இனி மாருதியைக் குறை சொல்லாதீங்க... தரமான பில்டு குவாலிட்டியால் 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய பிரெஸ்ஸா...
மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியது. அதில் அந்த காரின் பில்டு தரத்தால் அந்த காரில் பயணித்த 4 பேரும் ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் தப்பினர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

இந்தியாவில் அதிகமாக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதிதான். இந்நிறுவனத்தின் கார்களை இந்திய மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்தியாவில் உள்ளச் சாலைகளில் இந்த கார்கள் தான் அதிகம் ஓடுகின்றன. இதற்கு முக்கியமான காரணம் இதன் ஸ்டைல் மற்றும் விலை. இந்தியர்களின் பொருளாதாரச் சிக்கல்களை உணர்ந்து அதற்குத் தகுந்த விலையில் அவர்களுக்கு தேவைப்படும் அம்சங்களுடன் கார்களை வெளியிடுகிறது. மாருதி நிறுவனம்.

என்னதான் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்தாலும் மாருதி நிறுவனத்தின் மீது ஒரு தீராத விமர்சனம் ஒன்று இருந்து வருகிறது. அந்நிறுவனத்தின் கார்கள் தரம் குறைந்ததாக இருக்கிறது. அந்த நிறுவனத்தின் கார்கள் விபத்தில் சிக்கினால் அப்பளம் போல நொறுங்கிவிடுகிறது. உள்ளிட்ட ஏகப்பட்ட விமர்சனங்கள் இந்நிறுவனத்தின் மீது இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் பிரெஸ்ஸா என்ற காரை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த பிரெஸ்ஸா காரும் மக்கள் விரும்பி வாங்கி வருகிறனர். இதன் ஸ்டைல் மற்றும் விலை மட்டும் இதற்கு காரணமல்ல. புதிய தலைமுறை பிரெஸ்ஸா கார் க்ராஷ் டெஸ்டிலும் சிறப்பான ரேங்கிங்கை பெற்றுள்ளது.

GNCAP ரேட்டிங்கில் இந்த கார் 4 ஸ்டார்களை பெற்றுள்ளது. இது மட்டுமல்ல இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள பல தொழிற்நுட்ப அம்சங்கள் காரின் கட்டிங் எட்ஜ் டெக்னாலஜியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மூலம் மாருதி நிறுவனம் தங்களுக்கும் தரமான கார்களை தயாரிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. இருந்தாலும் மாருதி நிறுவனத்திற்குத் தரமற்ற கார்கள் தயாரிக்கும் நிறுவனம் என்ற அவப்பெயர் போகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வட இந்தியாவில் இந்தி மொழியில் பிரபலமான யூடியூபரான பிரத்தீக் சிங் என்பவர் தனது யூடியூப் சேனலில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் புதிய மாருதி பிரெஸ்ஸா கார் ஒரு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்துப் பேசியுள்ளார். அதில் அவர் சொன்ன விஷயங்களைப் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் சமீபத்தில் ஒரு பிரெஸ்ஸா காரில் 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சிம்லா - சோலன் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தனர் கார் சோலன் நகருக்கு வெளியே 7 கி.மீ தொலைவில் வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் 4 வழிச்சாலைக்காக ரோடு போடும் வேலை நடந்து வருவதால் அப்பகுதியில் சாலை கரடு முரடாக இருந்துள்ளது.

கார் இந்த ரோட்டில் 50 கி.மை வேகத்தில் வந்து கொண்டிருந்தது. ரோடு போடும் பணி நடந்ததால் அப்பகுதி முழுவதும் தூசு படர்ந்து எதிரில் வரும் வாகனம் கூட தெரியாத நிலை இருந்தது. இந்த தூசுக்குள் கார் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக எதிரே லாரி ஒன்று வந்துவிட்டது. தூசு அதிகமாக இருந்ததால் லாரி அருகில் வந்த பின்புதான் கார் ஓட்டுநருக்குத் தெரிந்துள்ளது.

ஆனால் கார் ஓட்டுநர் சுதாரிப்பதற்கும் கார் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பிரெஸ்ஸா காரின் முகப்பு பகுதியில் பானட், ரேடியேட்டர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த சேதமடைந்தன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த விபத்தில் பிரெஸ்ஸா காரில் இருந்த 4 பேருக்கும் ஒரு சிறு கீறல் கூட ஏற்படவில்லை.

காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் இம்பேக்ட் காருக்குள் செல்லவில்லை. இதனால் இருக்கும் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.விபத்தில் சிக்கிய காரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. GNCAP ரேட்டிங்கில் 4 ஸ்டாரை இந்த கார் வாங்கியது தற்போது இந்த குடும்பத்தைக் காப்பாற்றியுள்ளது. பொதுவாக டாடா நிறுவனத்தின் கார்கள் தான் பாதுகாப்பானது என மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. ஆனால் அதற்கு போட்டி கொடுக்கும் வகையில் மாருதி நிறுவனமும் தனது கார்களின் பில்டு குவாலிட்டி தரத்தை அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நாம் எதிரே உள்ளச் சாலையில் எதிரில் வரும் வாகனம் தெரியாத அளவிற்கு விசிபிளிட்டி குறைவாக இருந்தால் உடனடியாக காரின் வேகத்தை வெகுவாகக் குறைத்து முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிக மெதுவாக சாலையைக் கடக்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.
குறிப்பிட்ட இந்த விபத்திலும் 50 கி.மீ வேகத்தில் சென்றதால் தான் இது பெரும் விபத்தில் முடிந்துள்ளது. இதுவே கார் குறைவான வேகத்தில் சென்றிருந்தால் இந்த விபத்தையே தவிர்த்திருக்க முடியும். நீங்கள் இதே போல ஒரு குறைவான விசிபிளிட்டி கொண்ட ஒரு இடத்தில் பயணம் செய்தால் குறைவான வேகத்தில் செல்லுங்கள், சாலை விதிகளைப் பின்பற்றி பயணம் செய்யுங்கள்,முக்கியமான கார்களில் செல்லும் போது சீட்பெல்ட் அணிந்து செல்லுங்கள்


Click it and Unblock the Notifications








