சாதாரணமா இந்த காருல நான்குல இருந்து ஐந்து பேரு மட்டுமே டிராவல் பண்ண முடியும்.. இப்போ 8 பேர் வர போகலாம்..

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஜிம்னி (Jimny)-யும் ஒன்றாகும். இந்தியாவில் மஹிந்திரா தார் (Mahindra Thar) கார் மாடலுக்கு போட்டியளிக்கும் விதமாக மாருதி சுஸுகியால் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே ஜிம்னி ஆகும். இந்த காரையே பிரத்யேகமாக எட்டு பேர் வரை அமர்ந்து பயணிக்கின்ற வகையில் மாற்றி இருக்கின்றனர். மாடிஃபிகேஷன் வாயிலாகவே இத்தகைய மாற்றத்தை செய்திருக்கின்றனர். குறிப்பாக, வசதியாக அமர்ந்து சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற மாதிரியான மாற்றங்களையே இந்த காரில் செய்திருக்கின்றனர்.

ஒடிசா மாநிலத்திலேயே இந்த மாற்றம் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது. காட்டுக்குள் சஃபாரி எடுத்துப் போக வேண்டும் என்பதற்காகவே இந்த பிரத்யேக மாற்றங்கள் ஜிம்னி-யில் செய்யப்பட்டு இருக்கின்றன. சொல்லப்போனால் காரின் மேற்கூரை மற்றும் இருக்கைகளை அகற்றி இருக்கின்றனர். சொகுசான பின் இருக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பென்ச் மாதிரியான இருக்கைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

Maruti jimny converted into 8 seater safari vehicle

Source மேலும், பிரத்யேக கைப் பிடிகள் மற்றும் மேற்கூரைகள் ஆகியவை இந்த காரில் சேர்க்கப்பட்டு உள்ளன. ஆகையால், காட்டுக்குள் பயன்படுத்தப்பட இருக்கும் இந்த ஜிம்னி தற்போது முழுமையாக காடுக்கான வாகனமாகவே மாறியிருக்கின்றது. ஜிம்னி ஓர் ஆஃப் ரோடு பயணங்களுக்கு உகந்த வாகனம் ஆகும்.

இந்த காரணத்தினாலேயே ஓடிசாவில் உள்ள சிமிலிபால் நேஷனல் பூங்கா, ஜிம்னியைத் தேர்வு செய்து, அதனை தங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்து பயன்படுத்தவும் தொடங்கி இருக்கின்றனர். மிக முக்கியமாக மூன்று வரிசை இருக்கை அமைப்பிற்காக இதன் பிக்கம் கூடுதல் உலோக சட்டங்களால் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், இது பார்ப்பதற்கு மாருதி சுஸுகியின் தயாரிப்புதானா என கேட்கும் அளவிற்கு தற்போது உள்ளது. இதன் படங்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னிக்கு என தனித்துவமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் ஆஃப்-ரோடு பயணத்தைச் சமாளிக்கும் விதமாக ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், பிரேக் எல்எஸ்டி, 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஆல் கிரிப் ப்ரோ எனும் அம்சமும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

ஆஃப்-ரோடை இந்த கார் திறம்பட கையாள இந்த அம்சமே மிகுந்த உதவியாக இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் முன் பக்க ஏர் பேக், திரை வகை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி, பிரேக் அசிஸ்ட் ஃபங்க்சன், பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா மற்றும் ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆகிய அம்சங்களை இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.

இந்தியாவில் இந்த கார் பெட்ரோல் எஞ்சின் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதுவும் ஒற்றை பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே அது ஆகும். இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றன.

டீசல் ஆப்ஷன் ஒன்றுகூட வழங்கப்படவில்லை. இதனால்தான் இந்தியர்கள் மத்தியில் ஜிம்னியைக் காட்டிலும் தார் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இத்துடன், இப்போது மூன்று மற்றும் ஐந்து டோர்கள் ஆப்ஷனிலும் மஹிந்திரா தார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆஃப்-ரோடு மற்றும் லைஃப்ஸ்டைல் கார் மாடலாக ஜிம்னி காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்த காருக்கு தனித்துவமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால், காடு, மலைப் பாதை உள்ளிட்டவற்றில் திறம்பட பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதனாலேயே சிமிலிபால் நேஷனல் பூங்காவில் இந்த வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2024, 20:19 [IST]
English summary
Maruti jimny transformed into 8 seater safari vehicle for similipal national park
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+