ஒரு காருல இவ்ளோ ஸ்பீக்கரா! போலீஸ் பாத்தா பிடிக்க மாட்டாங்களா! ஸ்விஃப்ட் கார எப்படி மாத்தியிருக்காங்க பாருங்க!

இணையத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்கிற ஓர் முயற்சியாக ஓர் கார் ஆர்வலர் தன்னுடைய கார் முழுக்க ஸ்பீக்கர்களால் அலங்கரித்திருக்கின்றார். இதன் வாயிலாக இந்தியாவின் அதிக ஸ்பீக்கர்களைக் கொண்ட காராக அந்த வாகனம் மாறியிருக்கின்றது. மேலும், இணையத்தின் கவனத்தையும் அந்த கார் தன் பக்கம் கவர்ந்திருக்கின்றது. இது இந்தியாவின் அதிகம் ஸ்பீக்கர்களைத் தாங்கிய காராக மட்டும் மாறவில்லை, இந்தியாவின் அதிக ஒலியை வெளியேற்றும் மற்றும் அதிக பவர்ஃபுல்லான ஸ்பீக்கர்களைத் தாங்கிய காராகவும் அது மாறியிருக்கின்றது.

இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)-டிலேயே இத்தகைய மாற்றத்தை செய்திருக்கின்றனர். இந்த மாற்றத்திற்கு பின்னால் இணையத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பது மட்டுமல்ல, மற்றுமொரு மிக முக்கியமான காரணமும் இருக்கின்றது.

Most powerful car audio system

மியூசிக் சிஸ்டம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றாலேயே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் அதிக ஸ்பீக்கர்களைத் தாங்கிய வாகனமாக மாற்றப்பட்டு உள்ளது. எஸ்பிஎல் ஆடியோ (SPL Audio) என்கிற பெயரில் அவர்கள் அறியப்படுகின்றார்கள். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், வாகனங்களுக்கான பிரத்யேக ஸ்பீக்கர்களையே தயார் செய்து வருகின்றது.

இந்த நிலையிலேயே தங்களிடம் என்ன மாதிரியான ஸ்பீக்கர்கள் இருக்கின்றன, அவை என்ன மாதிரியான தரம் கொண்டவை, அவற்றை காரில் பொருத்தினால் எப்படி இருக்கும்? என்பதை வெளிக்காட்டும் நோக்கில் ஸ்விஃப்ட் காருக்கு முழுக்க ஸ்பீக்கர்களால் அலங்கரித்திருக்கின்றனர். இதன் வாயிலாக தங்களிடம் இருக்கும் அனைத்து ஸ்பீக்கர்களையும் அவர்கள் ஒரே காரில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஸ்விஃப்ட் காரையே தங்களுடைய ஷோரூமாக மாற்றிவிட்டனர். இதன் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு சிலருக்கு அவர்கள் தங்களுடைய ஸ்பீக்கர்களை டெமோவும் காண்பித்து வருவதாகக் கூறப்படுகின்றது. தொடர்ந்து, தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோவிலும் அந்த ஸ்பீக்கர்களின் தனித்தன்மை பற்றி அவர்கள் எடுத்துரைத்திருக்கின்றனர்.

குறிப்பாக, காரின் பின் பக்கத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் அந்த பிரமாண்ட ஆடியோ சப் ஊஃபர்கள் ஒவ்வொன்றும் 1250 ஆர்எம்எஸ் திறன் கொண்டவை என்று கூறப்படுகின்றது. மேலும், அதன் எடை 19 கிலோ முதல் 20 கிலோ வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தகைய பிரமாண்ட ஸ்பீக்கர்கள் நான்கை அவர்கள் பின்னால் நிலை நிறுத்தியிருக்கின்றனர். இதுதவிர, சில சிறிய வகை ஸ்பீக்கர்கள் மற்றும் சப்-ஊஃபர்களையும் ஸ்விஃப்ட் காரில் பொருத்தி இருக்கின்றனர். அவை காரின் உட்பக்கத்திற்கு தனித்துவமான லுக்கை வழங்கும் வகையில் உள்ளன. காரின் உட்பக்க டோர் பேனல் மட்டுமின்றி ஜன்னல்களையும் அவர்கள் மறைத்து ஸ்பீக்கர்களை பொருத்தியிருக்கின்றனர்.

தங்களுடைய தயாரிப்பை விளம்பரம் செய்ய ஓர் காரை அவர்கள் முழுக்க முழுக்க ஸ்பீக்கர்களால் அலங்கரித்திருக்கின்றனர். ஸ்பீக்கர் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயல் மற்ற கார் ஆர்வலர்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், ஸ்பீக்கர் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயல் பலரின் மனதைக் கவரக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஒரு காரு இருந்தால் உங்கள் கையில் இருந்தால் வேறொரு மியூசிக் சிஸ்டமே தேவைப்படாது. குறிப்பாக, நண்பர்களுடன் பார்ட்டி செய்யும்போது இந்த கார் இருந்தால் மினி டிஜே நிகழ்ச்சியை அந்த இடத்தில் வைத்து விட முடியும் அந்த அளவிற்கு தரமான மற்றும் அதிக ஸ்பீக்கர்களை இநத் கார் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 8, 2024, 15:00 [IST]
English summary
Maruti suzuki swift gets indias most powerful car audio system here is more details
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+