அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!!

By Azhagar

சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் வாகனங்கள் அவசர நிலையை சந்திக்கும் போது, அதை சாதுர்யமாக சமாளித்து தப்பிப்பது போன்ற பல வைரலான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் உள்ளன.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

இதுபோன்ற வீடியோக்கள் வந்தாலே அவை டிரென்டிக்கும் என்பதை தாண்டி, சாலையில் செல்லும் போது நாமும் விழிப்புடன் செயல்பட உதவும் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்று ஒரு சாலை பரபரப்பு இணையதளம் மற்றும் செய்தி ஊடகங்களில் வைரலை கிளப்பியுள்ளது.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி என்ற மாவட்டத்தின் சகர்காட் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த ஒரு மாருதி பலேனோ கார், அவசர நிலை ஏற்பட்டதன் காரணமாக பறந்து சென்று ஒரு வீட்டின் மேற்கூரையில் தரையிறங்கியது.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

பாதிப்பை சந்தித்துள்ள பலேனோ கார் விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் சகர்காட் சாலையில் வேகமாக வந்துக்கொண்டு இருந்துள்ளது.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

அப்போது, அங்கே வளைவு ஒன்று வர கார் ஓட்டுநர் அதில் காரின் வேகத்தை குறைத்து திருப்ப முயன்றுள்ளார். ஆனால் கார் சாலை தடுப்பை மோதி வானில் பறந்தது.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

கார் பறந்து சென்ற பகுதியில் ஒரு வீடு இருந்ததால், அதன் மேற்கூரையில் தரையிறங்கி அங்கியிருந்த ஒரு கட்டிடத்தில் மோதி மாருதி பலேனோ கார் நின்றது.

சாலையிலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் அந்த வீடு அமைந்துள்ளது. இவ்வளவு அளவுக்கொண்ட தூரத்தையும் ஒரே பாய்ச்சலில் பறந்து வீட்டின் மேற்கூரையில் இறங்கியுள்ளது இந்த பலேனோ கார்.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும், மேலும் காரில் பயணம் செய்வதர்கள் சில காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் மாண்டி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

மேற்கூரை சிறியளவில் இருந்ததால், கார் அங்கியிருந்த கட்டிடத்தில் மோதி நின்றது. இதுவே கொஞ்சம் நீளமாக இருந்திருந்தால் கார் அப்படியே சென்று மேற்கூரையில் இருந்து தரையில் விழுந்திருக்கும்.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே விரைந்து காரிலிருந்த ஓட்டுநரை மீட்டு தரையில் இறக்கிவிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்து வந்தனர்.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

மேற்கூரை கட்டிடத்தில் மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி சற்று சேதமடைந்துள்ளது. மேலும் ஓட்டுநர் சீட் கதவும் திறந்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அதை தவிர காரில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

தரையிலிருந்து 20அடி தூரத்திற்கு பறந்து வீட்டின் மேற்கூரையில் தரையிறங்கிய பின்னும் காரில் பெரிய சேதாராம் ஏற்படவில்லை. தொடர்ந்து கார் பயணியும் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இதனால் பலேனோவின் கட்டமைப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டையிழந்து வீட்டின் மேற்கூரைக்கு பறந்த பலேனோ கார்

டெல்டா வேரியன்டான இந்த மாருதி பலேனோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 83 பிஎச்பி பவர் மற்றும் 115 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Source: Rushlane

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

சமூக ஊடகங்கள் பெற்றிருக்கும் அபரிதமான வளர்ச்சி மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கவும், துரிதமான தகவல் பரிமாற்றத்திற்கும் அச்சாணியாக மாறி இருக்கிறது. அதேவேளையில், இதனை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதும் அதிகரித்து வருகிறது.

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

குறிப்பாக, வாட்ஸ்அப்பில் வரும் பாதியளவு தகவல்கள் முற்றிலும் பொய்யான விஷயத்தை உண்மை போல சித்தரித்து எழுதி பரப்புகின்றனர். பிறருக்கு பயன்படும் என்ற நோக்கில் பலர் இந்த தகவலை உறுதி செய்யாமல் பகிர்ந்து கொள்கின்றனர்.

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

தவறான தகவலை உண்மையென நம்பி பலர் அதனை பின்பற்றும் ஆபத்தும் இருக்கிறது. அதேபோன்று ஒரு செய்தியை வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் காண நேரிட்டது. அதுகுறித்த உண்மை என்ன என்பதை ஆய்வு செய்து இந்த செய்தியை வழங்குகிறோம்.

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

வருமான வரி செலுத்துபவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்தால், அவரது கடைசி மூன்று ஆண்டுகளின் சம்பளத்தின் சராசரி தொகையை போல 10 மடங்கு தொகையை அரசு இழப்பீடாக வழங்குகிறது என்று ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

உதாரணத்திற்கு, மரணமடைந்தவர் கடைசியாக வாங்கிய ஆண்டு சம்பளம் 6 லட்ச ரூபாய் எனில், அதற்கு முந்தைய ஆண்டில் 5 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் 4 லட்ச ரூபாய் என கணக்கிட்டு, இதன் சராசரியான ரூ.5 லட்சத்திற்கு இணையான 10 மடங்கு தொகையை இழப்பீடாக பெற முடியும் என்பதே அந்த பதிவில் தெரிவிக்கப்படும் தகவல்.

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

மேலும், மரணமடைந்தவர் கடைசி மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்தியதற்கான அத்தாட்சி குடும்பத்தினரிடம் இருத்தல் அவசியம். 1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் 166 பிரிவின்படி, இந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

இந்த பதிவு வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வேகமாக பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது அது தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 166 பிரிவின்படி, சாலை விபத்தில் மரணமடைபவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறை குறித்து மட்டுமே விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. ஆனால், அதனை சிலர் தவறான தகவலை பதிவு செய்து பரப்பி இருக்கின்றனர்.

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சாலை விபத்தை ஏற்படுத்தும் வாகனத்தின் உரிமையாளர், அந்த விபத்தில் மரணமடைபவரின் குடும்பத்தினர் மற்றும் நிரந்தர ஊனம் அடைபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

இழப்பீடு எவ்வளவு என்பதை வாகன விபத்து இழப்பீடு குறைதீர் ஆணையம் முடிவு செய்யும் என்று மேற்கண்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதனை சிலர் தவறான தகவலுடன் பதிவிட்டு பரப்புவதுடன், அதனை ஏராளமானோர் பகிர்ந்துகொண்டும் வருகின்றனர்.

வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?

இதுபோன்ற தவறான தகவலை பார்த்தால் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளாதீர். மேலும், இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவலை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே பலருக்கு உதவி செய்யாவிட்டாலும், உபகாரம் செய்ததாக அமையும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Maruti Baleno Crash Landed On Terrace. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X