ஊரே ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்தல என்றால் யோசிக்கவே பயமா இருக்கு! டிரைவரின் நிலைமையை பார்த்து ஷாக்கான மக்கள்
கோவா (Goa) என்றதுமே ஆண்களின் முகத்தில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவதை பார்க்க முடியும். அதற்கு முக்கிய காரணம், நம் எல்லாருக்குமே தெரிந்ததுதான், மதுபானம். உள்நாட்டு சரக்கில் இருந்து அரிதான வெளிநாட்டு மதுபானங்கள் வரையில் கோவாவில் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே, கோவாவில் மது போதையில் வாகனங்களை ஆக்ரோஷமாக ஓட்டும் சம்பவங்களை அவ்வப்போது பார்க்க முடியும். அந்த வரிசையில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் டிரைவர் ஒருவர் பஞ்சரான டயர் உடன் சாலையில் கண்ணா பின்னாவென்று காரை ஓட்டி சென்றுள்ளார்.
இணையத்தில் கவனத்தை பெற்றுள்ள இந்த நிகழ்வை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். உலகளவில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளுள் நமது இந்தியாவும் முன்னிலையில் உள்ளது. நம் நாட்டில் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுவதற்கு, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது முக்கியமான காரணமாக உள்ளது.

மதுபோதையில் கார் ஓட்டுவதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என லிஸ்ட் போட்டு பார்த்தால், அந்த லிஸ்ட் மிக பெரியதாக செல்கிறது. அதற்கு சாட்சியாகவே, கோவாவில் தற்போது பஞ்சரான டயர் உடன் ஒருவர் பிரெஸ்ஸா காரை ஓட்டி சென்றுள்ளார். இதை அவர் வேண்டுமென்றே செய்தது போல் தெரியவில்லை.
போதையின் பிடியில் இருந்த அவருக்கு காரின் ஒரு சக்கரம் முழுவதுமாக பஞ்சாராகி உள்ளது என்பதே அவருக்கு தெரியவில்லை. இத்தனைக்கும், டயர் பஞ்சராகியதால் கார் சாலையில் குதித்தப்படி சென்றுள்ளது. அதாவது, அந்த நேரத்தில் காருக்குள் இருப்பவர்கள் பயங்கரமாக குலுக்கப்பட்டு இருப்பர். அப்படியிருந்தும், இந்த நபர் எந்தவொரு பிரச்சனையும் இன்றி சாலையில் தொடர்ந்து காரை கொண்டு சென்றுள்ளார்.

அந்த அளவிற்கு மது மயக்கத்தில் இருந்த இந்த பிரெஸ்ஸா கார் டிரைவர் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்த நபரது இந்த செயலால் சாலையில் நடந்து சென்றவர்களும், வாகனங்களில் சென்றவர்களும் அச்சமடைந்தனர். இதனால், சில வாகன ஓட்டிகள் இந்த கார் டிரைவரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
வாகனங்களில் ஆட்கள் துரத்துவதை பார்த்ததும் மது போதையில் இருந்த இந்த பிரெஸ்ஸா கார் டிரைவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இருப்பினும், சில உள்ளூர்வாசிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு, காரை இடைமறித்து நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து, இந்த பிரெஸ்ஸா கார் டிரைவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்பக்கத்தில் உள்ள காரின் இடதுப்பக்க டயர் முற்றிலுமாக பஞ்சராகி உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த பிரெஸ்ஸா கார் ஆனது அந்த சக்கரத்தில் மட்டும் ரிம் (Rim)-இல் இயங்கியது. சக்கரத்தின் ரிம்மில் காரை ஓட்டுவது மிகவும் ஆபத்தானது ஆகும். ஏதேனும் சிறிய பள்ளத்தில் கொண்டுப்போய் விட்டால் கூட கார் கவிழ்வதற்கு வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு கார் ஓட்டுவதால், விபத்து ஏற்படுவதுடன், ஒருவேளை விபத்தில் இருந்து தப்பித்தாலும் பெரிய செலவில் சிக்க வேண்டியதாக இருக்கும். இப்படி பஞ்சரான டயர் உடன் காரை ஓட்ட எவரொருவரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், இந்த நபர் ஓட்டியுள்ளார் என்றால், அதற்கு அவருக்குள் இருந்த மது போதை தான் காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications








