Maruti Suzuki இப்படி செய்யும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... நாடாளுமன்றம் வரையில் சென்ற விஷயம்!!
புகழ்பெற்ற லடாக் ஏரியில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது புதிய ஜிம்னி வாகனத்தின் விளம்பர படப்பிடிப்பை நடத்தி இருப்பது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. நாடாளுமன்றம் வரையில் சென்றுள்ள இந்த சர்ச்சை குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதி சுஸுகி ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் லட்சக்கணக்கில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனத்தில் இருந்து புதியதாக விற்பனைக்கு வந்து இருக்கும் வாகனம் ஜிம்னி ஆகும். ஜப்பானில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜிம்னியை மஹிந்திராவின் தாருக்கு போட்டியாக மாருதி சுஸுகி இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்திற்கான முன்பதிவுகள் அப்போதே துவங்கப்பட்டுவிட்டன. இன்னும் காரின் டெலிவிரிக்காக மட்டுமே வெயிட்டிங். சந்தைக்கு புதியதாக வரும் எந்தவொரு வாகனத்திற்கும் விளம்பரம் என்பது அவசியமாகும். அப்போதுதான் அந்த வாகனம் நாட்டில் மூலை முடுக்கில் உள்ள மக்களின் கவனத்தையும் பெறும். அந்த வகையில் மாருதி சுஸுகியும் ஜிம்னியின் பல்வேறு விளம்பர வீடியோக்களை கடந்த சில மாதங்களில் வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு விளம்பர வீடியோ, லடாக்கில் பிரபலமான, வரலாற்று சிறப்புமிக்க ஏரி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லடாக் ஏரியில் மற்ற பொது மக்கள் தங்களது வாகனத்தை இறக்கினாலே அந்த விஷயம் வைரலாகிவிடும் நிலையில், மாருதி சுஸுகி போன்ற மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனம் இவ்வாறு செய்திருக்கும் விஷயம் லடாக் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ஜம்யங் டிசெரிங் நம்க்யல் வரையில் சென்றுள்ளது.
I condemn @Maruti_Corp's irresponsible advertisement act. The fragile ecosystem should not be destroyed for the sake of commercial gain. I urge the administration to halt the shooting & take legal action as necessary. Let's preserve the unique beauty of Ladakh for future gen. pic.twitter.com/2IaC4vUkcI
— Jamyang Tsering Namgyal (@jtnladakh) April 10, 2023
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லடாக் எம்பி, அந்த விளம்பர படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றுடன் டுவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை குறிப்பிட்டு லடாக் எம்பி தனது டுவிட்டர் பதிவில், "மாருதி சுஸுகியின் பொறுப்பற்ற விளம்பர செயலை கண்டிக்கிறேன். பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பை வணிக லாபத்திற்காக அழிக்கக்கூடாது.
படப்பிடிப்பை நிறுத்தவும், தேவையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். லடாக்கின் தனித்துவமான அழகை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாப்போம்" என குறிப்பிட்டுள்ளார். லடாக் எம்பி டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோ வெறும் 15 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ளது. இந்த வீடியோவில், கரடு முரடான பாறை கற்களை கொண்ட ஏரிக்கரையில் இருந்து ஜிம்னி ஏரிக்குள் நுழைந்து, மீண்டும் ஏரியை விட்டு வெளியே வருவதை காண முடிகிறது.

இது உண்மையில் லடாக் ஏரியின் அழகை சீர்க்குலைக்க கூடிய செயலாகும். லடாக் எம்பியின் வீடியோவில், ஒருமுறை மட்டுமே ஜிம்னி வாகனத்தை அவ்வாறு செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால் படப்பிடிப்பில், நேர்த்தியான காட்சிகளுக்காக எத்தனை முறை இவ்வாறு செய்து, செய்து பார்த்தார்களோ... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இவ்வாறான கரடு முரடான பாதைகளிலும், நீர்நிலைகளில் பயணிப்பதற்கும் மாருதி சுஸுகி ஜிம்னி ஏற்ற வாகனமாகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
மாருதி சுஸுகி நிறுவனத்தின் மீது பலர் நல்ல மதிப்பை வைத்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனமோ இவ்வாறான செயல்களில் ஈடுப்படுகிறது. இந்த சம்பந்தப்பட்ட விளம்பர வீடியோவை வெளியிடக்கூடாது என விரும்புகிறோம். மாருதி சுஸுகிக்கு அபராதங்களும் விதிக்கலாம். ஏனெனில் அப்போதுதான் மற்ற பொதுமக்களும் தங்களது வாகனத்தை லடாக் ஏரியில் இறக்குவதற்கு அஞ்சுவர். மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இவ்வாறான யோசனையை வைத்திருந்தால், அதனை கைவிடும்.


Click it and Unblock the Notifications








