்போ விற்பனை

கடந்த 2011ம் ஆண்டு கலாநிதி மாறன் தனது லம்போர்கினி மூர்சிலாகோ காரை கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த முஜீப் ரெஹ்மான் என்ற தொழிலதிபரிடம் விற்றுவிட்டார். காரை வாங்கிய முஜீப் ரெஹ்மான் சவூதி அரேபிய நாட்டில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த கார் TN 07 BY 1515 என்ற பதிவெண் கொண்டது.

 லம்போ மூர்சிலாகோ பற்றி...

லம்போ மூர்சிலாகோ பற்றி...

லம்போர்கினி மூர்சிலாகா கார் மணிக்கு 224 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது. ஈசிஆர் ரோட்டில் இந்த காரை சிலர் படம்பிடித்து யூட்பியூவில் பதிவேற்றியுள்ளனர். இந்த காரில் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 0 - 96 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது இந்த மாடல். சரி, இப்போது எந்த காரை கலாநிதி மாறன் பயன்படுத்துகிறார் என்றுதானே கேட்கிறீர்கள். அடுத்த ஸ்லைடில் விடை.

 இப்போதைய கார்

இப்போதைய கார்

இப்போது கலாநிதி மாறன் பென்ட்லி சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். அலுவலகம் செல்வது உள்ளிட்ட தினசரி பயன்பாட்டுக்கு இந்த காரையே கலாநிதி மாறன் பயன்படுத்துகிறார். சென்னை, எம்ஆர்சி நகரில் இருக்கும் முரசொலி மாறன் டவர்ஸில் இருக்கும் 11வது மாடியில் கலாநிதி மாறன் அலுவலகம் உள்ளது. அந்த தளம் முழுமையும் அவரது அலுவலகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து முன்னாள் மத்திய அமைச்சரான தயாநிதி மாறன் என்ன கார் பயன்படுத்துகிறார் என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 தயாநிதி மாறன் கார்

தயாநிதி மாறன் கார்

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தாக்கல் செய்த சொத்து மதிப்பு விபரத்தில் தன்னிடம் டொயோட்டா ஃபார்ச்சூனர் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த கார் ரூ.13.50 லட்சம் மதிப்பு கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

 சொகுசு கார் பிரியர்

சொகுசு கார் பிரியர்

டொயோட்டா ஃபார்ச்சூனர் இருப்பதாக தயாநிதி மாறன் தெரிவித்திருந்தாலும், பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் கார்களை பயன்படுத்துவதுதற்கு அவருக்கு ஆர்வம் அதிகமாம். அடுத்து மாறன் பிரதர்ஸ் குடும்பத்தினரிடம் சொந்த பயன்பாட்டுக்கான விமானமும் உள்ளது. அதனை பற்றிய சில தகவல்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

தனி விமானம்

தனி விமானம்

கடந்த 2007ம் ஆண்டு ஒரு பம்பார்டியர் விமானத்தை சொந்த பயன்பாட்டுக்காக கலாநிதி மாறன் வாங்கினார். அந்த விமானம் 236.94 கோடி மதிப்பு கொண்டது. ஆனால், அந்த விமானம் வாங்கியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஏன் தெரியுமா?

விதிமீறல்...

விதிமீறல்...

கலாநிதி மாறன் வாங்கிய பம்பார்டியர் விமானம் இறக்குமதி விதிமுறைகளை மீறி வாங்கப்பட்டிருப்பதாக, அப்போது தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா கடுமையாக விமர்சித்திருந்தார். வெறும் 23 நாட்களில் விமானத்தை வாங்குவதற்கான அனுமதியை விதிகளை மீறி அவர்கள் பெற்றதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு திமுக பொருளாளரான மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. அதேகாலக்கட்டத்தில் விமானம் வாங்கியதில் முறைகேடு இருப்பதாக கலாநிதி மாறனுக்கு மத்திய அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது.

கப்சிப்...

கப்சிப்...

சிபிஐ நடத்திய அதிரடி சோதனைகளால் திமுக தரப்பு நெருக்கடியில் இருந்த அந்த நேரத்தில், அமலாக்கப் பிரிவு அனுப்பிய அந்த நோட்டீஸுக்கு கலாநிதி மாறன் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லையாம். உடனடியாக அமலாக்கப் பிரிவிடம் ரூ.60 கோடி அபராதத்தை சன் குழுமம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி கார்

திமுக தலைவர் கருணாநிதி கார்

உதயநிதி ஸ்டாலின் கார் கலெக்ஷன்

உதயநிதி ஸ்டாலின் கார் கலெக்ஷன்

ஹம்மர் தவிர உதயநிதி ஸ்டாலின் வைத்திருக்கும் கார்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Maran Brothers and Their Motor World.
Story first published: Friday, April 3, 2015, 10:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X