ஓட்ட தெரியாதவங்க கையில கார கொடுத்தா இதுதான் நிலைமை! அதிசயம் அவ்ளோ பெரிய பள்ளத்துல விழுந்தும் காரு நல்லா ஓடுது!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் ஜிம்னி (Jimny)-யும் ஒன்றாகும். இந்த எஸ்யூவி காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மஹிந்திரா தார் (Mahindra Thar) காருக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே இந்த ஜிம்னி ஆகும். இது ஓர் மிக சிறந்த ஆஃப்-ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது. இதனால்தான் ஆஃப்-ரோடு பயண விரும்பிகள் மத்தியிலும் இந்த கார் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஆஃப்-ரோடு பயணத்திற்காக எடுத்துச் சென்ற மாருதி சுஸுகி ஜிம்னி ஒன்று பெரும் பள்ளத்தில் பலமுறை உருண்டு விழுந்து விபத்தில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடவே அந்த மாபெரும் பள்ளத்தில் ஜிம்னி உருண்டு விழுந்த பின்னரும், அது நல்ல இயக்க நிலையில் இருந்ததாகவும் ஆச்சரியமளிக்கும் தகவல்களும் வெளியாகி உள்ளன.

ஜிம்னியின் இத்தகைய திறன் அந்த காரின் மீதிருந்த பார்வையை மாற்றி இருக்கின்றது. குறிப்பாக, ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், அதன் தரத்தையும் இந்த நிகழ்வின் வாயிலாக நமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், இந்த விபத்தானது எதிர்பாராத விதமாகவே அரங்கேறி இருக்கின்றது.
அந்த காரின் உரிமையாளர் போதிய ஆஃப்-ரோடு பயண அனுபவம் இல்லாதவர் என தெரிகின்றது. மேலும், அவர் ஆஃப்-ரோடு பயணத்தின் ஒரு கட்டத்தில் காரை கட்டுப்படுத்த முடியாமல் திணறியிருக்கின்றார். இதன் விளைவாகவே காருக்கு ஒரு பக்கம் அதிக எடை ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறாகிய அடுத்த நொடியே அது பள்ளத்தில் உருண்டு விழந்து விபத்தைச் சந்தித்து இருக்கின்றது.
இந்த நிகழ்வின் வாயிலாக, ஆஃப்-ரோடு பயணத்தின்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் மற்றும் போதிய அனுபவம் இல்லாமல் ஆபத்தான ஆஃப்-ரோடு பயணத்தை மேற்கொள்ளக் கூடாது என்பது தெரிய வந்திருக்கின்றது. ஜிம்னியை மாருதி சுஸுகி நிறுவனம் ஆஃப்-ரோடு பயணத்திற்கு மட்டுமல்ல வழக்கமான பயணங்களுக்கு உகந்த வமாகனமாகவும் சுஸுகி தயார் செய்திருக்கின்றது.
எனவே இந்த இரண்டிற்குமான வசதிகள் நிறைந்த காராகவே ஜிம்னி காட்சியளிக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎஸ் மற்றும் 136 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.
கியர்பாக்ஸை பொருத்த வரை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இந்த விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை. குறிப்பாக, பலமுறை உருண்டு விழுந்த பின்னரும் அக்கார் இயக்க நிலையில் இருந்ததோடு அதில் இருந்த டிரைவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
அவரும் அசால்டாக வெளியே வருவதை தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ சுட்டிக் காட்டுகின்றது. ஜிம்னி ஓர் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த 5 டோர் கார் மாடல் ஆகும். அதில், பெரிய தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஏசி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா தார் ராக்ஸ் இந்த காருக்கு போட்டியளிக்கும் விதமாக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய தரத்தை வெளிக்காட்டும் விதமாக இப்போதைய விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இருப்பினும், இந்த இரண்டில் எது இந்தியர்களின் மனம் கவர்ந்த காராக மாறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








