வீட்டுக்கு கட்டில்-சோபாவை செஞ்சு வாங்குவதபோல இந்த மனுஷன் காரை தேவைக்கு ஏற்ப செய்து வாங்கியிருக்காரு!

தன்னுடைய தேவைக்கு ஏற்ப உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான மார்க் ஜுக்கர்பெர்க் இரண்டு போர்ஷே (Porsche) கார்களை கஸ்டமைஸ் செய்து வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நம்மில் பலர் வீட்டுக்கு தேவையான கட்டில், பீரோ மற்றும் ஷோபா உள்ளிட்டவற்றை கஸ்டமைஸ் செய்து வாங்கி இருப்போம். ஆனால், இந்த நபர் கார்களையே பிரத்யேகமாக மாற்றியமைத்து வாங்கி இருக்கின்றார். குறிப்பாக, அவருடைய மனைவிக்கு மினி வேன் போன்ற போர்ஷே காரை வாங்கி இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

மார்க் ஜுக்கர்பெர்க் தனக்கு போர்ஷேவின் 911 ஜிடி3 (Porsche 911 GT3) கார் மாடலையும், தன்னுடைய மனைவி பிரிஸ்கில்லா சேன்-க்கு கேயன்னே டர்போ ஜிடி (Porsche Cayenne GT) கார் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டை வாங்கி அதையே அல்ட்ரா லக்சூரி அம்சங்கள் நிறைறைந்த மினி வேன் (Minivan)ஆக மாற்றி வாங்கிக் கொடுத்து இருக்கின்றார்.

Mark zuckerberg buys two porsche cars one for wife

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரின் குடும்பத்தினரின் தேவைக்கு ஏற்பவே இந்த மினி வேனில் கஸ்டமைஸ் பணிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால் உலக சந்தையிலே விற்பனையில் இல்லாத ஓர் வாகனமாக அது காட்சியளிக்கின்றது. இந்த வாகனத்தில் கஸ்டமைஸ்-இன் கீழ் ஒரு டர்போசார்ஜட் வி8 எஞ்சின் மற்றும் ஸ்லைடிங் வகை டோர் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, கூடுதல் இடத்திற்காக நீட்டிக்கப்பட்ட உடல் அமைப்பும் இந்த காருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது முழுக்க முழுக்க மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரின் மனைவி பிரிஸ்கில்லா சேன் ஆகியோரின் வழிநடத்தலில் டிசைன் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக ஓர் தொழில்நுட்ப ஜாம்பவான் மிக சிறந்த கார் கஸ்டமைஸ் நபராக மார்க் ஜுக்கர்பெர்க் மாறியிருக்கின்றார்.

போர்ஷே கேயன்னே டர்போ ஜிடி மாடலை தழுவியே இந்த மினி வேன் பிரிஸ்கில்லாவிற்காக தயார் செய்யப்பட்டு உள்ளது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இந்த கார்களை வாங்கி இருப்பதை மார்க், தன்னுடைய சமூக வலைதள பதிவின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றார். மார்க் ஜுக்கர்பெர்க் 911 ஜிடி3 காரின் பான்னெட் மீது அமர்ந்தபடியும், அவருடைய மனைவி பிரிஸ்கில்லா கேயன்னே டர்போ ஜிடி மினி வேனுக்கு முன்னாள் சாய்ந்தபடி நிற்கும் படங்களையே அவர் பகிர்ந்திருக்கின்றார்.

போர்ஷே நிறுவனம் மார்க் ஜுக்கர்பெர்க்-இன் மனைவி பிரிஸ்கில்லா கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை கேயன்னே டர்போ ஜிடி மினி வேனில் செய்திருக்கின்றது. குறிப்பாக, இந்த மாற்றத்தை போர்ஷே நிறுவனம் மற்றுமொரு நிறுவனத்துடன் இணைந்தே செய்திருக்கின்றது. வெஸ்ட் கோஸ்ட் கஸ்டம்ஸ் எனப்படும் கார்களை மாடிஃபை செய்யும் நிறுவனத்துடன் இணைந்தே இந்த வேலையை பார்த்திருக்கின்றது.

Mark zuckerberg buys two porsche cars

குடும்பத்துடன் லக்சூரியாக, குறிப்பாக, அதிக இட வசதியுடன் டிராவல் செய்யும் வகையில் அந்த மினி வேன் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே வழக்கமான டோர்கள் அகற்றப்பட்டு, ஸ்லைடிங் வகை டோர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதுபோன்று தனித்துவமான மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் இந்த வாகனத்தின் விலை மிக மிக அதிகமானதாக மாறியிருக்கின்றது.

வழக்கமாக 90 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கே விற்கப்படும் இந்த வாகனம் சிறப்பு கஸ்டமைசேஷனால், அதன் மதிப்பு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்பைக் கொண்டதாக மாறி இருக்கின்றது. இதன் எஞ்சினில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றதா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

வழக்கமான கெயன்னே டர்போ ஜிடி சொகுசு காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சினே இந்த காரிலும் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 650 எச்பி வரை ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

அதேநேரத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் அதிக வேகத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்ட காரை தனக்காக தேர்வு செய்திருக்கின்றார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 3.5 கோடிக்கும் அதிகம் ஆகும். மேலும், இந்த வாகனம் வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட காரையே மார்க் ஜுக்கர்பெர்க் தனக்காக வாங்கி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் நம்பர் 2 பணக்காரராக மார்க் ஜுக்கர்பெர்க் மாறியிருக்கின்றார். இந்த மகிழ்ச்சியான தருணத்திலேயே அவர் தற்போது விலை உயர்ந்த ஆடம்பர கார்களை ஒரே நேரத்தில் தனக்கு ஒன்று மற்றும் தன்னுடைய மனைவிக்கு ஒன்று என அவர் இரண்டு போர்ஷே கார்களை வாங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2024, 20:23 [IST]
English summary
Mark zuckerberg buys two porsche cars custom cayenne gt minivan for priscilla chan
மேலும்... #celebrity cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+