பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் புதிய யோசனை

இந்திய பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் மாருதி டிரைவிங் ஸ்கூல் என்ற நிறுவனத்ததை துவங்கியுள்ளது. இங்கு பொறுத்தப்பட்டுள்ள சிமுலேட்ட்ர் எனும் நவீன கருவி மூலம் இருந்த இடத்தில் இருந்து

By Balasubramanian

இந்திய பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் மாருதி டிரைவிங் ஸ்கூல் என்ற நிறுவனத்ததை துவங்கியுள்ளது. இங்கு பொறுத்தப்பட்டுள்ள சிமுலேட்ட்ர் எனும் நவீன கருவி மூலம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கார் ஓட்டும் முழுஅனுபவத்தையும் பயிற்சியையும் பெறலாம். இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களும் இந்த டிரைவிங் ஸ்கூலில் டிரைவிங் படிக்கலாம்.

பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் புதிய யோசனை

இந்தியாவில் தற்போது கார்பரேட் நிறுவனங்கள் டிரைவிங் ஸ்கூல் பிஸ்னஸில் இறங்கிவிட்டனர். முக்கியமாக வாகன தயாரிப்பு நிறுவனங்களே இந்த பிஸ்னஸையும் செய்து வருகின்றனர். இந்த வகையில் மாருதி நிறுவனம் மாருதி டிரைவிங் ஸ்கூல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது.

பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் புதிய யோசனை

இந்தியாவில் தற்போது 450 வது டிரைவிங் ஸ்கூலை பொள்ளாச்சியில் அந்நிறுவனம் திறந்துள்ளது. மாருதி நிறுவனத்தில் உயர்தர கருவிகள் கொண்டு டிரைவிங் கற்று தரப்படுகிறது. முக்கியமாக டிரைவிங் சிமுலேட்டர் கொண்டு டிரைவிங் கற்று தரப்படுகிறது.

பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் புதிய யோசனை

இந்நிறுவனம் மாணவர்களுக்கு செயல்முறை பயற்சியும், வகுப்பு பயிற்சியும் அளிக்கிறது. அரசு அளித்துள்ள அறிவியல் ரீதியிலான பாடங்களை மக்களுக்கு வழங்குகிறது. இந்த பயற்சியை வழங்கும் பயிற்றுநர்களுக்கும் ஆண்டுதோறும் அவர்களது திறனை சோதிக்க டெஸ்ட் வைக்கப்படும் அதன் மூலம்தான் தரமான பயிற்சி அவர்களால் வழங்க முடியும் என அரசு நம்பியுள்ளது.

பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் புதிய யோசனை

பொள்ளாச்சியில் நடந்த மாருதி டிரைவிங் ஸ்கூலின் துவக்க விழாவில் அந்நிறுவன மூத்த செயல் அதிகாரி பேசுகையில் :" இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்தில் 1.5 லட்சம் பேர் பலியாகிறார்கள். இந்த விபத்துகளுக்கு பெரும்பாலும் டிரைவர்கள் செய்யும் தவறுகளே காரணம்.

பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் புதிய யோசனை

மாருதி நிறுவனம் இந்த திட்டத்தை கடந்த 2005ம் ஆண்டே துவங்கியது. இன்று வரை அதன் மூலம் 10 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட இந்த புரோகிராம் மூலம் இந்திய ரோடுகளில் பாதுகாப்பாக ஓட்ட வழி செய்யும். தற்போது இந்த டிரைவிங் ஸ்கூலை மேலும் விரிவடைய வைக்க முயற்சித்து வருகிறோம். 2020ம் ஆண்டிற்குள் 15 லட்சம் பேர் இதன் மூலம் பயன்பெற வைக்க முயற்சித்து வருகிறோம் " என கூறினார்.

பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் புதிய யோசனை

மாருதி டிரைவிங் ஸ்கூல் நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 212 நகரங்களில் இயங்கி வருகிறது. கடைசி 5 ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனம் 5.3 லட்ம் பேருக்கு பயிற்சி அளித்துள்ளதாகவும், அதில் 1.75 லட்சம் மக்கள் 2017-2018ம் ஆண்டில் பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. முக்கியமான விஷயம் என்ன என்றால் மொத்தம் பயற்சி பெற்றவர்களில் 46 சதவீதத்தினர் பெண்கள் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் புதிய யோசனை

இன்று இந்தியாவில் பெண்களின் சாதனை என்பது மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. பெருநகரங்களில் எல்லாம் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாகனம் ஓட்டி வருகின்றனர். ஆனால் தற்போது சிமுலேட்டர் இல்லாமல் காரை நேரடியாக ஓட்டியே பயிற்சி பெற்றால் அவர்களுக்கு பாதுாப்பு குறித்த அச்சம் எழுகிறது.

பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் புதிய யோசனை

இதன் காரணமாவே பல பெண்கள் கார் ஓட்ட தயங்கி வருகின்றனர். தற்போது தொழிற்நுட்ப கருவியான சிமுலேட்டர் வந்த பின்பு பெண்கள் ஆர்வமாக இதில் பங்கு பெற ஆர்வமாக இருந்து வருகின்றனர். நீண்ட நாட்களாக பெண்களுக்கு இருந்த பிரச்னைக்கு இந்த தீர்வு பெரும் வரப்பிரசாதாமாக இருந்து வருகிறது.

பெண்கள் எளிதாக கார் டிரைவிங் படிக்க மாருதி நிறுவனம் புதிய யோசனை

தமிழகத்தை பொருத்தவரை இது போன்ற டிரைவிங் ஸ்கூல் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, ஓசூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, நாகர்கோவில், வேலூர் ஆகிய நகரில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki Opens Its 450th Driving School In India. Read in Tamil
Story first published: Monday, July 30, 2018, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X