முழுசா கழட்டி போட்டு ஃப்ரீயா சர்வீஸ் பண்ணிட்டாங்க! கஸ்டமரிடம் சர்வீஸ் நிர்வாகம் இப்படி நடந்துக்குறது அபூர்வம்!

பொதுவாக பிரச்னைனு வரும் வாடிக்கையாளர்களை எப்படி தட்டிக் கழிக்கலாம் என்பதே பெரும்பாலான சர்வீஸ் நிர்வாகங்களின் நோக்கமாக இருக்கும். அப்படியே வாகனத்தை வாங்கினாலும் சரியாக சர்வீஸ் செய்யாமல் திருப்பிக் கொடுக்கக் கூடிய சூழலையே கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால், பில் மட்டும் ஏழடி நீளத்திற்கு இருக்கும். இத்தகைய பிரச்னையை நம்மில் பலர் சிக்கியிருக்கக் கூடும். ஆனால், இங்கு ஓர் சர்வீஸ் நிர்வாகம் வாடிக்கையாளரின் கோரிக்கைக்கு முழுமையாகச் செவி சாய்த்து, பிரச்னையை சரி செய்துக் கொடுத்திருக்கின்றது. அதுவும் இலவசமாக சரி செய்துக் கொடுத்திருக்கின்றனர்.

இதுகுறித்த ஆச்சரியமளிக்கும் தகவலே தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வை ஜிம்னி காரின் உரிமையாளரே மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடியோவாக எடுத்து யுட்யூபில் வெளியிட்டு இருக்கின்றார். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் புகழ்பெற்ற கார் மாடல்களில் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny)-யும் ஒன்றாகும்.

Maruti jimny steering wobble

இந்த கார் மாடலில் 'ஸ்டியரிங் வாப்ளிங்' (Steering Wobble) சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.
ஸ்டியரிங் வீல் நிலையாக இல்லாமல் தள்ளாடும் சூழலில் இருப்பதே இதற்கு அர்த்தம் ஆகும். இது கார்களில் ஏற்படும் மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான கோளாறு ஆகும். இதனால்தான் இதனை 'டெத் வாப்ளிங்' (Death Wobble) என அழைக்கின்றனர்.

இந்த பிரச்னைக்கே உடனுக்குடன் செவி சாய்த்து தற்போது சரி செய்தும் கொடுத்திருக்கின்றது மாருதி சுஸுகி சர்வீஸ் நிர்வாகம். குறிப்பாக, இந்த சேவையை இலவசமாக அவர்கள் செய்துக் கொடுத்திருப்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த ஜிம்னி கார் மிக சமீபத்தில் வாங்கப்பட்டது என கூறப்படுகின்றது.

Maruti jimny steering wobble service pic

5 ஆயிரம் கிமீ தூரம் வரை மட்டுமே அது டிராவல் செய்திருக்கின்றது. இந்த நிலையிலேயே விநோத கோளாறுக்கு அது ஆளாகி இருக்கின்றது. மணிக்கு 80 கிமீட்டருக்கும் குறைவான வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் லேசாக ஸ்டியரிங் தள்ளாடி இருக்கின்றது. மேலும், மணிக்கு 60 கிமீட்டருக்கும் குறைவான வேகத்தை எட்டும் வரை அது தொடர்ச்சியாக நீடித்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே பிரச்னை குறித்து உடனே ஜிம்னி கார் உரிமையாளர் சர்வீஸ் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருக்கின்றார். இதன் அடிப்படையில் காரின் முன் பக்கத்தை முழுமையாக கழட்டி போட்டு ஊழியர்கள், எங்கு சிக்கல் இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து கோளாறை முழுமையாகச் சரி செய்திருக்கின்றனர்.

இந்தியாவில் மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே ஜிம்னி ஆகும். இந்த கார் ரூ. 12.74 லட்சம் என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த ஓர் கார் மடாலே இதுவாகும்.

இதற்காக ஏகப்பட்ட வசதிகளை இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. 'ஆல் கிரிப் ப்ரோ' எனும் அம்சத்தை இந்த காரின் சிறந்த ஆஃப்-ரோடு திறன் வெளிப்பாட்டிற்காக வழங்கி இருக்கின்றனர். இதுதவிர, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், பிரேக் எல்எஸ்டி போன்ற அம்சங்களையும் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றன.

இத்தகைய சிறப்பம்சங்களை பிரத்யேகமாகக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு ஆஃப்-ரோடு பயண பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சிலர் இந்த காரை மேலும் சிறந்த ஆஃப்-ரோடர் வாகனமாக மாற்றுவதற்காக கூடுதல் ஆஃப்-ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட அம்சங்களைப் பொருத்தி வருகின்றனர்.

இந்த மாதிரியான வெளிப்புற சந்தையில் இருந்து வாங்கி ஏதேனும் அம்சங்கள் பயன்படுத்தப்படும் எனில் இதுபோன்ற இலவச சர்வீஸ்களைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், இன்சூரன்ஸ் நிராகரிப்பைப் பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஜிம்னியில் ஒற்றை பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது.

1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் மோட்டாரே து ஆகும். கியர்பாக்ஸைப் பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒரு டீசல் மோட்டார் ஆப்ஷன்கூட வழங்கப்படாதது பெரும் குறையாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் எங்காவது ஓர் மூலையில் இதுமாதிரியான நல்ல நிகழ்வுகள் கார் உரிமையாளர்களை மகிழ்விக்கும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அனைவருக்கும் இந்த மாதிரி அமைந்துவிடுவதில்லை. பெரும்பாலான நேரங்களில் கார்களில் கோளாறு என வரும்போது வாடிக்கையாளர்கள், சர்வீஸ் நிர்வாகம் மோதலே அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அதில், இந்த நிகழ்வு ஓர் அபூர்வம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2024, 5:00 [IST]
English summary
Maruti suzuki addresses steering wobble in jimny with free service bulletin
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+