மாருதி ஆல்டோ காருக்கு இவ்வளவு திறன் இருக்கா!! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது - இனி இதையே ஃபாலோ பண்ணுங்க!
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீப வாரங்களாக கனமழை பெய்துவரும் நிலையில், சகதியான மலைப்பாதையில் ஏறுவதற்காக மாருதி சுஸுகி ஆல்டோ கார் ஓட்டுனர் ஒருவர் காரை ரிவர்ஸில் இயக்கி, வித்தியாசமான முறையில் முயற்சி செய்து பார்த்துள்ளார். இவ்வாறான பாதைகளில் காரில் முன்னோக்கி செல்வதை காட்டிலும், பின்னோக்கி செல்வது எந்த அளவிற்கு சரியானது என்பதையும், இதில் உள்ள இயற்பியலையும் பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய கார்கள் வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக மாருதி சுஸுகியின் ஆல்டோவை சொல்லலாம். ஒரு சமயத்தில் பலர் தங்களது வாழ்வில் வாங்கும் முதல் காராக ஆல்டோ விளங்கியது. ஆல்டோவின் அடையாளமே அதன் அளவில்-சிறிய 800சிசி என்ஜின் தான். ஆனால் தற்சமயம் 1.0 லிட்டர் என்ஜின் உடனே மட்டுமே மாருதி சுஸுகி ஆல்டோ விற்பனைக்கு கிடைக்கிறது.

800சிசி என்ஜின் உடன் மிகவும் விலை குறைவானதாகவும், அதிக மைலேஜை வழங்கக்கூடியதாகவும் ஆல்டோ விளங்கியது. அத்துடன், சிறிய அளவிலான கார் என்பதால் ஆல்டோவை ஆஃப்-ரோடுகளில் இயக்குவதும் எளியது. இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களை பற்றி இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால் அவை எதிலிலும் இல்லாத புதுமையாக, மலைப்பாதையில் ரிவர்ஸில் மேலேற்றப்பட்ட ஆல்டோ காரை பற்றி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடந்து மழை பெய்து வருவதினால் பல சாலைகள் எப்போதும் ஈரமாகவே உள்ளன. தார் சாலை அல்லாத மலைப்பாதைகள் ஈரத்தினால் சகதியாக மாறியுள்ளன. அத்தகைய பாதைகளில் வாகனத்தை இயக்கி செல்வது என்பது சவாலான காரியம். இதனை நன்கு புரிந்து வைத்திருந்த ஆல்டோ கார் ஒன்றின் ஓட்டுனர் தனது காரை ரிவர்ஸில் மலை மீது ஏற்றியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
இந்த ஆல்டோ கார் ஓட்டுனர் எடுத்தவுடன் ஆரம்பத்திலேயே ரிவர்ஸில் காரை ஓட்டவில்லை. சில, பலமுறை எப்போதும்போல் முன்பக்கமாக காரை இயக்க முயற்சித்துள்ளார். ஆனால், தொடர்ந்து பாதை வழுக்கிய காரணத்தால் காரை மேலே ஏற்ற முடியவில்லை. இதனால், நம்மால் இவ்வாறு காரை மேலேற்ற முடியாது என்பதை உணர்ந்த இந்த ஆல்டோ கார் ஓட்டுனர், சற்று வித்தியாசமாக யோசித்து ரிவர்ஸில் காரை இயக்கியுள்ளார்.
இதற்கு கைமேல் பலனாக, கார் ஏறுமுகமான அந்த மலைப்பாதையில் எளிதாக ஏறிவிட்டது. இதற்கு பின்னால் இருக்கும் இயற்பியல் காரணம் என்னவென்றால், மாருதி ஆல்டோ கார் ஆனது ஓர் முன்-சக்கர-டிரைவ் சிஸ்டம் கொண்ட கார் ஆகும். இந்த காரில் என்ஜின் முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது. அத்துடன், இந்த சம்பவத்தின்போது காரினுள் இருவர் மட்டுமே இருந்ததாகவும், அவர்கள் இருவரும் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆக, என்ஜின் மற்றும் முன் இருக்கை பயணிகளின் எடையின் காரணமாகவே காரின் முன் சக்கரங்கள் மேலே ஏற மறுத்து, தொடர்ந்து ஒரே இடத்தில் வழுக்கிக் கொண்டு இருந்துள்ளன. இதனை எப்படியோ தெரிந்து வைத்திருந்த ஓட்டுனர் புத்துசாலித்தனமாக காரை ரிவர்ஸில் கொண்டுச் சென்றுள்ளார். முன்பக்கமாக இயங்குவதற்கு ஆல்டோ கார்களில் 4-5 கியர்கள் உள்ளன. ஆனால் ரிவர்ஸில் இயங்குவதற்கு ஒரேயொரு கியர் மட்டுமே.
ஆனால் இந்த ஒற்றை கியரிலேயே காரின் முழு டார்க் திறனை எட்டிவிட முடியும். இதுவும் செங்குத்தான பாதையை கார் எளிதாக கடந்ததற்கு ஒரு காரணம் ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், நீங்கள் வீடியோவில் காணும் ஆல்டோ 800 காரின் விற்பனையை சமீபத்தில்தான், கடந்த மார்ச் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியது. ஆல்டோ 800 காரில் 796சிசி 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த சம்பவத்தில் ஆல்டோ 800 கார் செங்குத்தான மலைப்பாதையில் ரிவர்ஸில் ஏறியதற்கு அதன் குறைவான எடை, அளவில்-சிறிய தோற்றம், முன் சக்கரங்களின் மூலம் இயங்கும் பண்பு மற்றும் ரிவர்ஸ் கியரில் அதிக டார்க் திறன் உள்ளிட்டவற்றை காரணமாக சொல்ல வேண்டும். இருப்பினும், இவை அனைத்தும் ஒன்றாக இருந்தாலும் சிலரால் காரை ரிவர்ஸில் மேலே ஏற்ற முடியாது. ஆக, இந்த விஷயத்தில் நாம் டிரைவரின் திறமையையும் பாராட்டியாக வேண்டும்.


Click it and Unblock the Notifications








