எதுக்கு கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கி காசை வீணாக்கணும்? சில லட்சங்களில் மாருதி காரை இப்படி மாற்றிவிடலாம்!!
மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) வாகனத்தை விலையுயர்ந்த மெர்சிடிஸ் ஜி-வேகன் எஸ்யூவி வாகனத்திற்கு இணையாக உரிமையாளர் ஒருவர் மாடிஃபை செய்துள்ளார். இந்த மாடிஃபை ஜிம்னி வாகனத்தை பற்றியும், மெர்சிடிஸ் ஜி-வேகன் வாகனத்தை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மாருதி சுஸுகி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'ஜிம்னி' என்ற பெயரில் அதன் புதிய 5-கதவு ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மஹிந்திராவின் தார் வாகனத்திற்கு போட்டியாக கொண்டுவரப்பட்ட ஜிம்னியை இதுவரையில் வாடிக்கையாளர்கள் பலர் டெலிவிரி எடுத்து உள்ளனர்.

மஹிந்திரா தார் வாகனத்தை போன்று, ஜிம்னியை வாங்கும் வாடிக்கையாளர்களுள் சிலர் அதனை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்கின்றனர். இதற்காகவே, ஆஃப்டர்-சேல்ஸ் மார்க்கெட்டில் பல்வேறு விதங்களில் ஆக்ஸஸரீ தொகுப்புகள் உள்ளன. இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளில் பிரபலமானது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 தொகுப்பு ஆகும். மெர்சிடிஸின் ஏஎம்ஜி ஜி63 வாகனத்தை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
மஹிந்திரா தார், மாருதி ஜிம்னி வாகனங்களை போன்று ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் தான் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனமும். ஆனால், அவற்றை காட்டிலும் இந்த மெர்சிடிஸ் வாகனம் விலைமிக்கது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் கார்களிலேயே மிக விலையுயர்ந்தது ஏஎம்ஜி ஜி63 ஆகும். இதனால் இந்த மெர்சிடிஸ் வாகனத்தை நம் நாட்டில், சாலைகளில் காண்பது அரிதானது.

இதனாலேயே, தார் வாகனத்தை வாங்கியவர்களில் சிலர் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனம் போன்று தங்களது தார் வாகனத்தை மாற்றிக் கொண்டதை கடந்த சில ஆண்டுகளில் பார்த்துள்ளோம். இந்த நிலையில், சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்தை அதன் உரிமையாளர் ஒருவர் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனம் போன்று மாடிஃபை செய்துக் கொண்டுள்ளார். இதற்கு அவர், ஆஃப்டர்-மார்க்கெட் ஜி-வேகன் ஆக்ஸஸரீ தொகுப்பை பயன்படுத்தியுள்ளார்.
இந்த பணிகளை ஆட்டோஸ்டைலின் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மெர்சிடிஸ் ஜி-வேகன் ஆக்ஸஸரீ தொகுப்பினால், இந்த குறிப்பிட்ட மாருதி சுஸுகி ஜிம்னி வாகனம் முற்றிலுமாக கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. வாகனத்தின் முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள் மாற்றப்பட்டுள்ளன.

பொனெட்டில் டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, ரூஃப்-இல் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனத்தின் அகலத்தை அதிகரிக்கும் முயற்சியாக படிக்கட்டுகள் மற்றும் ஃப்ளேர்டு ஃபெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மெர்சிடிஸ் ஜி-வேகன் காரில் எக்ஸாஸ்ட் குழாய் வாகனத்தின் சைடில் இருக்கும், அதாவது வாகனத்தின் பின்பக்கத்தில் இருக்காது. அதேபோன்று, இந்த கஸ்டமைஸ் ஜிம்னியிலும் சைடில் எக்ஸாஸ்ட் குழாயை பொருத்தியுள்ளனர்.
இந்த மாற்றத்திற்காக வாகனத்தின் எக்ஸாஸ்ட் சிஸ்டம் அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளதால், ஜிம்னியின் வழக்க எக்ஸாஸ்ட் சத்தத்தில் இருந்து வித்தியாசமான சத்தத்தை இந்த கஸ்டமைஸ் வாகனத்தில் கேட்கலாம். இதுமட்டுமின்றி, பிரபஸ் அலாய் சக்கரங்கள், மாடிஃபை செய்யப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள், மெர்சிடிஸ் & ஏஎம்ஜி லோகோக்களும் இந்த கஸ்டமைஸ்ட் ஜிம்னியில் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனத்தை பற்றி அறியாதவர்கள், நிச்சயமாக இந்த கஸ்டமைஸ் ஜிம்னியை மெர்சிடிஸ் வாகனம் என்றே நினைப்பர். அந்த அளவிற்கு மாடிஃபிகேஷன் பணிகள் அனைத்தும் கணக்கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. நம் இந்தியாவில் மெர்சிடிஸ் பிராண்ட்டிற்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த ஜிம்னி வாகனத்தின் உரிமையாளரும் அத்தகையவர்களுள் ஒருவராகவே இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









