இது காரா இல்ல அரக்கனா.. என்னங்க ரோடே இல்லாத பாதையில எல்லாம் இந்த காரு இவ்ளோ சூப்பரா போகுது!

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த கார் மாடல்களில் மாருதி சுஸுகியின் ஜிம்னி-யும் ஒன்றாகும். இது ஓர் மிக சிறந்த ஆஃப்-ரோடர் வாகனம் என கார் ஆர்வலர்களால் போற்றப்பட்டு வருகின்றது. இதையே தன்னுடைய செயல்பாட்டின் வாயிலாக இந்த கார் உறுதி செய்திருக்கின்றது.

அதாவது, பயணிக்க துளியளவும் உகந்தது அல்ல என்று கூறக் கூடியோ ஓர் சாலையில் அந்த கார் திறம்பட இயங்கும் வீடியோவே வெளியாகி இருக்கின்றது. அந்த காரின் செயல்பாடு, அதை அரக்கன் என கூறும் வகையில் இருக்கின்றது. இத்தகைய திறமையை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே ஆஃப்-ரோடு பிரியர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Maruti suzuki jimny suv

தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில், மாருதி சுஸுகி ஜிம்னி, புகையை கிளப்பிக் கொண்டு ஆக்ரோஷமாக அரக்கன் ஒருவன் செல்லுவதைப் போன்ற காட்சிகளே இடம் பெற்றிருக்கின்றன. பாறை கற்கள் நிறைந்த அந்த பாதையில் ஓர் வாகனம் பயணிப்பது என்பதே சாத்தியமற்றது. அதுவும், அந்த பாதை மிகவும் செங்குத்தானது ஆகும்.

சாதாரணமான செங்குத்தான பாதையில் பயணிக்கவே ஒரு சில வாகனங்கள் திணறுகின்ற நிலையில், ஜிம்னி, பாறை கற்கள் நிறைந்த செங்குத்தான பாதையில் பயணித்து அந்த பாதையை அசால்டு செய்துவிட்டது. ஜிம்னியின் இந்த திறனுக்கு, அக்காரில் சுஸுகி நிறுவனம் அனைத்து ரோடுகளையும் சமாளிக்கும் திறனை வழங்கி இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

Maruti suzuki jimny front

என்ன தான் இதுபோன்ற சிறப்பம்சங்கள் பல புதிய வாகனங்களில் வழங்கப்படும் என்றாலும், பாதுகாப்பற்ற சாலையில் பயணிப்பது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம் ஆகும். இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த பாதையில் பயணித்த பின்னர் ஜிம்னியில் சில சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

சமீபத்தில் மாற்றப்பட்ட பின் பக்க டெயில்கேட்டின் லாக் சிஸ்டத்தில் இருந்து சத்தம் வர தொடங்கி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் சில பிரச்னைகள் அந்த காரில் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், வீடியோ தொகுப்பாளர் அதுகுறித்த முழுமையான தகவல்களை வெளியிடவில்லை. ஜிம்னி இந்த பாதையை சமாளித்து திறம்பட முன்னேறியதற்கு அதன் ஆஃப்-ரோடு தொழில்நுட்பம் மட்டுமல்ல ஓட்டுநரின் சாமர்த்தியமும் ஓர் காரணமாக இருக்கின்றது.

Maruti suzuki jimny rear

அவர் பாதையின் தேவைக்கேற்ப கியரை ஆரம்ப நிலையிலேயே வைத்து ஜிம்னியை இயக்கி இருக்கின்றார். இதில் ஏதேனும் சிறிய தவறை அவர் செய்திருந்தால்கூட மிகப் பெரிய பாதிப்பிற்கு அந்த கார் ஆளாகி இருக்கக் கூடும். நல்ல வேளையாக அதுபோன்ற அசம்பாவிதம் எதுவும் அரங்கேறவில்லை.

மலைப் பாதை மிகவும் ஆபத்தானது. அதிலும், கரடு-முரடாக காட்சியளிக்கும் மலைப் பாதை முற்றிலும் அபாயகரமானது ஆகும். வாகனம் செல்லும் பாதையையே திசை திருப்பி ஆபத்தில் சிக்க வைக்கும் அளவிற்கு அவை ஆபத்தானவை. இதனால்தான் முறையான முன் அனுபவம் இல்லாதவர்கள் ஆஃப்-ரோடு பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது.

இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 103எச்பி மற்றும் 134என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் ஜிம்னியில் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆஃப்-ரோடு வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது. ஆஃப்-ரோடு டிராவலை அதிகம் நேசிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருப்பதன் விளைவாகவே ஆஃப்-ரோடு கார்களுக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஜிம்னி, தார் எஸ்யூவிக்கு போட்டியாகக் கொண்டு வரப்பட்ட ஆஃப்-ரோடர் எஸ்யூவி என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 22:13 [IST]
English summary
Maruti suzuki jimny drives most dangerous road video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X