17 லட்ச ரூபா செலவு பண்ணி என்ன பலன்? முழுசா இல்லீகல் காராக மாறிய ஸ்விஃப்ட்! போலீஸ் எப்போ வேணாலும் இத துக்கலாம்!

இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) இருக்கின்றது. விலையும் குறைவும், பராமரிப்பு செலவும் கம்மி என்பதால் இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாக இது மாறி இருக்கின்றது. இதனால்தான் விற்பனையிலும் இந்த கார் டாப் பிளேசில் இருக்கின்றது.

இத்தகைய காரையே மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முற்றிலும் மாறுபட்ட அம்சங்களைக் கொண்ட வாகனமாக மாற்றி இருக்கின்றார். மேலும், அதன் தோற்றத்தையும் அவர் பலமடங்கு வித்தியாசமாக மாற்றி இருக்கின்றார். பயன்படுத்துவதற்கு அனுமதியே இல்லாத பேனல்களைக் கொண்டு இந்த காரை அவர் அலங்கரித்து இருக்கின்றனர்.

Maruti suzuki swift modified

ஆகையால், பயன்படுத்த சட்டத்திற்கு புறம்பானாக (இல்லீகல்) காராக ஸ்விஃப்ட் மாறி இருக்கின்றது. இந்த கார் அலங்கரிப்பு விஷயத்தில் மட்டுமில்லைங்க, நம்பர் பிளேட் விஷயத்திலும் விதியை மீறி இருக்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திலான எழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக ஃபேன்சியான எழுத்தையே அவர் பயன்படுத்தி இருக்கின்றார்.

ஆகையால், சாலைப் பயன்பாட்டிற்கு துளியளவும் உகந்ததல்லாத வாகனமாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மாறி இருக்கின்றது. இந்த மாற்றத்திற்காக இளைஞர்கள் 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக அவர்கள் செலவு செய்திருக்கின்றனர். மிக முக்கியமாக ஆடியோ சிஸ்டத்திற்கு மட்டும் அவர்கள் தனியாக பல லட்ச ரூபாய்களை அவர் வாரி இறைத்திருக்கின்றனர்.

இந்த தகவல் கார் ஆர்வலர்களை அதிர்ச்சியில் மூழ்க செய்திருக்கின்றது. ஆடியோ சிஸ்டத்துடன் புகையை வெளியேற்றும் ஃபாக் கருவியையும் இந்த காரின் பின் பக்கத்தில் சேர்த்திருக்கின்றனர். ஆடியோ சிஸ்டமும் காரின் பின் பக்கத்திலேயே அவர்கள் நிலை நிறுத்தி இருக்கின்றனர். இவற்றை சிறிய சிறிய பார்ட்டிகளை காரிலேயேக் கொண்டாடும் விதமாக அவர்கள் சேர்த்து இருக்கின்றனர்.

இந்த அம்சங்கள் பார்ப்பதற்கு கவரும் வகையில் இருந்தாலும், ஆனால், சட்ட ரீதியாக பார்த்தோமேயானால் இது அனைத்தும் அதற்கு புறம்பானது ஆகும். மிக முக்கியமாக காரின் வெளிப்புறத்தை மாற்றும் விதமாக அவர்கள் சேர்த்திருக்கும் பேனல்களே அந்த காரை சட்டத்திற்கு புறம்பானதாக மாற்றி இருக்கின்றது.

ஸ்விஃப்ட் காரில் உள்ள ஒரிஜினல் க்ரில் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக கோப்ரா பேட்ஜ் கொண்ட ஷெல்பி ஃபோர்டு மஸ்டாங் கிரில்லை காரின் முகப்பு பகுதியில் அவர்கள் பொருத்தி இருக்கின்றனர். இதுதவிர, காரின் அலாய் வீல்கள் மற்றும் பான்னெட் ஆகியவையும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

புதிய பான்னெட், க்ரில் மற்றும் பம்பர் ஆகியவற்றால் இந்த கார் ஸ்விஃப்ட் என்கிற உண்மை தோற்றத்தை இழந்திருக்கின்றது. இதுபோன்று அடையாளத்தை அந்த கார் இழந்திருக்கின்ற காரணத்தினாலேயே அதன் பயன்படுத்த தடைச் செய்யப்பட்ட காராக மாறி இருக்கின்றது. காரில் இடம் பெற்றிருக்கும் பான்னெட்டில் ஹூட் ஸ்கூப் மற்றும் வெண்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவை செயலற்றவை ஆகும். இத்துடன், கஸ்டம் மேட் எல்இடி லைட்டுகள் மற்றும் பனி மின் விளக்குகள் ஆகியவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஸ்போர்ட்டி தோற்றத்தைக் கொடுக்கும் விதமாக இந்த காரின் பின் பக்கத்தில் ஸ்பாய்ளர் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. அதுதவிர, பெரிய டிஃப்யூசர் மற்றும் பம்பரும் காரின் பின் பக்கத்தில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மாற்றங்கள் சிலவற்றை காரின் சொந்தக்காரர் கேரளாவின் கொச்சியின் செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆடியோ சிஸ்டத்திற்காக பல லட்ச ரூபாயை அந்த இளைஞர் வாரி இறைத்திருப்பதாக நாங்கள் தெரிவித்து இருந்திருந்தோம். துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் ரூ. 4.5 லட்ச ரூபாயை இளைஞர் ஆடியோ சிஸ்டத்திற்காக செலவழித்து இருக்கின்றார்.

காரின் விலை ரூ. 7 லட்சம் ஆகும். இதுதவிர, மற்ற மாடிஃபிகேஷனுக்காக 5.5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆகையால், ஒட்டுமொத்தமாக இந்த ஸ்விஃப்ட் காரின் மதிப்பு தற்போது ரூ. 17 லட்சத்திற்கும் அதிகமாகா மாறி இருக்கின்றது. இத்தகைய மாபெரும் தொகை செலவிலேயே இந்த காரை அதன் உரிமையாளரே இல்லீகல் காராக மாற்றியிருக்கின்றார்.

இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதுபோன்று மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களை போக்குவரத்து காவலர்கள் பறிமுதல் செய்தல் மற்றும் அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே மிகவும் துணிச்சலாக பல லட்சம் ரூபாய் செலவிட்டு காரை இளைஞர் மாற்றி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு கார் மாற்றப்பட்டு இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இந்த காரை பறிமுதல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்காக சான்றாக பல்வேறு சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. குறிப்பாக, கேரளாவில் மாடிஃபை செய்யப்பட்ட கார்கள் பல பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, December 4, 2023, 5:00 [IST]
English summary
Maruti suzuki swift modified with cobra badge from shelby ford mustang
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+