உலகின் மிகவும் அபாயகரமான சாலையில் கெத்தாக பயணித்த இந்திய தயாரிப்பு! மிரட்டும் சாலையை மிரட்டி விட்ட அந்த காட்சி

இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான கார் மாடல்களில் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny)-யும் ஒன்றாகும். இந்த காரை மஹிந்திரா தார் காருக்கு போட்டியா மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

மிக சிறப்பான வரவேற்பை இந்த கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே உலகின் மிகவும் அபாயகரமான சாலையில் மிகவும் கெத்தாக பயணிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி கார் ஆர்வலர்களை மிரட்டச் செய்திருக்கின்றது மாருதி சுஸுகி ஜிம்னி. உலகின் மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக ஜம்முவில் உள்ள சச் பாஸ் அறியப்படுகின்றது.

Jimny drives through deadliest road

சாலையே இல்லாத வழித்தடங்களை இந்த பகுதியில் அதிகளவில் காண முடியும். குறிப்பாக, பெரிய பாறை கற்கள் நிறைந்த சாலையே இந்த பகுதியில் அதிகம். இத்தகைய அமைப்பைக் கொண்டிருப்பதனாலேயே உலகின் மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக சச் பாஸ் கூறப்படுகின்றது. இவ்வாறு கூறுவதற்கு அதன் கரடு-முரடான பாதை மட்டுமே காரணம் அல்ல, சிறிது கவனம் தவறினாலும் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுவிடும்.

இதனாலேயே அதனை ஆபத்தான சாலைகளில் ஒன்றாக கருதுகின்றனர். அதேவேளையில், மிகவும் உத்வேகமான ஆஃப்-ரோடு டிராவலை அனுபவிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த பகுதி அல்வா போன்றது ஆகும். மேலும், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 மீட்டர் உயரத்தில் இது அமைந்து இருக்கின்றது.

இதனால்தான் இந்த பகுதியைத் தேர்வு செய்து சென்றிருக்கின்றார் அந்த குறிப்பிட்ட மாருதி சுஸுகி ஜிம்னி காரின் உரிமையாளர். அதேவேளையில், இந்த இடத்திற்கு பயணிப்பதற்கு முன்னரே அவர், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த வாகனமாக மாற்றும் விதமாக சில மாடிஃபிகேஷன்களை அந்த காரில் அவர் செய்திருக்கின்றார்.

ஏற்கனவே 4X4 சிஸ்டம் போன்ற பன்முக ஆஃப்-ரோடிங் அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், கூடுதலான சில அம்சங்களையும் அவர் சேர்த்து இருக்கின்றார். சச் பாஸில் உள்ள குறிப்பிட்ட வழித் தடங்களில் ஒரே நேரத்தில் ஒரு வாகனத்தால் மட்டுமே பயணிக்க முடியும்.

இந்த பாதையில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் பயணிக்கும் எனில் மிகப் பெரிய ஆபத்தான சூழலே உருவாகும். இத்தகைய பாதையே மாருதி சுஸுகி சர்வசாதாரணமாக கடக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே கூறியதைபோல் இத்தகைய திறனை அக்கார் வெளிப்படுத்துவதற்கு அதில் செய்யப்பட்ட மாற்றங்களே முக்கிய காரணமாக உள்ளது.

காரின் டயர் போன்ற சில அம்சங்களை அவர் மாற்றி இருக்கின்றார். இதனாலேயே போதுமான கிரிப் சாலையுடன் அந்த காருக்கு கிடைத்து அதனால் அந்த சாலையை எளிதில் கடக்க முடிந்திருக்கின்றது. இந்த காருக்கு முன்னதாக சென்ற ஃபோர்ஸ் நிறுவனத்தின் டிராக்ஸ் ஆஃப்-ரோடு வாகனம் அதே பாதையை கடக்க லேசாக திணறிய நிலையில், அதேபாதையை ஜிம்னி சுலபமாக கடந்தது உண்மையிலேயே வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கரடு-முரடான பாதை மட்டுமின்றி பனி பாதையையும் அந்த கார் கடந்திருக்கின்றது. ஜிம்னி 5 கதவுகள் வெர்ஷனே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 103 எச்பி மற்றும் 134 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் ஜிம்னியில் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆஃப்-ரோடு பயண பிரியர்களின் எண்ணிக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இத்தகையோரைக் கருத்தில் கொண்டே முன்னணி கார் உற்பத்தியாளர்கள் இந்த வகை வாகனங்களை அதிகளவில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் மஹிந்திரா மற்றும் ஃபோர்ஸ் உள்ளிட்ட பிராண்டுகள் முன்னணியாளர்களாக இருக்கின்றனர்.

Article Published On: Thursday, October 19, 2023, 23:57 [IST]
English summary
Maruti suzuki jimny drives through one of the world s most deadliest road sach pass here is video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+