டோல்கேட்டுல நிக்கவே பயமா இருக்கு.. டாடா தயாரிப்புகூட இல்ல.. உசுர கம்பீரமா நின்னு காப்பாத்தியிருக்கு இந்த காரு!
பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்த கார் மாடல் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இன் புதிய தலைமுறை டிசையர் (Dzire). பாதுகாப்பு என்றால் என்ன என்று கேட்கக் கூடிய கார்களே மாருதியின் தயாரிப்புகள் என பலராலும் கூறப்பட்டு வந்தநிலையில், அனைவரின் வாயையும் அடைக்கச் செய்கின்ற வகையில் புதிய தலைமுறை டிசையர் குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் ஐந்து ஸ்டார்களை அசால்டாக தட்டிச் சென்றது.
ஆகையால், இதன் மதிப்பு தற்போது சந்தையில் பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய கார் மாடலே தற்போது விபத்தில் சிக்கி சின்னா-பின்னமாகி இருக்கின்றது. டோல்கேட்டில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக காத்திருந்தபோதே அது விபத்தில் சிக்கி இருக்கின்றது. இது ஓர் அரிய வகை விபத்து சம்பவம் ஆகும்.

விபத்தின் காட்சிகளை வைத்து பார்க்கையில் மாருதி சுஸுகி டிசையர் டோல்கேட்டில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நின்றுக் கொண்டிருந்ததும், அப்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஒன்று இந்த வாகனங்கள் மீது வேகமாக வந்து மோதியிருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இவ்வாறே இந்த விபத்து சம்பவமானது டோல்கேட்டில் அரங்கேறி இருக்கின்றது.
விபத்தின் காரணமாக டிசையர் காரின் முன், பின் மற்றும் பக்கவாட்டு பகுதி என அனைத்தும் சேதமுற்றிருக்கின்றது. மேலும், இது சமீபத்திலேயே டெலிவரி எடுக்கப்பட்ட கார் என்றும் தெரிகின்றது. காரில் பதிவெண்கூட இடம் பெறாத நிலையை நம்மால் பார்க்க முடிகின்றது. மேலும், அதில் ஒட்டப்பட்டு இருக்கும் ரிப்பன்களும்கூட அகற்றப்படாமல் புத்தம் புதியதாகக் காட்சியளிக்கின்றது.
இந்த நிலையிலேயே அந்த கார் விபத்தில் சிக்கி பேரிழப்பைச் சந்தித்து இருக்கின்றது. ஆனால், இந்த விபத்தினால் யாருக்கும் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிகின்றது. குறிப்பாக, மாருதி சுஸுகி டிசையர் காரில் பயணித்தவர்களுக்கு சிறிதும் காயம் ஏற்படவில்லை சம்பவத்தை நேரில் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
இதன் வாயிலாக தான் ஓர் உண்மையான பாதுகாப்புமிக்க கார் என்பதை டிசையர் நிரூபித்திருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த கார் அதிக பாதுகாப்பானதாக இருக்கின்றதே, அதன் விலையும் அதிகமானதாக இருக்குமோ என நினைத்துக் கொள்ள வேண்டாம். இதன் விலை மிக மிக குறைவே ஆகும்.
ரூ. 6.79 லட்சம் என்கிற மிக மிக குறைவான விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 10.14 லட்சம் மட்டுமே ஆகும். இத்தகைய மலிவு விலையிலேயே அதிக பாதுகாப்பான பயணத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது மாருதி சுஸுகி டிசையர்.
இது மைலேஜ் தருவதிலும் மிக சிறந்த காராக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் பெட்ரோல் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 24.79 கிமீ முதல் 25.71 கிமீ வரையில் மைலேஜ் தரும். அதேவேளையில், இதன் சிஎன்ஜி ஆப்ஷன் கிலோ ஒன்றிற்கே 33 கிமீ வரையில் மைலேஜ் தரும்.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் ஒரே மோட்டார் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. அந்தவகையில், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 80 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் மோட்டாருடன் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லக்னோவிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த சம்பவத்தால் இனி ஒவ்வொரு முறையும் டோல்கேட்டுகளில் பயந்துக் கொண்டே நிற்கக் கூடிய சூழல் உருவாகி இருக்கின்றது. அதேவேளையில், இந்த விபத்தின் வாயிலாக மாருதி சுஸுகி டிசையர் நிஜ வாழ்க்கையிலும் அதிகம் பாதுகாப்பான கார் என்பதே நமக்கு தெரிய வந்திருக்கின்றது. டாடா கார் அல்லாத ஓர் தயாரிப்பு இவ்வளவு பாதுகாப்பை வழங்கி இருப்பது சேஃப்டியை அதிகம் விரும்புபவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









