பறக்கும் காரை தயாரிக்கப் போகும் மாருதி! எதிர்காலத்துல இது தான் செம கெத்தாக போகுது!

மாருதி நிறுவனம் தற்போது கார்களை மட்டுமே தயாரித்து வரும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் மற்ற ரக வாகனங்களையும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பறக்கும் டுரோன்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த ரக வாகனங்கள் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது கார்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் நிலையில் எதிர்காலத்தில் பறக்கும் கார்கள் அதிகம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் எதிர்காலத்தில் மாருதி நிறுவனமும் பறக்கும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுவருகிறது.

Maruti Flying Car

இந்த நிறுவனம் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது கார்கள் மட்டும் தயாரிக்கப்படும் என ஒப்பந்தம் செய்துள்ளதால் அதில் மாற்றத்தை செய்ய சமீபத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்காக முதலீட்டாளர்களிடம் ஒப்பந்தம் பெறபட்டது. பங்கு சந்தையிலும் இந்த மாற்றத்திற்காக விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 28ம் தேதி முதலீட்டாளர்கள் இந்த மாற்றத்திற்கு கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து மாருதி நிறுவனம் டுரோன் மற்றும் ஆளில்லாமல் பறக்கும் விமானங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் புதிய தொழிற்நுட்பம், புரோபல்ஷன் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டங்களை மாரதி நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Flying Car

இதை வைத்து அந்நிறுவனம் மொபிலிட்டி சேவைகளை துவங்கும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் வாகனம் லீஸ், சப்ஸ்கிரிப்ஷன், பகிர்ந்து பயன்படுத்துவது, பயன்படுத்த கார்களின் விற்பனை, இவி சார்ஜிங் கட்டுமானம், ஹைட்ரஜன் மற்றும் பயோ கேஸ் விற்பனை, கார்பன் கிரெடிட் மானிட்டைசேஷன் உள்ளிட்ட பல விஷங்களை அந்நிறுவனத்தால் செய்ய முடியும்.

தற்போது பறக்கும் கார்களுக்கான திட்டம், ஆய்வு, அதற்கான பொருட்களை வாங்குவது, தேவைப்படும் மூலப்பொருட்கள், அதை சப்ளை செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாருதி நிறுவனம் வருங்காலத்தில் கார்கள் மட்டுமல்லாமல் பறக்கும் வாகனங்களையும் இந்தியாவில் உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.

Maruti Flying Car

ஏற்கனவே சர்வதேச அளவில் பல தனியார் நிறுவனங்கள் பறக்கும் கார்களை தயாரித்துவிட்டனர். ஆனால் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. முக்கியமாக அரசு அதற்காக சில சட்ட வரையறைகளை கட்டமைக்க வேண்டியது உள்ளது. அதை விரைவில் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: துபாயில் தான் முதல் பறக்கும் கார் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் பறக்கும் கார்கள் நிச்சயம் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம் அதற்காக தான் தற்போதே மாருதி நிறுவனம் தயாராகி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 31, 2025, 19:05 [IST]
English summary
Maruti flying car drones ev expansion moa update
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X