அரிய வகை நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட மாருதி ஈகோ.. லம்போர்கினி கார்களுக்கு டஃப் கொடுக்குற அளவிற்கு அழகாயிருச்சு!

இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஈகோ (Maruti Suzuki Eeco) இருக்கின்றது. இது ஓர் மலிவு விலை கார் மாடலும் கூட. ஆம்னி இருந்த இடத்தை பூர்த்தி செய்யும் விதமாக இப்போது மாருதியிடம் விற்பனையில் உள்ள அதிக இருக்கைகள் கொண்ட மலிவு விலை கார் மாடலாக ஈகோ இருக்கின்றது.

ரூ. 5.27 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த வாகனம் தனி நபர் பயன்பாட்டில் மட்டுமல்ல சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனமாகவும், அவசர காலத்தில் உதவும் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

Maruti eeco modified

ஆம்னி-யும் இதைபோலவே பன்முக அவதாரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், ஆம்னி இல்லாத இடத்தை இந்தியாவில் மிக சிறப்பாகவ ஈகோ பூர்த்தி செய்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. இத்தகைய வாகனத்தையே இந்திய இளைஞர்கள் சிலர் மிகவும் கவர்ச்சிகரமான வண்ணத்திற்கு அப்கிரேட் செய்திருக்கின்றனர்.

இந்த விநோத வண்ணத்தில் மாருதி ஈகோவை இந்தியாவில் வேறு எந்த மூலையிலும் பார்க்க முடியாது. டெல்லியைச் சேர்ந்த இளைஞர்களே ஈகோவை புதிய நிறத்திற்கு மாற்றி இருக்கின்றனர். மாற்றப்பட்டு இருக்கும் இந்த ஈகோ 2016 மாடல் ஆகும். இந்த காருக்கு பல விதமான நிறத்தை பிரதிபலிக்கும் மல்டி கலர் வசதிக் கொண்ட பெயிண்டை அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

Maruti eeco modified rear

அது வெளிச்சத்திற்கு ஏற்ப கருப்பு, பச்சை, ஊதா மற்றும் நீலம் என பல நிறங்களைப் பிரதிபலிக்கும். இத்தகைய விநோத ஷேடில் எந்த காரையும் நாட்டில் பார்க்க முடியாது என்பதே உண்மை ஆகும். இத்தகைய சூப்பரான ஷேடிலேயே ஈகோ அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர சில மாற்றங்களும் இந்த காரில் செய்யப்பட்டு உள்ளன.

அந்தவகையில், இதன் முழு லைட் செட்-அப்பும் மாற்றப்பட்டு இருக்கின்றது. முகப்பு பகுதியில் எல்இடி லைட்டுகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. புரஜெக்டர் வகை லைட்டே சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி லைட்டும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் காரின் பின் பக்க லைட்டும் மாற்றப்பட்டு இருக்கின்றது.

மாருதி ஈகோவிற்கான பின் பக்க லைட்டுகள் கிடைக்க காரணத்தினால், இளைஞர்கள் லைட்டை கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த கலர் மாற்றத்துடன் சேர்த்து மேலும் சில அலங்கார வேலைகளையும் அவர் செய்திருக்கின்றார். அந்தவகையில், 13 அங்குல வீல்களுக்கு பதிலாக 17 அங்குல வீல்களை அவர் சேர்த்து இருக்கின்றார்.

இந்த வீல் ஆஃப்டர் மார்க்கெட் வீல் ஆகும். இதைத் தொடர்ந்து காரின் உட்பக்கமும் முற்றிலுமாக மாற்றப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக ரெட் ஷேட் காரின் உட்பக்கத்திற்கு சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, விண்ட் ஸ்கிரீன், அதிக சத்தத்தை வெளியேற்றும் ஹாரன் (இது தடை செய்யப்பட்ட அம்சம் ஆகும்), இருக்கையின் லெதர்கள், கியரின் கைப் பிடி என அனைத்தம் மாற்றப்பட்டு இருக்கின்றன.

ஆகையால், மாருதி சுஸுகி ஈகோ வெளிப்புறத்தில் மட்டுமல்ல உட்பக்கத்திலும் முழுமையாக மாறி இருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு ஆகியது என்பது தெரியவில்லை. இருப்பினும், நிச்சயம் 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாவது குறைந்தபட்சம் இந்த மாற்றத்திற்கு அவர்கள் செலவு செய்திருப்பார்கள் என யூகிக்க முடிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்ற வாகன மாடிஃபிகேஷன் செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், ஆர்டிஓ-வில் இதை பதிவு செய்துக் கொண்டால், தாராளமாக சாலையில் வைத்து இந்த மாதிரியான கார்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அவ்வளவு எளிதில் மாடிஃபிகேஷன் வாகனங்களுக்கான பதிவை பெற முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இந்த ஈகோ விலை உயர்ந்த கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாடிஃபிகேஷனால் மாறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 28, 2023, 5:00 [IST]
English summary
Maruti eeco modified here is video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X