ராங் சைடில் வந்து ஆட்டம் காட்டிய காருக்கு பாடம் புகட்டிய லாரி டிரைவர்! மொத்த கூட்டத்தையும் கதற விட்டுட்டாரு!
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு பஞ்சம் இல்லை. குறிப்பாக சாலைகளில் ராங் சைடில் (Wrong Side) பயணம் செய்வதில் இந்தியர்களை அடித்து கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இங்கு ராங் சைடில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. ராங் சைடில் பயணம் செய்வதால், ஒரு சில நிமிடங்கள் மிச்சம் ஆகலாம். ஆனால் அது மிகவும் பயங்கரமான சாலை விபத்துக்களுக்கு வழிவகுத்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு சில சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு போன்ற தேவை இல்லாத பிரச்னைகள் ஏற்படுவதற்கும், இது காரணமாக அமைகிறது. இந்த வரிசையில் ராங் சைடு பயணம் காரணமாக மிக கடுமையான மோதல் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், லாரி ஒன்று, மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரை இழுத்து செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் பலருக்கும் இது முழுக்க முழுக்க லாரி டிரைவர் மீதான தவறு என்றுதான் முதலில் தோன்றும். ஆனால் உண்மையில் நடந்தது வேறு. ஆம், இந்த வைரல் வீடியோவை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், மாருதி சுஸுகி பலேனோ கார் ராங் சைடில் வந்திருப்பது தெரிய வரும்.

இது மிகவும் சிறிய வீடியோ என்பதால், உண்மையில் என்ன நடந்தது? என்பது சரியாக தெரியவில்லை. இருப்பினும் மாருதி சுஸுகி பலேனோ கார் ராங் சைடில் வந்துள்ளது என்பது உறுதியாக தெரிகிறது. அதேபோல் மாருதி சுஸுகி பலேனோ காருக்குள் ஆட்கள் யாரும் இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.
இதை எல்லாம் வைத்து பார்க்கையில் நடந்தது பின்வருமாறு இருக்கலாம். அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார் ராங் சைடில் வந்திருக்கலாம். இது எதிர் திசையில் வந்த லாரி முன்னோக்கி செல்வதற்கு தடையாக இருந்திருக்கலாம். மாருதி சுஸுகி பலேனோ கார் ராங் சைடில் வந்த காரணத்தால், லாரி டிரைவர் வழி விட மறுத்திருக்கலாம்.
இதன் காரணமாக மாருதி சுஸுகி பலேனோ காருக்குள் இருந்தவர்களுக்கும், லாரி டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம். அந்த சமயத்தில் காருக்குள் இருந்தவர்கள் கீழே இறங்கியிருக்கலாம். ஒரு கட்டத்தில் லாரி டிரைவர் கோபத்தின் உச்சிக்கே சென்று, மாருதி சுஸுகி பலேனோ காரை, லாரியுடன் சேர்த்து இழுத்து சென்றிருக்கலாம்.
இதுதான் நடந்த சம்பவமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கின்றன. ஆனால் லாரி இழுத்து சென்ற காரணத்தால், மாருதி சுஸுகி பலேனோ கார் சேதமடைந்திருப்பதை நம்மால் வீடியோவில் மிகவும் தெளிவாக காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், லாரி டிரைவர் செய்தது சரி என வாதிட்டு வருகின்றனர். மாருதி சுஸுகி பலேனோ காரில் வந்தவர்களுக்கு அவர் பாடம் புகட்டியதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதை நாங்கள் ஏற்று கொள்ளவில்லை. அதற்காக மாருதி சுஸுகி பலேனோ கார் ராங் சைடில் வந்ததை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. அது கண்டிப்பாக தவறுதான்.
ஆனால் லாரி டிரைவர் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். உண்மையில் லாரி டிரைவர்களின் பணி மிகவும் சவாலான ஒன்று. அவர்கள் நாட்டின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு நீண்ட நாட்கள் பயணம் செய்து, பொருட்களை கொண்டு செல்கின்றனர்.
இது கண்டிப்பாக அவர்களை மனதளவில் பாதிக்கும். அந்த நேரத்தில் ராங் சைடில் வரும் வாகனங்கள் போன்ற விஷயங்களால், அவர்கள் எரிச்சல் அடையலாம். இதை மறுக்க முடியாது. எனினும் சாலைகளில் நாம் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வது அவசியம். சாலைகளில் மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து, பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
இல்லாவிட்டால், அது தேவையில்லாத பிரச்னைகளுக்கு வழி வகுத்து விடும். மாருதி சுஸுகி பலேனோ-லாரி ஆகிய வாகனங்களுக்கு இடையே மோதல் நடந்துள்ள இடம், அகமதாபாத்-பரோடா எக்ஸ்பிரஸ்வே (Ahmedabad-Baroda Expressway) என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வைரல் வீடியோவை பார்க்கும்போது, ஒரு சிலர் சத்தம் போட்டு அலறுவதை காணலாம். அனேகமாக அவர்கள்தான் மாருதி சுஸுகி பலேனோ காரில் வந்தவர்களாக இருக்கும் என தெரிகிறது. எது எப்படியோ அவர்கள் இந்நேரம் தங்கள் தவறை உணர்ந்திருப்பார்கள் என நாம் உறுதியாக நம்பலாம்.


Click it and Unblock the Notifications








