காருக்கு பெயிண்ட் செலவு மிச்சம்! எங்கிருந்து தான் இப்படி எல்லாம் யோசிக்குறாங்க...

உலகில் அதிக எண்ணிக்கையில் கார் இயங்கும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்று. இதனாலேயே மற்றவர்களின் கார்களில் இருந்து வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக சில கார் ஓனர்கள் தங்களது கார்களில் என்னென்னமோ செய்கின்றனர். அதற்காக அவர்கள் பெரும்பாலும் செய்வது கார் மாடிஃபிகேஷன்கள் (Car Modification)-ஐ தான். ஆனால், இங்கு ஒருவர் வித்தியாசமான முறையில் தனது மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire) காரை மாற்றியுள்ளார். இந்த காரை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியின் பிரபலமான கார்களுள் ஒன்று, டிசைர் ஆகும். மாருதியின் அளவில் சிறியதான மற்றும் குறைந்த விலையிலான டிசைர் கார் ஒவ்வொரு மாதமும் அசால்ட்டாக 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

maruti suzuki dzire car decorated

இதனாலேயே இந்த மாருதி காரை பரவலாக எல்லா இடங்களிலும் காண முடிகிறது. மேலும், இதன் காரணமாகவே டிசைர் காரை அதன் உரிமையாளர்கள் சிலர் தங்களது விருப்பத்திற்கேற்ப ஸ்பெஷலானதாக மாற்றிக் கொண்டுள்ளனர். இருப்பினும், இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் டிசைர் காரை போன்று எங்கேயும் வேறெந்த டிசைர் காரையும் பார்க்க முடியாது.

ஏனெனில், அந்த அளவிற்கு முழுவதும் 1 ரூபாய் நாணயங்களால் இந்த டிசைர் கார் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், தூரத்தில் இருந்து பார்த்தால் இந்த டிசைர் காரின் உண்மையான நிறம் என்ன என்பது கூட தெரியாத அளவுக்கு நாணயங்கள் ஓட்டப்பட்டுள்ளன. ஆனால் காரை நெருக்கமாக பார்த்தால், ஒவ்வொரு நாணயங்களுக்கு இடையேயும் காரின் கிரே நிறத்தை காண முடிகிறது.

maruti suzuki dzire car decorated

நாணயங்களை நீளமான வெள்ளை நிற டேப் (Tape)-களை கொண்டு ஒட்டியுள்ளனர். அதாவது, காரின் மீது குறிப்பிட்ட இடைவெளியில் டேப்புகளை ஒட்டி அதன் மீது 1 ரூபாய் நாணயங்களை ஒட்டியுள்ளனர். நாணயங்களுக்கு இடையே வெள்ளை நிறத்திலான டேப்புகளையும் பார்க்க முடிகிறது. நாணயங்களின் வடிவங்கள் சீராக இல்லை.

ஆதலால், 1 ரூபாய் நாணயங்கள் மட்டுமின்றி 2 ரூபாய் நாணயங்களையும் பயன்படுத்தி இருப்பர் என நினைக்கிறோம். மேலும், 1 ரூபாய் நாணயங்கள் பல்வேறு விதமான வடிவங்களில் பயன்பாட்டில் உள்ளன. ஆதலால், இந்த டிசைர் காரில் முற்றிலுமாக 1 ரூபாய் நாணயங்களை மட்டுமே கூட ஒட்டி இருக்கலாம்.

maruti suzuki dzire car decorated

காரின் ஜன்னல் கண்ணாடிகளை தவிர்த்து அனைத்து உடல் முழுக்க ரூபாய் நாணயங்கள் ஒட்டப்பட்டு உள்ளன. மொத்தமாக எவ்வளவு ரூபாய் கார் முழுவதும் நாணயங்களாக ஒட்டப்பட்டு உள்ளன என்பது தெரியவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த டிசைர் கார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாணயங்களினால் சூரிய ஒளி எதிரொலித்து இந்த மாருதி சுஸுகி டிசைர் கார் பார்ப்பதற்கே பிரகாசமாக உள்ளது. இருப்பினும், இத்தகைய காரை எந்த தைரியத்தில் வெளியே கொண்டு செல்வது என்பது தெரியவில்லை. பொம்மை போல் வீட்டிற்கு உள்ளேயே நிறுத்தி வேண்டுமாயின் அழகு பார்த்துக் கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 14, 2025, 15:59 [IST]
English summary
Maruti suzuki dzire car decorated with 1 rupee coins in rajasthan
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X