இன்னும் இந்த கார் என்னென்ன வேஷமெல்லாம் போட இருக்குதோ!.. பால் வண்டியாக மாறியிருப்பது என்ன காருனு தெரியுதா?..
ஏழை மற்றும் எளிய மக்களுக்கான கார் என்றால் அது மாருதி ஆல்டோ (Maruti Suzuki Alto)-தான். இது பலரும் அறிந்த ஒன்று. இது அடித்தட்டு மக்களுக்கான கார் என்பது மாறி தற்போது பால் வாகனம் என்கிற புதிய ரோலையும் சுமக்கத் தொடங்கி இருக்கின்றது. ஆமாங்க, ஆல்டோவே தற்போது பால் வண்டியாக மாறி இருக்கின்றது. பஞ்சாப் மாநிலத்திலேயே இந்த விநோத நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. வாகன மாடிஃபிகேஷன் வாயிலாகவே இந்த மாற்றத்தை ஆல்டோ காரில் செய்திருகின்றனர்.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நான்கு பேர் பயணிக்கும் வகையில் இரண்டு வரிசை இருக்கை அமைப்பைக் கொண்டிருந்த காரை தற்போது மாடிஃபிகேஷன் வாயிலாக பிக்-அப் டிரக்காக மாற்றி இருக்கின்றனர். பாலை ஏற்றி செல்லும் பொருட்டே அதன் உரிமையாளர் இவ்வாறு மாடிஃபை செய்திருக்கின்றார்.

பாலை ஏற்றி செல்ல மட்டுமல்ல இன்னும் இதர வேலைகளுக்கும் அவர் இந்த வாகனத்தை பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு பால் கேன்களை அது ஏற்றிச் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஆல்டோவை பால் வண்டியாக மாற்றுவதற்காக, அதாவது, பிக்-அப் டிரக்காக மாற்றுவதற்காக மிகப் பெரிய மாற்றத்தை அதில் செய்திருக்கின்றனர்.
மிக முக்கியமாக பின் பக்கத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றி அமைத்திருக்கின்றனர். மேற்கூரையை வெட்டி எடுத்தது, பின் இருக்கையை அகற்றியது மற்றும் ஆட்டோக்களில் காணப்படுவதை போல சாதாரண டோரை சேர்த்தது உள்ளிட்ட மாற்றங்களையே அவர் செய்திருக்கின்றனர். அத்துடன், சரக்குகளை ஏற்றிச் செல்ல ஏதுவாக இருக்கைகளை அகற்றிய பின்னர் அந்த இடத்தை மாற்று உலோக பேனால் போர்த்தி இருக்கின்றனர்.
இத்துடன், டிரைவர் இருக்கையை குட்டியான அறையை போல மாற்றியிருக்கின்றனர். அத்துடன், அங்கிருந்து பின் பக்கத்தை பார்க்கும் விதமாக சிறிய துளையைப் போட்டு அங்கு கண்ணாடி ஜன்னலையும் அவர்கள் பொருத்தி இருக்கின்றனர். ஆகையால், பக்கவான பிக்-அப் டிரக்காக அந்த ஆல்டோ மாறி இருக்கின்றது.
மிகவும் திறமையான நபரைக் கொண்டு இந்த வாகனம் மாடிஃபைச் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்த மாற்றத்திற்காக மாற்று நிறுவனங்களின் பாகங்கள் சிலவற்றை பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, பின் பக்க டோர் மஹிந்திரா வாகனத்துடையது என்பது தெரிய வந்திருக்கின்றது.
இதைதவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த வாகனத்தில் அதன் உரிமையாளர் செய்யவில்லை. குறிப்பாக எஞ்சின் உள்ளிட்டவை அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் மாருதி சுஸுகி ஆல்டோ கார் இதுபோன்று வேறொரு வாகனமாக மாற்றப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் அது அதன் உண்மையான தோற்றத்தை இழக்கின்ற அளவிற்கு மாடிஃபைச் செய்யப்பட்டு இருக்கின்றது.
அந்தவகையில், சமீபத்தில்கூட இந்தியாவின் வேறொரு பகுதியில் ஆல்டோ கார் இதேபோல் பிக்-அப் டிரக்காக மாற்றப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது பிக்-அப் டிரக் வாகனமாக மாறியிருப்பது ஆல்டோ பழைய தலைமுறை என தெரிகின்றது. பார்ப்பதற்கு முதல் தலைமுறை ஆல்டோவை போல தெரிகின்றது.
ஆகையால், கிட்டதட்ட 20க்கும் அதிகமான வயதுக் கொண்ட ஆல்டோவையே இவ்வாறு மாற்றியிருக்கின்றனர் என யூகிக்க முடிகின்றது. இப்போது சந்தையில் ஆல்டோ விற்பனைக்குக் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக ஆல்டோ கே10 கார் மாடலே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 4.22 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்களிலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக ஆல்டோ உள்ளது. குட்டியான தோற்றம், அதிகம் மைலேஜ் தரும் திறன் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய வாகனத்தையே பிக்-அப் டிரக்காக மாற்றியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








