லாரி ஓட்டி சம்பாதித்தே 17 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கிய தம்பதி! இவங்க இவ்வளவு சம்பாதிச்சிட்டாங்களா?

சமூக வலைதளங்களில் பிரபலமான செந்தில் ரேவதி தம்பதியினர் லாரி ஓட்டி சம்பாதித்து தற்போது சொந்தமாக ரூ17 லட்சம் மதிப்பிலான மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரை வாங்கியுள்ளார்கள். இது குறித்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. உழைத்து முன்னேறி ஒருவர் வாகனம் வாங்கியது பலரை சந்தோஷப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சமூகவலைதளங்களில் கணவன் மனைவியாக சேர்ந்து வீடியோ வெளியிடுபவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். இப்படியாக பிரபலமான தம்பதி தான் ரேவதி செந்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். அவருக்கு உதவியாக அவரது மனைவி ரேவதியும் வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டு தற்போது அவரும் வாகனம் ஓட்டி வருகிறார். இந்த டிரைவர் கப்பில் இந்தியா முழுவதும் வாகனம் ஓட்டி வருகிறார்கள்.

mariamman senthil revathi thar car

இவர்கள் வாகனம் ஓட்டும்போது எடுக்கப்படும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள். இந்த பிரபலத்தை வைத்து இவர்கள் டிவியில் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் இன்று தம்பதியினர் தற்போது தங்கள் குடும்ப தேவைக்காக மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் ஒன்றை சொந்தமாக வாங்கி உள்ளார்கள்.

பொதுவாக டிரைவர் என்றால் குறைந்த வருமானத்தை ஈட்டக் கூடியவர் என்ற பேச்சு நம் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக கணவனும் மனைவியும் சேர்ந்து எந்த தொழிலை பார்த்தாலும், அதன் தொழிலில் மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த தம்பதியினர் ஒன்றாக சேர்த்து உழைத்து அதிக பணம் வருமானமாக சம்பாதித்து அதன் மூலம் சொந்தமாக கார் வாங்கி உள்ளார்கள்.

mariamman senthil revathi thar car

மஹிந்திரா நிறுவனம் இந்த கார் காரை ஒரு ஆஃப் ரோடு ஸ்டைல் எஸ்யூவி காராக விற்பனை செய்து வருகிறது. இந்த காரை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களும் உள்ளன. பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் எம் ஸ்டாலின் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை டைரக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இன்ஜினாக இருக்கிறது. இது 112 கிலோ வாட் பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் இருக்கிறது அதில் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

mariamman senthil revathi thar car

அடுத்ததாக டீசல் இன்ஜினை பொருத்தவரை 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. முதல் ஆப்ஷனாக 1.5 லிட்டர் எம் ஹார்க் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 87.2 கிலோ வாட் பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 2.2 லிட்டர் எம்ஹாக் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 97 கிலோ வாட் பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஆஃப்-ரோடு ஸ்டைல் கார் என்பதால் இந்த காரின் மிகவும் அவசியம் என்பதற்காக அனைத்தையும் முன்னுருக்கும் அதிகமான டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 11.35 லட்சம் முதல் ரூபாய் 17.60 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. வேரியண்ட் மற்றும் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்து இதன் விலை மாறுபடும். ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த கார் என்பதால் இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொந்தமாக உழைத்து வாகனம் வாங்க வேண்டும் என்பதே பலரது கனவாக இருக்கிறது. ஆனால் பலருக்கும் இந்த கனவு நினைவாவதில்லை. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலமான செந்தில் ரேவதி தம்பதியினர் டிரைவராக இருந்து சம்பாதித்து சொந்தமாக காஸ்ட்லியான ஒரு காரை வாங்கி இருப்பது நிச்சயம் பலரை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2024, 11:04 [IST]
English summary
Mariamman senthil revathi purchase thar car video viral
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X