இந்த வயதில் முடியாது என்று யார் சொன்னா? மாருதி சுஸுகி ஜிம்னியை ஒரே நிறத்தில் வாங்கிய தாய்-மகன்...

83 வயதான பெண்மணி ஒருவர் மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்தை டெலிவிரி பெற்று, சாலையில் அசால்ட்டாக ஓட்டி சென்றுள்ளார். பார்ப்போரை பிரமிக்க வைக்கக்கூடிய இந்த நிகழ்வு குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.

மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்திற்கான டெலிவிரிகள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஆவலாக ஜிம்னியை முன்பதிவு செய்தவர்கள் ஒருவர்பின் ஒருவராக வாகனத்தை டெலிவிரி பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் 83 வயதான பெண்மணி ஒருவர் ஜிம்னி வாகனத்தை டெலிவிரி பெற்றுள்ளார்.

இதுகுறித்த படங்கள் ஃபேஸ்புக்கில் ஹர்மிட் அஹுஜா என்பவரது பக்கத்தில் இருந்து வெளியாகியுள்ளன. ஹர்மிட் அஹுஜா வேறு யாரும் கிடையாது, ஜிம்னியை டெலிவிரி எடுத்த அந்த 83 வயது பெண்மணியின் மகன் ஆவார். ஹர்மிட் அஹுஜாவிடமும் ஜிம்னி வாகனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது 83 வயதான தாய் மாருதி சுஸுகி ஜிம்னி ஆட்டோமேட்டிக் காரை வாங்கியுள்ளதாக ஹர்மிட் அஹூஜா தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இன்ஸ்டா பதிவில், அவரது தாய் ஜிம்னியை டெலிவிரி எடுக்கும்போது காட்சிப்படுத்தப்பட்ட வீடியோவையும் ஹர்மிட் அஹூஜா பதிவிட்டுள்ளார். 83 வயதாகும் தனது தாய் தான் உலகிலேயே மிகவும் அதிக வயதில் 5-கதவு ஜிம்னியை வாங்கிய வாடிக்கையாளராக இருக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ள ஹர்மிட் அஹுஜா, தனது ஜிம்னியின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

jimny bought by 83-old lady

ஹர்மிட் அஹுஜாவிடம் இருப்பது மேனுவல் கியர்பாக்ஸை கொண்ட ஜிம்னி ஆகும். தாய்-மகன் இருவரிடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரியாக கருப்பு நிறத்தில் ஜிம்னியை வாங்கியுள்ளனர். வாகனத்தை வாங்கியது மட்டுமின்றி, அதனை சாலையில் ஓட்டியும் அசத்தியுள்ளார் இந்த 83 வயதான பெண்மணி. மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா வாகனங்களுடன் ஒப்பிடுகையில் ஜிம்னியை ஓட்டுவது எளியது ஆகும்.

இதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம். முக்கியமாக, தார் & குர்காவை விட சிறிய அளவிலான தோற்றம் ஜிம்னிக்கு நன்மையாக அமைகிறது. ஏனெனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் சிறிய அளவிலான வாகனங்களை ஓட்டுவதே எளியமானது. அதேபோல், சிறிய அளவிலான வாகனங்கள் எடை குறைவானவைகளாக இருக்கும் என்பதை நான் கூற வேண்டியதில்லை.

jimny bought by 83-old lady

எடை குறைவாக இருந்தால், வாகனத்தை கண்ட்ரோல் செய்வதும், ஆக்ஸலரேஷனை கொடுப்பதும் எளியதாகிவிடும். இத்தகைய காரணங்களினாலேயே மஹிந்திரா தாரை விட ஜிம்னி அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றது என கூறுகிறோம். இந்த செய்தியில் நாம் பார்க்கும் 83 வயது பெண்மணியின் மாருதி சுஸுகி ஜிம்னி வெளிப்பக்கத்தில் மட்டுமின்றி, உட்பக்க கேபினில் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் உள்ளது.

இந்த வயதான பெண்மணி டெலிவிரி பெற்றிருப்பது ஜிம்னியின் டாப் வேரியண்ட்டான ஆல்பா ஆகும். இதில், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூடிய 9-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. அத்துடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான், எலக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் & மடக்கக்கூடிய ரியர்வியூ மிரர்கள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.

jimny bought by 83-old lady

ஸ்டேரிங் சக்கரத்தில் ஆடியோ, ப்ளூடூத் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல் பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர்வியூ கேமரா முதலியவை கொடுக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 83 வயதான பெண்மணி ஓட்டுகிறார் என்றால், மாருதி சுஸுகியின் நவீன தரத்திலான வாகனமாக வெளிவந்து இருக்கும் ஜிம்னி ஓட்டுவதற்கு எந்த அளவிற்கு எளிமையானது என்பதை பாருங்கள். இவரது மகன் ஹர்மிட் அஹுஜாவிற்கும் 60 வயது இருக்கும்போல் தெரிகிறது. இவர்களை இருவரினால் ஜிம்னிக்கு கூடுதல் விளம்பரம் கிடைத்துள்ளது. இவர்களை போல் வயதானவர்கள் தைரியமாக ஜிம்னியை வாங்க இனி முன்வருவர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 5, 2023, 20:40 [IST]
English summary
Maruti suzuki jimny bought by 83 old lady
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X