200 கி.மீ வேகத்தில் சீறி பாயும் மாருதி இக்னீஷ் இவி கார்! டாடா எல்லாம் ஓரமா போ பா!
மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் என்ற ஹேட்ச்பேக் காரை தனியார் நிறுவனம் ஒன்று எலெக்ட்ரிக் காராக மாடிஃபிகேஷன் செய்துள்ளது. இந்த கார் 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனைகளும் வெற்றிகரமாக நடந்துள்ளன. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் கார் இந்தியாவில் விற்பனையாகவும் சிறிய ரக கியூட் கார்களில் ஒன்றாகும். மாருதி நிறுவனம் இந்தக் காரை நிறுவனத்தின் பிரிமியம் கார்கள் விற்பனை செய்யும் நெக்ஸா ஷோரூம் வழியாக என்ட்ரி லெவல் காராக விற்பனை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்தின் மற்ற கார்கள் போல இந்த காரின் விற்பனை பெரிய அளவில் எல்லாம் இல்லை. மாதம் 3000 கார்கள் விற்பனை செய்யவே அந்நிறுவனம் திண்டாடி வருகிறது.

இந்நிலையில் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வந்தால் எப்படி இருக்கும்? மாருதி நிறுவனத்தின் முதல் இவி காராக இவிஎக்ஸ் என்ற கார் தானே எலெக்ட்ரிக் காராக வரப்போகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது மாருதி நிறுவனம் வெளியிட்ட எலெக்ட்ரிக் கார் கிடையாது. மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் காரை வாங்கி அதை எலெக்ட்ரிக் காராக தனியார் நிறுவனம் ஒன்று மாடிஃபிகேஷன் செய்துள்ளது.
புனேவைச் சேர்ந்த நார்த்வே மோட்டார்ஸ் என்ற நிறுவனம் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து வழங்கி வரும் சேவையை செய்து வருகிறது. முக்கியமாக இந்நிறுவனம் பெட்ரோல் டீசல் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் மாடிஃபிகேஷனை செய்துள்ளது. இந்நிறுவனம் டாடா ஏஸ் என்ற சரக்கு வாகனத்தை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றுவதற்கான செட்டப்பை தயாரித்துள்ளது.

இதன் மூலம் பிரபலமான இந்நிறுவனம் தற்போது மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் காரை எலெக்ட்ரிக் காராக மாற்றி அதை பதிவு செய்து சாலையில் பயன்படுத்தும் வகையில் மாற்றியுள்ளது. இதற்காக ஆல்ஃபா வேரியன்ட் காரை விலைக்கு வாங்கி அந்த காரில் உள்ள பெட்ரோல் இன்ஜினை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் மோட்டார்,பேட்டரிகளை பொருத்தி முழுமையாக எலெக்ட்ரிக்காராக மாற்றியுள்ளது. மேலும் இது எலெக்ட்ரிக் கார் என்பதால் பச்சை நிற நம்பர் பிளேட் பதிவெண் பெற்றுள்ளது.
முழுமையாக எலெக்ட்ரிக் காராக மாற்றப்பட்ட இந்த மாருதி கார் இதுவரை பொதுசாலைக்கு பயன்பாட்டிற்கு வரவில்லை. மாறாக இந்த காரை டைனமோமீட்டர் மூலம் இந்த கார் எவ்வளவு வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என சோதனை செய்து பார்த்தார்கள். அதில் தான் மிக ஆச்சரியமான தகவல் ஒன்று கிடைத்தது. இந்த கார் 200 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்ட காராக அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த காரில் உள்ள உயிர்கள் எல்லாம் பச்சை நிறத்தில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு கவரும் வகையில் உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களில் ஆங்காங்கே பச்சை நிறம் இருந்தால் அதை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் இப்படியான மாற்றத்தை அந்நிறுவனம் செய்துள்ளது.
இந்த காரை மாடிஃபிகேஷன் செய்யும்போது பெட்ரோல் இன்ஜினிற்கு பதிலாக சிங்கிள் மோட்டார் மற்றும் பேட்டரி செட்டப்பை வழங்கி உள்ளது. மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ளது போல இந்த காரிலும் சிங்கிள் ஸ்பீடு கியர் பாக்ஸ் தான் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரில் கியர் மாற்ற வேண்டிய தேவை இல்லை. ஆனால் கியர் ரேஷியோக்கள் உள்ளன.
அதன்படி இந்த கார் டைனமோமீட்டர் கருவியில் நிறுத்தப்பட்டு காரின் வீல்கள் மட்டும் சுற்ற வைக்கப்பட்டு அதிகபட்சம் எவ்வளவு வேகத்தில் இந்த கார் பயணம் செய்கின்றன என சோதனை நடத்தப்பட்டது. அதில் இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பது தெளிவாக தெரிந்தது. சாலையில் செல்லும்போது இவ்வளவு வேகம் கிடைக்காவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல வேகத்தில் இந்த கார் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இப்படியாக பெட்ரோல் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும்போது இருக்கும் மிகப்பெரிய சிக்கல் கியர் பாக்ஸ் சிக்கல் தான். பெட்ரோல் வாகனங்களில் மேனுவல் கியர் பாக்ஸ் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களில் மேனுவல் கியர் பாக்ஸை பொருத்துவது சிரமமாக இருக்கும். இந்நிலையில் இந்நிறுவனம் இதற்கு புதிய ஐடியா ஒன்றை செய்துள்ளது. அதன்படி இக்னீஷ் காரில் உள்ள 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் டார்க் ஆப்டிமைசர் என்ற கருவியை இணைத்துள்ளது.

அதன்படி இந்த டார்க் ஆப்டிமைசர் மூலம் தானியங்கியாக கியரை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற நினைக்கும் பலருக்கு இது ஒரு நல்ல ஐடியாவாக இருக்கும் என்று மாடிஃபிகேஷன் செய்பவர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கன்வெர்ஷன் கிட் குறித்த விலை விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்நிறுவனம் தயாரித்துள்ள டாடா ஏஸ் வாகனத்திற்கான கன்வெர்ஷன் சீட் ரூபாய் 2.75 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவும் கிட்டத்தட்ட அதே விலையில் தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது என்பது பலருக்கு பிடித்தமான விஷயம்தான். இப்படியாக இந்த மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படியான மாடிஃபிகேஷனை விரும்பும் மக்களுக்கு இது ஆச்சரியமான தகவல் தான். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









