இனி ரயில்கள் மாருதி ஃபேக்டரிக்கு உள்ளேயே போகும்.. இந்தியாவின் முதல் இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்து தொடக்கம்!

இந்தியாவின் முதல் இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்து (In-Plant Train Transport)தை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கின்றார். இதனால், இனி ரயில்கள் மாருதி சுஸுகி (Maruti Suzuki)யின் ஃபேக்டரிக்கு உள்ளேயே செல்லும் நிலை உருவாகி இருக்கின்றது. நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டு இருக்கும் இந்த இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்து பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க, விரிவான பதிவிற்குள் போகலாம்.

பிரதமர் நாட்டின் முதல் இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்திருக்கின்றார். மாருதி சுஸுகியே இந்த வசதியைப் பெற்றிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் குஜராத் மாநிலத்தில் உள்ள மாருது சுஸுகிக்கு சொந்தமான ஆலையே இந்த இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்து வசதியைப் பெற்றிருக்கின்றது.

Maruti suzuki train plant

ஆகையால், இனி ரயில்கள் அந்த ஆலைக்கு உள்ளேயே சென்று வரும் சூழல் உருவாகி இருக்கின்றது. இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்தா?.. அப்படினா என்ன என்கிற சந்தேகம், கேள்வியும் உங்களுக்கு கட்டாயம் எழும்பியிருக்கக் கூடும். அதற்கான பதில் இதோ, இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்து என்பது ரயில்கள் ஆலைக்கு உள்ளேயே சென்று வருவதுதான் அது.

ரயில் என்ற உடன் பயணிகள் போக்குவரத்து ரயில் என நினைத்துக் கொள்ள வேண்டாம். மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களை வெளியூர்களுக்கு ஏற்றிச் செல்லும் கூட்ஸ் வகை ரயில்களே அது ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் அதன் தயாரிப்புகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்க பெரும்பாலும் டிரக்குகளையே பயன்படுத்தி வருகின்றது.

Train in maruti suzuki plant

இதனால், அதிக செலவு நிறுவனத்திற்கு ஏற்படுவதோடு, டீசல் டிரக்குகள் பயன்பாட்டால் காற்றும் அதிக மாசடைகின்றது. இந்த அனைத்து சிக்கல்களையும் தவிர்க்கும் பொருட்டே மாருதி சுஸுகியின் குஜராத் ஆலையில் இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கின்றது. இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பதால் மிகப் பெரிய அளவில் டிரக்கின் தேவையைக் குறைக்க இருக்கின்றது மாருதி சுஸுகி. நாடு முழுவதும் உள்ள 15க்கும் மேற்பட்ட இலக்குகளுக்கு குஜராஜ் ஆலை வாயிலாகவே மாருதி சுஸுகி அதன் வாகனங்களை டிரக்குகள் வாயிலாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆண்டிற்கு அது சுமார் 3 லட்சம் கார்களை இங்கிருந்தே மாருதி சுஸுகி அனுப்பி வைக்கின்றது. இவற்றை அனுப்பி வைக்க 50 ஆயிரத்திற்கும் அதிகமான டிரக்குகளை அது பயன்படுத்துவதாக கூறப்படுகின்றது. இதன் விளைவாக 1,650 மெட்ரிக் டன் கார்பன் வெளியேறும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், 35 மில்லியனுக்கும் அதிகமான லிட்டர் எரிபொருளும் அதற்கு தேவைப்படுகின்றது.

இதுபோன்ற அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் பொருட்டே தற்போது இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாகவே இனி நாடு முழுவதிற்கும் குஜராத் ஆலையில் இருந்து மாருதி கார்கள் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதனால் மிகப் பெரிய அளவில் சிக்கனத்தை நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது.

அதாவது, 15க்கும் மேற்பட்ட இலக்குகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ரயில் வாயிலாகவே மாருதி வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. மாருதி சுஸுகியின் இந்த முயற்சியால் வரும் நாட்களில் காற்று மாசுபடு கணிசமான அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்தியாவில் மிக அதிகளவில் ரயிலைப் பயன்படுத்தும் நிறுவனமாக மாருதி சுஸுகி இருந்து வருகின்றது. இந்த நிலையிலேயே அதை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றது, மாருதி.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு இந்திய அரசு பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், டிரக்குகளுக்கு பதிலாக ரயில்களை டிரான்ஸ்போர்ட்டிற்கு அதிகம் பயன்படுத்தவும் வாகன உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்துகின்றது. இதன் அடிப்படையில் சில சலுகைகளையும் அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மாருதிக்கு இன்-பிளான்ட் ரயில் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 12, 2024, 17:39 [IST]
English summary
Maruti got india s first in plant train transport
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+