டிசையர் காரை ஸ்விஃப்ட் காராக மாற்றிய விநோத விபத்து.. வீடியோவை பார்த்து நிறைய கேளி பண்ணிட்டு இருக்காங்க!
மோசமான டைரக்சன் காரணமாக மிகவும் சோகமான சீன்கள் சில மிகவும் காமெடியான சீன்களாக திரைப்படங்களில் மாறிய கதையை நாம் பார்த்திருப்போம். இதைப்போன்ற ஓர் விபத்து சம்பவமே தற்போது இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. பொதுவாக வாகன விபத்து என்றாலே நம்மை பதைபதைக்கச் செய்துவிடும். ஒரு சிலர் விபத்து என்ற உடன் 'அய்யோ அந்த கதையே நமக்கு வேண்டாம்' என்று சொல்பவர்கள்கூட இருக்கிறார்கள். இவ்வாறு வேண்டாம் என சொல்லி ஒதுங்கி செல்பவர்கள்கூட இந்த விபத்து நிகழ்வை பார்த்துவிட்டால் ஒரு நிமிடம் நகைத்துவிட்டு போவார்கள்.
அந்த மாதிரியான விபத்து சம்பவமே இது. மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக டிசையர் (Dzire) கார் மாடல் உள்ளது. ஸ்விஃப்ட் (Swift) கார் மாடலை உருவாக்கப்பட்ட ஓர் கார் மாடலே டிசையர் ஆகும். இரண்டும் ஹேட்ச்பேக் வெர்ஷனே ஆகும்.

ஆனால், ஸ்விஃப்ட் கார் மாடலிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக இதன் பக்கம் சற்றே நீண்டு இருக்கும். எனவே கூடுதல் லக்கேஜ்களை இங்கே வைத்துக் கொள்ள முடியும். இதுவே அதன் தனி சிறப்பாக இருக்கின்றது. இந்த சிறப்பையே விபத்து ஒன்றின் வாயிலாக அந்த கார் மாடல் இழந்திருக்கின்றது.
அதாவது, டிசையர் கார் மாடல் விபத்தினால் இப்போது ஸ்விஃப்ட் கார் மாடலாக மாறி இருக்கின்றது. டிசையர் கார் மாடலின் பூட் பகுதி விபத்தினால் முழுமையாக நசுங்கி போயிருக்கின்றது. இதனாலேயே அது தற்போது ஸ்விஃப்ட் காரை போன்ற தோற்றத்திற்கு மாறியிருக்கின்றது. டிசையர் கார் மாடலின் இந்த நிலைமையே தற்போது இணையத்தில் அது கிண்டலுக்கும், கேளிக்கும் ஆளாக காரணமாக உள்ளது.
விபத்து எப்படி அரங்கேறியது? எங்கு அரங்கேறியது? எந்த கார் மாடலுடன் அது விபத்தைச் சந்தித்தது? போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. ஆனால், வீடியோவை வைத்து பார்க்கையில் விபத்தைச் சந்தித்து இருப்பது பழைய தலைமுறை ஸ்விஃப்ட்டை போல தெரிகின்றது. இதைவிட அதிக பாதுகாப்பு தரம்மிக்க காராகவே இப்போது விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி டிசையர் உள்ளது.
அது குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் உச்சபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கான ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கை பெற்றது. இதுமட்டுமல்ல சமீபத்தில் விபத்தில் சிக்கிய புதிய தலைமுறை டிசையர் கார் மாடல்கள் தாங்கள் மிகவும் உறுதியானவை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றன. ஒன்றல்ல, இரண்டல்ல பல விபத்துகள் இதுவரை அரங்கேறி இருக்கின்றன.
அனைத்திலும் தான் ஓர் பாதுகாப்பான கார் மாடல் என்பதையே உறுதிச் செய்திருக்கின்றது. புதிய தலைமுறை டிசையர் இந்தியாவில் ரூ. 6.79 லட்சம் என்கிற மிக மிக குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 10.14 லட்சம் மட்டுமே ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
புதிய டிசையர் பாதுகாப்பு தருவதில் மட்டுமல்ல மைலேஜ் தருவதிலும் மிக சிறந்த கார் மாடலாக உள்ளது. இதன் பெட்ரோல் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 24.79 கிமீ முதல் 25.71 கிமீ வரையில் மைலேஜ் தரும். இதன் சிஎன்ஜி ஆப்ஷன் கிலோ ஒன்றிற்கே 33 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பாதுகாப்பான கார் மாடல்களில் புதிய தலைமுறை டிசையர்-ம் ஒன்றாகும். அடித்தட்டு மக்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை பெற வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த கார் மாடலை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








