மாருதியின் ஒரு லட்ச ரூபாய் கார்!
ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் அசைக்க முடியாத அஸ்திவாரத்தை போட்டுவிட்ட மாருதி அடுத்து ஒரு லட்ச ரூபாய் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. உலகின் மிகக்குறைந்த விலை காராக இதுவரை இருந்து வரும் டாடா நானோ காருக்கு இந்த கார் நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும்.
தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி 800 காரின் அடிப்பைடையில் புதிய கார் டிசைன் செய்யப்பட உள்ளது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டால் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் நானோ மார்க்கெட்டையும் ஒன்றுமில்லாமல் பண்ணிவிட வாய்ப்புள்ளதாக ஆட்டோமொபைல் துறை கூறுகிறது.

எஞ்சின்
இந்த காரில் ஆல்ட்டோ 800 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 800சிசி பெட்ரோல் எஞ்சினை பொருத்த மாருதி முடிவு செய்துள்ளதாம். மேலும், நானோ டீசல் மாடலில் வருவதால் போட்டியாக தனது புதிய 800சிசி டீசல் எஞ்சினுடன் இந்த காரை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளதாம்.

இருக்கை வசதி
4 பேர் கொஞ்சம் வசதியாகவே அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்டதாக இருக்கும்.

பெட்டர் டிசைன்
நானோ காரை விட இந்த புதிய கார் சிறந்த டிசைன் கொண்டதாக இருக்கும்.

விலை
நானோ காருக்கு சவால் கொடுக்கும் விலையில் இந்த புதிய கார் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

ஸாரி,,,,
நானோ காரை பார்த்து சலித்து போன பலரும் மாருதி நிறுவனம் இதுபோன்று ஒரு காரை அறிமுகம் செய்யாதா என்று அனைவருக்குள்ளும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதையே, இன்றைய ஏப்ரல் ஃபூல் செய்தியாக வெளியிட்டிருக்கிறோம். இது முழுக்க கற்பனை செய்தியே... தவறாக எண்ணாதீர்கள்.


Click it and Unblock the Notifications







