சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

Written By:

மாருதி கார்களில் மிகவும் ஸ்திரமான விற்பனையை பதிவு செய்து வரும் மாடல் மாருதி டிசையர். செடான் ரக கார்களில் விற்பனையில் முதன்மை வகிக்கும் மாருதி டிசையர் காருக்கு போட்டியாக பல புதிய மாடல்கள் களம் இறங்கின.

ஆனால், மாருதி டிசையர் காரின் விற்பனையை அசைக்க முடியாத நிலை இருக்கிறது. இந்த நிலையில், மாருதி டிசையர் கார் இதுவரை சாதித்த விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

மாருதி ஸ்விஃப்ட் காரின் செடான் வெர்ஷன்தான் மாருதி டிசையர். 2005ம் ஆண்டு மாருதி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து, மாருதி டிசையர் கார் கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

அறிமுகம் செய்யப்பட்டபோது இதன் டிசைன் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஸ்விஃப்ட் காரில் பூட் ரூம் வெல்டிங் செய்யப்பட்டது போன்று இருக்கிறது என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், அறிமுகம் செய்யப்பட்ட முதல் 19 மாதங்களில் ஒரு லட்சம் டிசையர் கார்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை கடந்தது. அடுத்த 12 மாதங்களில் அடுத்து ஒரு லட்சம் டிசையர் கார்கள் விற்பனையாகி சாதனை படைத்தது.

Image Source: Wikipedia

சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

2012ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் டிசையர் கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் அறிமுகமானது. காம்பேக்ட் செடான் என்ற ரகத்தில் அறிமுகமான புதிய மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரின் பின்புறம் கத்தரி போட்டது போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், தொடர்ந்து விற்பனையில் கலக்கியது.

சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

2013ம் ஆண்டு ஜனவரியில் 5 லட்சம் டிசையர் கார்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்தது. 2104ம் ஆண்டு ஜனவரியில் 7 லட்சம் கார்கள் என்ற அடுத்த சாதனையையும் புரிந்தது.

சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சிறிய மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வண்ணங்கள், க்ரோம் க்ரில் அமைபப்பு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து, விற்பனை தொடர்ந்து பல புதிய சாதனை எண்ணிக்கைகளை கடந்தது.

சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு மில்லியன் விற்பனையை கடந்து புதிய சாதனை புரிந்தது மாருதி டிசையர் கார். எந்தவொரு செடான் காரும் நினைத்து பார்த்திராத அளவில் மாருதி டிசையர் காரின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது.

சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

2016ம் ஆண்டு மாருதி டிசையர் காரின் டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக புதிய மாருதி டிசையர் கார் அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

கடந்த மூன்று ஆண்டுகளாக விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 செடான் கார் மாடல் என்ற பெருமை மாருதி டிசையருக்கு உண்டு. இதுவரை 13.81 லட்சம் மாருதி டிசையர் கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு 60,000 டிசையர் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன.

சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் போன்றே, புதிய மாருதி டிசையர் காரின் வடிவமைப்பு ஒத்திருக்கிறது. நவீன வசதிகள் அதிகம் சேர்க்கப்பட்டு, பாதுகாப்பு அம்சங்களிலும் சிறந்த மாடலாக வருகை தர இருக்கிறது.

சாதனை நாயகன் மாருதி டிசையர் கார் கடந்து வந்த பாதை!

சில தினங்களுக்கு முன் அறிமுகமான புதிய தலைமுறை மாருதி டிசையர் காருக்கு மாருதி டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.11,000 முன்பணத்துடன் இந்த காருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு அதிகம் இருப்பதால் காத்திருப்பு காலமும் வெகுவாக உயர்ந்து வருவதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: NDTV Auto

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Maruti Dzire Car And Its Successful Journey.
Story first published: Thursday, April 27, 2017, 12:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark