மாருதி காரா இது? சோப்பு டாப்பான்னு கிண்டல் பண்ணவங்க எல்லாம் வாயடைச்சு போயிடுவாங்க!
உடைந்து சுக்குநூறாக மாறிய பிறகும் மாருதி பலேனோ கார் ஒன்று அசால்டாக ஓடிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பலரால் பகிரப்படுகிறது. மாருதி நிறுவனம் எவ்வளவு நம்பதன்மையான காரை தயாரிக்கிறது என்பது இதன் மூலம் மக்களுக்கு தெரிய வருகிறது? என்ன நடந்தது? விரிவான காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உறுதியான கார்கள் என்றால் நம் மனதில் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் தான் முதலில் மனதில் வரும். அதே நேரம் மாருதி நிறுவனத்தின் கார்கள் குறைந்த எடை கொண்ட பாடி பேனல்கள் இருப்பதால் அதிக உறுதி தன்மையுடன் இருக்காது என்ற எண்ணம் பலரது மனதில் இருக்கிறது. அதை பொய்யாக்கும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் ஒரு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு ஏராளமான வாகனங்கள் சேதமாகின. வெள்ளத்தில் சேதமாகிய வாகனங்களை மீட்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதில் டிரித்தான் வேலி பகுதியில் சமீபத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாருதி பலேனோ கார் மீட்கப்பட்டது வெள்ளத்தில் அதிகமாக இந்த கார் சேதமாகியிருந்தாலும் இந்த கார் இன்னும் ரன்னிங் கண்டிஷனில் இருந்தது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வெள்ளத்தில் இந்த மாருதி பலேனோ கார் அடித்து செல்லப்பட்டபோது இந்த கார் பலத்த சேதமடைந்தது. இந்த கார் ரூஃப் பகுதி பலத்த சேதமடைந்தது. காரின் ஜன்னல் காணமலேயே போனது. பானட் பகுதியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மற்ற பாங்கள் எல்லாம் இருந்தன. காரை பார்க்கும் போது உருக்குலைந்தது போனது போல இருந்தது.
ஆனால் இவ்வளவு சேதத்திற்கு பிறகும் கார் அசல்டாக ஓடியது. இந்த காரை மீட்டு டோ வாகனம் அல்லதுமீட்பு வாகனம் மூலம் தான் கொண்டு வர முடியும் என பலர் எதிர்பார்த்த நிலையில் கார் ஸ்டார்ட்டாகி ஓடியது.இதனால் சேதமடைந்த காரை ஓட்டியே வந்துள்ளது. இந்த கார் ஓட்டப்பட்டு வரும் போது எடுக்கப்பட்டவீடியோவை தான் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்தவர். மாருதி பலேனோ கார் கடும் வெள்ளத்தில் சிக்கி தப்பித்துள்ளது. கார் முழுவதும் சேரும் சகதியுமாக இருந்து சேர்ந்தமடைந்தும் காரின் தொடர்ந்து செயல்படுகிறது. நாம் வெளிநாட்டு பிராண்டுகளை தான் ஆச்சரியப்பட்டு பார்க்கிறேம். ஆனால் இந்திய கார் கடுமையான சூழ்நிலைகளில் தாக்குபிடித்து தனது உறுதியை இழக்கமால் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுவாக மாருதி கார்கள் விபத்துகளின் போது அப்பளம் போல நொருங்கிவிடும் என்ற பேச்சு பலர் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக பலேனோ கார் ஆரம்ப கட்டத்தில் மிக குறைவான பாதுகாப்பு ரேட்டிங் பெற்றது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் தற்போது அதன் பாதுகாப்பு அம்சங்களை அந்நிறுவனம் அதிகரித்துள்ளது. இது எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி தற்போது வாகனத்தின் உறுதி தன்மையில் கவனம் செலுத்த துவங்கிவிட்டது. இதனால் வாகனங்கள் தரமாக தயாராக துவங்கிவிட்டன. இந்த வீடியோ அதற்கு ஒரு பெரும் உதாரணமாக மாறிவிட்டது. இனி மாருதியும் பாதுகாப்பு மற்றும் உறதியில் டாடா, மஹிந்திரா தயாரிப்புகளுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








