கடவுளாக மாறிய மாருதி கார்! தூசியை ஊதி விட்டு தாலி கட்டிய மாப்பிள்ளை! வீடியோவை பார்த்து வாயை பிளக்கும் மக்கள்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்களில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு (Safety) இல்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பொய்யாக்கும் வகையிலான ஆச்சரிய சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. அதுகுறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
ரிதம் வினோத்பாய் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவரும், அவரது குடும்பத்தினரும் புத்தம் புதிய மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரில் சென்று கொண்டிருந்தனர். அகமதாபாத் நகரில் இருந்து இடார் என்ற நகரை நோக்கி அவர்களின் கார் பயணித்தது. இவை இரண்டுமே குஜராத் மாநிலத்தில் உள்ள நகரங்கள் ஆகும். இந்த காரை தொடர்ந்து மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது.

இன்னும் நம்பரே வரலையா!
அது ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) ஆகும். இந்த காரிலும் ரிதம் வினோத்பாயின் உறவினர்கள்தான் வந்து கொண்டிருந்தனர். இதில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் புத்தம் புதியது ஆகும். இன்னும் அந்த காருக்கு நம்பரே வரவில்லை. ரிஜிஸ்ட்ரேஷனுக்கு விண்ணப்பம் மட்டுமே செய்துள்ளனர். அதற்குள்ளாக அந்த கார் பயங்கரமான விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது. திருமணத்திற்கு செல்லும் வழியில் ஒரு பெட்ரோல் பங்க் முன்பாக அந்த கார் விபத்தில் சிக்கியது.
என்னங்க சொல்றீங்க? நம்பவே முடியலயே!
இதில் மணமகன் ரிதம் வினோத்பாய் உள்பட பலரும் காயமடைந்துள்ளனர். இங்கே ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், மணமகன் ரிதம் வினோத்பாய் அன்றைய தினமே மணமகளுக்கு தாலி கட்டியுள்ளார். விபத்திற்கு பின் உடனடியாக இடார் பகுதிக்கு சென்று அவர் திருமணத்தை முடித்துள்ளார். இந்த விபத்து சம்பவத்தின் வீடியோ (Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரல் (Viral) ஆகி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
எப்படிங்க நடந்துச்சு?
இந்த விபத்து எவ்வளவு பயங்கரமானது? என்பது இந்த வீடியோவின் மூலம் உங்களுக்கு புரிந்திருக்கும். பெட்ரோல் பங்க் முன்பாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் டிரைவர் 'ஸ்லோ' செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் திடீரென 'ஸ்லோ' ஆனதால், பின்னால் வந்து கொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 கார் அதன் மீது மோதியுள்ளது.
டோட்டல் டேமேஜ்!
இந்த விபத்தின்போது மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் சாலையில் ஒரு சில முறை உருண்டதை வீடியோவில் நம்மால் காண முடிகிறது. இதனால் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் சேதமடைந்துள்ளது. அத்துடன் ஹூண்டாய் ஐ20 காரின் முன் பகுதியும் முற்றிலுமாக சேதமாகி விட்டது. இருப்பினும் உயிரிழப்புகள் நிகழவில்லை என்பதாலும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி அதே நாளில் திருமணம் நடைபெற்று விட்டதாலும், மணமகன், மணமகள் என இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இனி யாரும் கிண்டல் பண்ண முடியாது!
இதற்கிடையே விபத்தின்போது உள்ளே இருந்த பயணிகளுக்கு மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் வழங்கிய பாதுகாப்பையும் இங்கே பேசியாக வேண்டும். ஒரு சில முறை உருண்ட போதிலும் கூட, அனைவரின் உயிரையும் அந்த கார் காப்பாற்றியுள்ளது. குறிப்பாக மணமகன் ரிதம் வினோத்பாய் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். வேறு ஒரு காரில் சென்று அவர் மணமகளுக்கு தாலி கட்டியுள்ளார்.
நல்ல காரா இருக்கேப்பா!
தற்போது பேசு பொருளாக மாறியுள்ள மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார், மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இது இந்திய சந்தைக்கு புது வரவு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பிரபலமாகி வரும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை குறிப்பிடலாம். ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களுக்கு மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா விற்பனையில் சவால் அளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








