காரை விற்று தான் அபராதம் கட்டணும்! கருணையே காட்டாத போலீசார்... இப்படித்தான் இருக்கனும்!!
பிரதமர் வாகனத்தில் கூட சைரன் உபயோகப்படுத்துவதில்லை, ஆனால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவற்றில் சைரன் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணம், இந்த அவசர கால வாகனங்கள் அந்த அளவிற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. காதை கிழிக்கும் சைரனை பயன்படுத்தும் போதிலும், ஒரு சில வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸுக்கு இடையூறாக தங்களது வாகனங்களை ஓட்டுவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. அந்த வகையில், சமீபத்தில் மாருதி சுஸுகி சியாஸ் காரில் ஆம்புலன்ஸுக்கு இடையூறாக வாகனம் ஓட்டியவருக்கு அதிரடியாக ரூ.2.5 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி பார்க்கலாம்.
ஆக்ரோஷமான பயணங்களையும், அஜாக்கிரதையான பயணங்களையும் நம் நாட்டு சாலைகளில் பரவலாக காண முடியும். ஒரு சிலர், மொத்த சாலையும் தங்களுக்கு தான் சொந்தம் என்பதுபோல் மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையை அளந்துக் கொண்டு செல்வர். அத்தகைய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது தொடர்கதையாகி வருகிறது.

ஆனால், இங்கு ஒரு மாருதி சுஸுகி சியாஸ் கார் ஓட்டி ஒருபடி மேலே சென்று மருத்துவ உதவிக்காக அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையில் இடைமறித்தப்படி சென்றுள்ளார். இதுகுறித்த காட்சிகள் ஆம்புலன்ஸில் இருந்த கேமராவில் பதிவாகி உள்ளன. இதனை வைத்து போலீசார் ஆராய்ந்ததில், காரின் நம்பர் பிளேட்டை வைத்து சம்பந்தப்பட்ட சியாஸ் கார் உரிமையாளரை போலீசார் அடையாளம் கண்டனர்.
அதனை தொடர்ந்து நேரடியாக அவர்களது வீட்டிற்கு சென்ற போலீசார், காரின் உரிமையாளருக்கு அதிரடியாக ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்ததுடன், அவரது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சில்வர் நிறத்திலான மாருதி சுஸுகி டிசைர் கார் ஒன்று 2-லேன்களை கொண்ட சாலையில் ஆம்புலன்ஸுக்கு முன்பாக இடைமறித்தப்படி செல்வதை காணலாம்.

ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை கண்டால் எந்தவொரு வாகன ஓட்டியும் அதற்கு வழிவிட வேண்டும். ஆனால், சைரன் காதை கிழிக்கும் வகையில் அடித்துக் கொண்டு இருந்த போதிலும், கூடுதலாக ஆம்புலன்ஸ் டிரைவர் தொடர்ந்து ஹார்ன் அடித்த போதும் இந்த சியாஸ் கார் டிரைவர் வழிவிடாமல் சென்றுள்ளார். சாலையில் ஓரங்கட்டுவதற்கு நிறைய இடம் இருந்த போதிலும் ஓரங்கட்டாமல், ஆம்புலன்ஸ் இயங்கும் பாதையை நோக்கியவாறே சென்றுள்ளார்.
இதன் காரணமாகவே, இந்த சியாஸ் கார் டிரைவருக்கு அதிரடியாக ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது சியாஸ் காரை ஓட்டியவர் தான் காரின் ஓனர் என போலீசார் முதற்கட்டமாக உறுதிச் செய்துக் கொண்ட பின்னரே அபராதம் விதித்துள்ளனர். மற்றப்படி, இந்த சம்பவத்தின்போது ஆம்புலன்ஸினுள் நோயாளி யாரேனும் இருந்தார்களா என்கிற விபரம் கிடைக்க பெறவில்லை.
நோயாளி இல்லாவிடினும், நோயாளியை அழைத்து வருவதற்காக தான் ஆம்புலன்ஸ் செல்லும் என்பதால், சைரன் ஒலிர்ந்தப்படி செல்லும் ஆம்புலன்ஸை வழிமறிப்பது அபராதத்திற்கு உரிய குற்றமாகும். இவ்வாறான செயல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகள் சிலர் போலீசாரின் தண்டனையில் இருந்து தப்பிப்பது உண்டு. ஆனால், இந்த கேரள சியாஸ் கார் ஓட்டி வசமாக போலீசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.
மாருதி சுஸுகி சியாஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது நீண்ட காலமாக மாருதி சுஸுகியின் விலைமிக்க செடான் காராக விளங்குகிறது. சியாஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.9.40 லட்சத்தில் இருந்து ரூ.12.45 லட்சம் வரையில் உள்ளன. ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரலாம். இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. மற்ற மாருதி கார்களை போன்று, இந்த காரும் டீசல் என்ஜினுடன் கிடைப்பதில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு காஸ்ட்லீயான மாருதி காரை வாங்கியவருக்கு அதனை முறையாக சாலையில் எவ்வாறு ஓட்டுவது என்பது தெரியவில்லை பார்த்தீர்களா? இவ்வாறு சட்டங்களை கடுமையாக்கினால்தான் குற்றங்கள் குறையும். இதனால், கேரள போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பலத்தரப்பட்ட மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








