செல்ல நாயுடன் தன்னந்தனியாக உலகை சுற்றி வரும் இளம்பெண்!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலகை தன்னந்தனியாக சுற்றி வருகிறார். அவரது பயணத்தை பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலகை தன்னந்தனியாக சுற்றி வருகிறார். இதற்காக, வீடு போன்ற வசதிகளுடன் கூடிய மினி வேன் ஒன்றையும் சொந்தமாகவே தயார் செய்துவிட்டார்.

 செல்ல நாயுடன் உலகை தன்னந்தனியாக சுற்றி வரும் இளம்பெண்!!

ஆம், அந்த இளம்பெண்ணின் பெயர் மரினா பைரோ. இத்தாலியில் பிறந்த இவர் தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மரினாவுக்கு திடீரென எழுந்தது. இதற்காக, நல்ல சம்பளத்துடன் கூடிய பணியையும் விட்டுவிட்டார்.

 செல்ல நாயுடன் உலகை தன்னந்தனியாக சுற்றி வரும் இளம்பெண்!!

தன்னிடம் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு உலகை சுற்றி பார்த்துவிடும் பணிகளில் இறங்கினார். முதலாவதாக, பழைய ரெனோ காங்கூ மினி வேன் ஒன்றை வாங்கினார். வாங்கியவுடன், அந்த வேனில் பல மாற்றங்களை செய்தார்.

 செல்ல நாயுடன் உலகை தன்னந்தனியாக சுற்றி வரும் இளம்பெண்!!

அதுவும் யாருடைய உதவியும் இல்லாமல் தானே சொந்தமாக அந்த வேனில் மாற்றங்களை செய்தார். பின் இருக்கைகளை கழற்றிவிட்டு. மரத்தகடுகளுடன் அடிப்பாகத்தை அமைத்தார். அதன் மேல் படுக்கை வசதியை ஏற்படுத்தினார். பல பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனை எல்லாம் சரிசெய்து வேனில் மாற்றங்களை செய்தார்.

 செல்ல நாயுடன் உலகை தன்னந்தனியாக சுற்றி வரும் இளம்பெண்!!

அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் வைப்பதற்கு ஏதுவாக பல சிறிய தடுப்புகள் மற்றும் வசதிகளை சேர்த்தார். சமையல் செய்வதற்காக, சிறிய அடுப்பு ஒன்றும் இந்த வேனில் அமைத்துள்ளார். மேலும், பொழுதுபோக்கு சாதனங்கள் மற்றும் தனது இசைக்கருவிகளையும் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

 செல்ல நாயுடன் உலகை தன்னந்தனியாக சுற்றி வரும் இளம்பெண்!!

உட்புறத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தியுள்ளார். தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, செல்லமாக வளர்ந்து வந்த தனது நாயுடன் பயணத்தை துவங்கிவிட்டார்.

 செல்ல நாயுடன் உலகை தன்னந்தனியாக சுற்றி வரும் இளம்பெண்!!

தனது சுற்றுப் பயண அனுபவத்தை Bored Panda என்ற இணையதளத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது படங்களை பதிவேற்றி வருகிறார்.

 செல்ல நாயுடன் உலகை தன்னந்தனியாக சுற்றி வரும் இளம்பெண்!!

இந்த பயணம் குறித்து அவர் கூறுகையில்," பெண்கள் தங்களது வாழ்க்கையில் விரும்பியதை செய்வதற்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் எனது பயணத்தை துவங்கி இருக்கிறேன்.

 செல்ல நாயுடன் உலகை தன்னந்தனியாக சுற்றி வரும் இளம்பெண்!!

ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 2 முதல் 3 வாரங்கள் தங்கி இருக்க முடிவு செய்து பயணத்தை தொடர்ந்து வருகிறேன். அந்தந்த இடத்தின் கலாச்சாரம், வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்வதற்காக இந்த திட்டம். அங்கு என்னால் முடிந்த சில தொண்டு காரியங்களையும் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

 செல்ல நாயுடன் உலகை தன்னந்தனியாக சுற்றி வரும் இளம்பெண்!!

இந்த ஆண்டு ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்ததிலேயே பிரான்ஸ் நாட்டில் உள்ள ஸான்ரப்ட் சர் லாங்மெர் என்ற ஏரிதான் மிகவும் பிடித்து போய்விட்டது. மிகவும் அமைதியான, பசுமையான பிரதேசமாக அது இருந்தது," என்று கூறியுள்ளார்.

 செல்ல நாயுடன் உலகை தன்னந்தனியாக சுற்றி வரும் இளம்பெண்!!

மரினாவுக்கு அவரது செல்ல நாய் ஓடிதான் இப்போது துணை. அவர் எங்கு சென்றாலும் கூடவே துணைக்கு செல்கிறது. இந்த பயணம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், உந்துசக்தியாகவும் இருக்கும் என்று மரினா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நிச்சயமாக...!!

புதிய ஹோண்டா சிவிக் கார் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் உயர்தர படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 27, 2017, 13:27 [IST]
English summary
Read in Tamil: Marina Piro made a decision to quit her highly paid job so that she can go on a road trip around the world with her rescue dog Odie, a labradoodle.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+