தமிழகத்தில் 20 ஆட்டோமெட்டிக் டிராக்குகள்! இனி லைசென்ஸ் வாங்குறது ஈஸி கிடையாது!

மாருதி நிறுவனம்தமிழகத்தில் 20 ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் டிராக்குகளை கட்டமைக்க முடிவு செய்யதுள்ளது. இதனால் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான பயிற்சி மற்றும் சோதனையில் ஒரு கட்டமைப்பான மாற்றத்தை நோக்கி செல்ல இந்த டிராக் உருவாக்கப்படும் என தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறவனம் தமிழக அரசுடன் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் தமிழகத்தில் 20 இடங்களில் ஆட்டோமேட்ஷனவ் டிரைவிங் டெஸ்ட் டிராக்குகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கம் முன்னிலையில் தமிழக தலைமை செயலகத்தில் வைத்து ஒப்பந்தம் போடப்பட்டது.

Maruti Automated Driving Test Tracks

இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கூறும்போது :"நமது அரசு தமிழகத்தில் சாலையில் பாதுகாப்பை மேற்படுத்தி வருகிறது. தற்போது மாருதி நிறுவனம் தமிழகத்தில் ஆட்டோமேட்டட் டிரைவிங் லைசென்ஸ் சோதனை டிராக்குகளை உரவாக்குகவது தமிழகத்தில் சாலையில் ஒழுக்கமாக வாகனம் ஓட்டும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்கும். இதனால் சாலை பாதுகாப்பு மேமற்படும்" என கூறினார்.

இந்த டிராக்குகள் பயன்பாட்டிற்கு வரும் போது இதில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும். இது முழுமையாக தானியங்கியாக செயல்படும் என்பதால் இதில் வாகனம் ஓட்டும் போத டிரைவர்கள் தவறு செய்தால் அது சரியாக கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கான லைசென்ஸ் விண்ணப்பம் ரிஜெக்ட் செய்யப்படும்.

Maruti Automated Driving Test Tracks

தமிழகத்தில் இந்த ஆட்டோமேட்டட் சோதனை டிராக்குளை உருவாக்க 20 ஆர்டிஓக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 10 ஆர்டிஓக்களில் இந்த நிதியாண்டிலேயே அதை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதை கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் மாருதி நிறுவனம் செய்து தர முடிவு செய்துள்ளது. இதனால் இந்த நிதியாண்டிற்குள் 10 ஆர்டிஓக்களில் தானியங்கி சோதனை டிராக்குகள் பயன்பாடடிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இது அந்த ஆர்டிஓ அலுவலகத்தில் லைசென்ஸ் பெறும் முறையாக முழுமையாக டிஜிட்டல் மயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிராக்குகளைில் சென்சார் அடிப்படையிலான மானிட்டரிங் நடக்கும். இது போக டிரைவர் எப்படி வாகனம் ஓட்டுகிறார் என்பதை வைத்து டிஜிட்டல் கணக்கீடு செய்யப்படும். இது டிரைவரின் திறன், வாகனத்தின் கண்ட்ரோல், போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பது, பாதுகாப்பு விஷயங்களில் உள்ள கவனம் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும்.

Maruti Automated Driving Test Tracks

இந்த தானியங்கிய சோதனை டிராக்குகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தமிழக்த்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகத்திற்கும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் இனி நேரடியாக பிரேக் இன்ஸ்பெக்டர் அல்லது ஆர்டிஓ கண்காணிப்பில் வாகனம் ஓட்ட வேண்டிய தேவை இருக்காது. இவர்கள் தானியங்கி டிராக்கில் சோதனையில் வெற்றி பெற்றாலே போதும். இது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டது என்பதால் இதி்ல ஏமாற்று வேலை நடக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏகப்பட்ட மக்கள் வாகனம் ஓட்ட தெரியாமலேயே லைசென்ஸ் வைத்திருக்கிறார். இது மிகப்பெரிய முறைகேடாக நடந்து வருகிறது. அதற்கு இந்த தொழிற்நுட்பம் நல்ல தீர்வாக இருக்கும். இதை பலர் வரவேற்றுள்ளனர். இதை மாருதி போன்ற பெரிய நிறுவனங்கள் செய்தால் நிச்சயம் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, October 17, 2025, 9:40 [IST]
English summary
Maruti automated driving test tracks tamil nadu setup plan
மேலும்... #auto news #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X