எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது! புதுசா கார் வாங்கி ஒரு நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள இப்டியாகிடுச்சே!
புதிதாக கார் வாங்கிய ஒருவர் காரை டெலிவரி எடுத்துவிட்டு ஷோரூம் வெளியே வந்தவுடன் கார் விபத்தில் சிக்கிய சோகமான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது? இதற்கு யார் காரணம்? நீங்கள் கார் வாங்கும் போது இப்படியான விபத்துக்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சமீபத்திய சமூக வலைதளங்களில் கார் ஷோரூமை விட்டு வெளியே வருவதற்குள் விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் ஆரம்பத்தில் ஒரு குடும்பத்தினர் புதிதாக மாருதி நிறுவனத்தின் செலிரியோ என்ற காரை ஷோரூமிற்கு சென்று வாங்கியுள்ளார்கள். அந்த காரை டெலிவரி எடுப்பதற்காக அவர்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

இந்த கொண்டாட்டமான தருணத்தில் அந்த குடும்பத்தினர் அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் காரின் அருகே நின்று கொண்டிருந்தார்கள். மாருதி நிறுவனத்தின் ஷோரூம் ஊழியர் ஒருவர் அவர்களுக்கு காரின் சாவியை முறைப்படி ஒப்படைத்தார். இதன்படி காரின் உரிமம் ஷோரூமில் இருந்து வாடிக்கையாளருக்கு சென்று விட்டது. மேலும் இந்த தருணத்தை அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டாடினார்கள். பொதுவாக இப்படியாக கார் வாங்கும்போது புகைப்படம் எடுப்பது சாதாரண விஷயம் தான்.
இந்நிலையில் காரை வாங்கியவுடன் காருக்குள் அதன் உரிமையாளர் ஏறி அமர்ந்து காரை ஓட்டுகிறார். இது குறித்து வெளியான வீடியோவில் ஒரு பெண் ஒருவர் தான் காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பது தெரிகிறது. காரில் ஏறி அமர்ந்ததும் அவர் காரை நகர்த்த முயற்சி செய்தார். அப்பொழுது கார் வேகமாக சென்றது. கார் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்து ஷோரூமை விட்டு வெளியே சென்று எதிரில் இருந்த புதருக்குள் கவிழ்ந்தது.

துரதிஷ்டவசமாக புதிதாக கார் வாங்கியவுடன் ஷோரூமை விட்டு வெளியே வந்ததும் கார் விபத்தில் சிக்கி உள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிகிறது. கார் விபத்தில் சிக்கியதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டனர். சம்பவத்தில் உள்ள வீடியோவை பார்க்கும் போது காரை ஓட்டிய பெண் டிரைவிங் அனுபவம் இல்லாதவர் என தெரிகிறது.
வேகமாக செல்லும்போது அவருக்கு பிரேக் பிடிக்க நேரம் இருந்தும் அவர் பிரேக் பிடிக்காமல் இருந்துள்ளார். வேகமாக செல்லும்போது அவர் பதற்றத்தில் இருந்துள்ளார் முறையான டிரைவிங் அனுபவம் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அருகில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்சனையை விசாரித்தனர்.

இந்த விபத்தில் காரின் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக காரை எடுத்து அதை ரிப்பேர் செய்வதற்காக ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றனர். இதனால் இந்த காரின் முன் பகுதியில் உள்ள பம்பர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் சரி செய்தால் தான் இனி வாகனத்தை ஓட்ட முடியும் என்ற நிலை மாறியது.
இதற்கெல்லாம் முக்கியமான காரணம் அனுபவம் இல்லாத டிரைவரை வைத்து வாகனத்தை இயக்கியதுதான். அதிர்ஷ்டவசமாக கார் ஷோரூமில் இருந்து வெளியே வேகமாக வரும்போது சாலையில் யாரும் நடந்து செல்லவில்லை என்பதால் அவர்கள் மீது கார் மோதவில்லை. இந்த சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக என்ன நடந்தது என அந்த காரின் டீலர்ஷிப்பில் இருந்து எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதுபோன்று நீங்கள் கார் வாங்கும் போது விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். காரில் நீங்கள் ஏறியவுடன் காரில் உள்ள கண்ட்ரோல்களில் எல்லாம் எது எது எங்கு இருக்கிறது என பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு கார் ஓட்ட தெரியவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் முதலில் காரை எடுக்கக் கூடாது.
காரை டெலிவரி எடுக்கும் முன் அந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். காரை எடுக்க முயற்சி செய்யும்போது மெதுவாக எடுக்க வேண்டும். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக ஷோரூம் ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதிக டிராபிக் இல்லாத சாலையில் வாகனத்தை ஓட்ட வேண்டும். இதை எல்லாம் பின்பற்றினாலே விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வாங்கும் போது பெரும்பாலானோர் நீங்கள் வாங்கும் குறிப்பிட்ட காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது இல்லை. கார் ஓட்டு தெரியுமா தெரியாதா என்பதை கூட சரியாக தெரிந்து கொள்ளாமல் நேரடியாக புதிய காரில் ஏறி ஓட்ட முயற்சி செய்கிறார்கள். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக புதிய வாகனம் மிக கவனமாக இயக்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications









