பிரதமர் மோடியின் அந்த வங்கி கணக்கில் 3 கோடி ரூபாயை போட்டுவிட்ட மாருதி சுஸுகி.. எதுக்குனு தெரியுமா?
மாபெரும் வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) ரூ. 3 கோடியை பிரதமர் மோடியின் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் போட்டு விட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் நிவாரண நிதி கணக்கிலேயே அவர்கள் இந்த பெரும் தொகையைப் போட்டு விட்டிருக்கின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்த நிலையிலேயே மாநிலங்களுக்கு நிவாரண நடவடிக்கையை மேற்கொள்ள இந்த பெரும் தொகையை மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த உதவி அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியாக அமைய இருக்கின்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை மழை வெள்ளம் புரட்டி போட்டியிருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே இந்த இரு மாநிலங்களிலும் தொடர் கனமழை பொழிந்து வருகின்றது.

இதனால், இரு மாநிலங்களின் முக்கிய பகுதிகளும் மழை நீரில் மூழ்கி இருக்கின்றன. இதில் உயிரியிழப்புகளும் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கேரளா வயநாடு நிலச்சரிவின் அதிர்ச்சியில் இருந்தே இந்தியர்கள் வெளிவராத நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சியாக ஆந்திரா, தெலங்கானா வெள்ள பாதிப்பு சம்பவம் அமைந்திருக்கின்றது.
குறிப்பாக, ஆந்திரா மழை வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றது. மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லும் அளவிற்கு மழை வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனால் ரயில் போக்குவரத்து மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, மழை வெள்ளம் சாலைகளிலும் சூழ்ந்துக் காணப்படுவதால் அம்மாநிலங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்படைந்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் தன்னுடைய நிவாரண நிதி நடவடிக்கையை முன்னெடுத்து இருக்கின்றது. தற்போது 3 கோடி ரூபாயை பிரதமரின் நிவாரண நிதி-க்கு வழங்கி இருக்கின்றது.
இந்த செயலின் வாயிலாக மாருதி சுஸுகி இந்தியாவின் மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட நிறுவனம் என்பதை வெளிக்காட்டி இருக்கின்றது. இந்த நிறுவனம் பட்ஜெட் வாகன பிரியர்களைக் கவரும் நோக்கில் சமீபத்தில் அதன் குட்டி கார் மாடல்களான எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ கே10 ஆகிய இரண்டு கார் மாடல்களின் குறிப்பிட்டு வேரியண்டுகளின் விலையை குறைத்தது.
வரும் பண்டிகை நாட்களைக் கருத்தில் கொண்டும், இந்த குட்டி கார்களுக்கு கிடைக்கும் வரவேற்புக் குறைந்துக் காணப்படுவதன் விளைவாகவும் அவற்றின் விலையை நிறுவனம் குறைத்தது. ஆல்டோ கே10 கார் மாடலின் விஎக்ஸ் வேரியண்ட்டின் விலையே குறைக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 6,500 வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, எஸ்-பிரெஸ்ஸோ-வின் எல்எக்ஸ்ஐ வேரியண்டின் விலையும் குறைக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. ஆல்டோ கே10 இந்தியாவில் ரூ. 3.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், எஸ்-பிரெஸ்ஸோ ரூ. 4.26 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியை போலவே இன்னும் பல்வேறு நிறுவனங்கள் வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு உதவும் விதமாக நிவாரண உதவியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே விற்பனை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் மாருதி சுஸுகி நிறுவனம், தற்போது மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 3 கோடியை வழங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








