லம்போர்கினி காராக மாறிய மாருதி ஸ்விஃப்ட்! இவ்ளோதான் செலவு ஆச்சா! கண்டேபிடிக்க முடியாத அளவுக்கு மாத்தீருக்காங்க

லம்போர்கினி கார்களை (Lamborghini Cars) பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவுதான். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை, வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரும் லம்போர்கினி நிறுவனத்தின் கார்களை காதலிக்கின்றனர். இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.

இதில், 'சிசர் டோர்ஸ்' (Scissor Doors) மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. ஆம், லம்போர்கினி நிறுவனத்தின் கார்களை உண்மையில் பலரும் விரும்புவதற்கு, அதன் தனித்துவமான சிசர் டோர்களும் ஒரு முதன்மையான காரணம்தான். இதனை 'லம்போ டோர்ஸ்' (Lambo Doors) என்ற பெயரிலும் கூட அழைக்கின்றனர்.

Maruti Suzuki Swift Modified With Lamborghini Style Scissor Doors

இப்படிப்பட்ட தனித்துவமான கதவுகளை கொண்ட லம்போர்கினி நிறுவனத்தின் விலை உயர்ந்த கார்களை கோடீஸ்வரர்களால் மட்டுமே சொந்தமாக்க முடியும். நடுத்தர வர்க்க மக்களால், லம்போர்கினி கார்களை வாங்க முடியாது. வேண்டுமானால் தங்கள் சாதாரண கார்களை, லம்போர்கினி கார்களை போன்று அவர்கள் மாற்றி கொள்ள முடியும்.

ஹரியானா (Haryana) மாநிலம் குர்கான் (Gurgaon) நகரை சேர்ந்த ஒருவர், 2வது வழியை கையாண்டுள்ளார். ஆம், அவர் தனது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரில், லம்போர்கினி கார்களை போன்ற சிசர் டோர்களை பொருத்தியுள்ளார். சிசர் டோர்கள் பொருத்தப்பட்ட மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் வைரல் வீடியோ (Viral Video) தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Modified Maruti Suzuki Swift

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், சிசர் டோர்களை பொருத்துவதற்கு சுமார் 65 ஆயிரம்-70 ஆயிரம் ரூபாய் செலவானதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். லம்போர்கினி கார்களை போன்ற டோர்கள் மட்டுமல்லாது, வேறு சில மாடிஃபிகேஷன்களும் (Modifications) இந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் செய்யப்பட்டுள்ளன.

இதில், மினி கூப்பர் (Mini Cooper) கார்களை போன்ற யூனியன் ஜாக் (Union Jack) ஸ்டைல் எல்இடி டெயில்லைட்கள் முக்கியமானதாகும். ஆனால் காவல் துறை அதிகாரிகளால் தனக்கு அடிக்கடி பிரச்னை ஏற்படுவதாக இந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

சாலையில் அபாயகரமான வகையில் ஓட்டாத போதும் கூட, காவல் துறை அதிகாரிகள் தன்னை பிடித்து கொள்வதாக அவர் கூறியுள்ளார். சமீப காலமாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார்களை வைத்துள்ள பலர், அவற்றில் விதிமுறைகளை மீறி ஸ்டண்ட் செய்கின்றனர். அத்துடன் அதை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற தளங்களில் பதிவிடவும் செய்கின்றனர்.

இதன் காரணமாக இந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் உரிமையாளருக்கும், காவல் துறை அதிகாரிகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பொது சாலைகளில் ஸ்டண்ட் போன்ற ஆபத்தான விஷயங்கள் எதையும் தான் செய்வதில்லை என இந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் உரிமையாளர் கூறியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாதாரணமாக பார்த்தால், இது உண்மையிலேயே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்தானா? என்ற சந்தேகம் ஏற்படும். அந்த அளவிற்கு மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே சாதாரணமாக பார்க்கும் ஒருவரால், இது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் என்பதை கண்டறிவது கடினம். நன்றாக உற்று கவனித்தால் வேண்டுமானால், கண்டுபிடிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 17, 2024, 14:22 [IST]
English summary
Maruti suzuki swift modified with lamborghini style scissor doors viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+