5 ஸ்டார்களை சும்மா தூக்கி கொடுத்திட மாட்டாங்க... விபத்தில் மாருதி கார் செய்த மேஜிக்!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்து வருகிறது. மாருதி சுஸுகியின் இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களுள் ஒன்றாக இருப்பது, டிசைர் (Dzire) கார் ஆகும். இதனாலேயே அவ்வப்போது டிசைர் காரை மறக்காமல் மாருதி சுஸுகி நிறுவனம் அப்டேட் செய்து விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிசைர் கார் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Global NCAP Crash Test)-இல் 5க்கு முழு 5 நட்சத்திரங்களை பெற்று ஆச்சிரியப்படுத்தி இருந்தது.
அதனை காட்டிலும் ஆச்சிரியமாக, 5-ஸ்டார்களை பெற்ற நியூ-ஜென்ரேஷன் டிசைர் கார் ஒன்று விபத்தில் சிக்கி சின்னா பின்னாமாகி உள்ளது. இதுதான் காரின் இறுதி நிலை என வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விபத்தினால் காரில் ஏற்பட்ட சேதாரங்களை இந்த வீடியோவில் நெருக்கமாக காட்டியுள்ளனர்.

இதில் பல்வேறு விஷயங்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. குறிப்பாக, 6 ஏர்பேக் (Airbag)-களை கொண்ட காரில் வெறும் 2 ஏர்பேக்குகள் மட்டுமே விபத்தின்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளன. மத்திய அரசு கடந்த சில வருடங்களில், கார்களில் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கி உள்ளது. இதன் விளைவாக, முன்பு விலையுயர்ந்த கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த 6 ஏர்பேக்குகள் இப்போது பட்ஜெட் விலையிலான கார்களிலும் வழங்கப்பட ஆரம்பித்துள்ளன.
இதனால், 6 ஏர்பேக் கொண்ட கார்களில் பாதுகாப்பாக செல்கிறோம் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், 6 ஏர்பேக் கொண்ட காரில் 2 ஏர்பேக் மட்டுமே சரியான நேரத்தில் விரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த அதிர்ச்சி உடன் அப்படியே காரின் பின்பக்கத்திற்கு சென்றால், பின்பக்கத்தில் அப்பளம் போல் நசுங்கி இருக்கும் இந்த டிசைர் கார் மேலும் நம்மை மிரள வைக்கிறது.

விண்ட்ஷீல்டு உள்பட காரின் பின்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. காரின் பக்கவாட்டில், கதவுகள் சேதமடைந்துள்ள நிலையில், முன் இடதுப்பக்க சக்கரத்தின் ரிம் ஆனது டயர் உடன் சேர்த்து முற்றிலுமாக சிதலடைந்துள்ளது. காரின் முன்பக்கத்தில் பம்பர், இரு ஹெட்லைட்கள் மற்றும் கிரில் பகுதி என அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு காரின் வெளிப்புறம் முற்றிலுமாக சேதமடைந்து இருப்பினும், காருக்கு உள்ளே கேபின் நல்ல நிலையில் தான் உள்ளது. இதனாலேயே விபத்தில் காருக்குள் இருந்தவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதாவது, 2 ஏர் பேக்குகள் மட்டுமே விரிவடைந்த போதிலும், உள்ளே இருந்தவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருந்துள்ளனர். 6 ஏர் பேக் விரியாமல் போனதற்கு காரணம் உள்ளது.

அதாவது, ஏர்பேக்குகள் சென்சார்கள் மூலமாக செயல்படுகின்றன. இந்த குறிப்பிட்ட டிசைர் காரில் பக்கவாட்டில் மோதல் ஏற்படவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள சென்சார்கள் மோதலை உணராத காரணத்தினால் குறிப்பிட்ட சில ஏர்பேக்குகள் விரிவடையவில்லை. மேலும், விபத்தின் போது இந்த காரில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே விரிவடைந்துள்ளன என்பதும் உறுதியாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பித்துள்ளனர் என்பதே முதலில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். அடுத்த ஆச்சிரியம் என்னவென்றால், இவ்வளவு பெரிய விபத்தில் காரில் இருந்த அனைத்து ஏர்பேக்குகளும் விரிவடையாதது ஆகும். காரின் பக்கவாட்டில் மோதல் ஏற்படாவிடினும், அனைத்து ஏர்பேக்குகளும் பயணிகளை காக்கும் பொருட்டு விரிவடைய வேண்டியது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications









