பலவீனமான இதயம் உள்ளவங்க இந்த வீடியோவை பாக்காதீங்க... மாருதி கார் டிரைவரின் கவனம் சிதறியதால் நடந்த விபரீதம்...

கார் அல்லது டூவீலர் என எந்த வாகனமாக இருந்தாலும், சாலையில் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் செய்திகளில் பல முறை கூறி விட்டோம். ஆனால் இன்னமும் கூட, நிறைய பேர் இதனை பின்பற்ற தவறுகின்றனர். இதன் காரணமாக தொடர்ச்சியாக சாலை விபத்துக்கள் (Road Accidents) நடந்து கொண்டே இருக்கின்றன.

யூடியூப் (YouTube) தளத்தில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது பதிவிடப்பட்டுள்ளது. சாலையில் கவனமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்த மற்றும் கவனக்குறைவாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்திய டிரைவர்களை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Road Accident

இந்த வீடியோவின் முதல் க்ளிப்பில், மேற்கு வங்க மாநிலத்தின் வழியாக செல்லும் நெடுஞ்சாலை ஒன்றில், லாரி ஒன்றை மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார் ஓவர்டேக் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அதனை பின் தொடர்ந்து மற்றொரு கார் வந்து கொண்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்போர்டு கேமராவில்தான், விபத்தை தவிர்க்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மஹிந்திரா ஸ்கார்பியோ கார், லாரியை ஓவர்டேக் செய்த போது, சாலையின் வலது பக்கத்தில் ஃபோர்டு ஃபிகோ (Ford Figo) கார் ஒன்று பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. அதன் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் டிரைவர் பிரேக் பிடித்தார். அவர் கவனமாக இருந்த காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Maruti Suzuki Dzire Driver Crashes Into A Two-wheeler

இதை தொடர்ந்து மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பின் தொடர்ந்து வந்த காரும், ஃபோர்டு ஃபிகோ காரின் மீது மோதாமல் தப்பித்து விட்டது. இந்த சம்பவத்தில் கார்களின் டிரைவர்கள் கவனமாக இருந்த காரணத்தால்தான், சாலை விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோவின் 2வது க்ளிப்பில், மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தை நம்மால் பார்க்க முடிகிறது.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார் டிரைவரின் கவனம் சிதறியதே இந்த சாலை விபத்திற்கு காரணம். இந்த சம்பவத்தில், ஒரு ஆணும், பெண்ணும் டூவீலர் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மாருதி சுஸுகி டிசையர் கார் அவர்கள் மீது மோதியது.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் சாலையில் தடுமாறி விழுந்தனர். மாருதி சுஸுகி டிசையர் கார் டிரைவர்தான் இந்த விபத்திற்கு முழு காரணம். டூவீலரை பார்த்திருந்தால், அவர் சரியான நேரத்தில் காரை நிறுத்தியிருப்பார். ஆனால் கவனம் சிதறியதால், சரியான நேரத்தில் அவரால் காரை நிறுத்த முடியாமல் போய் விட்டது.

நல்ல வேளையாக அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. எனினும் விபத்தில் சிக்கிய பெண் எழ முடியாமல் சிரமப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த விபத்தில், டூவீலரில் வந்தவர்கள் மீதும் தவறு இருக்கிறது. அவர்கள் ஹெல்மெட் அணியவில்லை. ஆனால் அதை விபத்திற்கான காரணமாக நம்மால் எடுத்து கொள்ள முடியாது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து விட்டால், நம் கவனம் சாலையில் மட்டுமே இருக்க வேண்டும். சிறிய கவன சிதறல் கூட பெரும் சாலை விபத்துக்களுக்கு காரணமாக இருக்கலாம் என்பதை அனைவரும் மனதில் வைத்து கொண்டு செயல்படுவது நல்லது. அதேபோல் டூவீலர்களில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணியுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 30, 2023, 23:35 [IST]
English summary
Maruti suzuki dzire driver crashes into a two wheeler viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+