கார் டிரைவர் செய்த காரியத்தால் தமிழ்நாடே கலங்கி போயிருச்சு! இளகிய மனசு உள்ளவங்க வீடியோவை பாக்காதீங்க!
இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே தேவையில்லாமல் வாக்குவாதங்கள் (Road Rage) ஏற்படுவது என்பது தற்போதெல்லாம் மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் 2 வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. மாருதி சுஸுகி டூர் எஸ் (Maruti Suzuki Tour S) மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) ஆகிய வாகனங்களில் பயணம் செய்த 2 வாகன ஓட்டிகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த 2 வாகனங்களுக்கும் பின்னால், யமஹா ஒய்இஸட்எஃப்-ஆர்15 (Yamaha YZF-R15) பைக்கில் வந்த ஒருவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி டூர் எஸ் காரில் வந்தவரும், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் வந்தவரும், வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே பயணம் செய்ததை காட்டுவதுடன் இந்த வீடியோ தொடங்குகிறது.
ஒரு கட்டத்தில், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ரைடர் கை நீட்டி பேச தொடங்குகிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மாருதி சுஸுகி டூர் எஸ் காரின் டிரைவர், வேண்டுமென்றே ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் மீது மோதினார். இதனால் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ரைடர் நிலைதடுமாறினார்.
ஆனால் பேலன்ஸை இழந்தாலும், அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை. பைக் தாறுமாறாக ஓடிய சூழலில், எப்படியோ கட்டுப்படுத்தி விட்டார். எனினும் அவர் பைக்கில் வைத்திருந்த பேக் கீழே விழுந்து விட்டது. இதன்பின் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு வந்து அவர் பேக்கை எடுத்து கொண்டார்.
அந்த நேரத்தில், மாருதி சுஸுகி டூர் எஸ் காரின் டிரைவரும், வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்து விட்டார். நல்ல வேளையாக அவர்கள் 2 பேருக்கும் கைகலப்பு ஏற்படவில்லை. இருவரும் வெறும் வாக்குவாதத்துடன் முடித்து கொண்டனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது? என்பதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.
எதுவாயினும், மாருதி சுஸுகி டூர் எஸ் காரின் டிரைவர் செய்தது மிகப்பெரிய தவறாகும். ஒருவேளை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ரைடர் தவறி கீழே விழுந்திருந்தால், அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருந்திருக்கும். மேலும் அவர் கீழே விழுந்திருந்தால், அந்த வழியாக வந்த மற்றவர்களுக்கும் கூட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.
வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருக்கும்போது ஒரு பைக் கீழே விழுந்தால், அதன் மீது மோதி மற்றவர்களும் கீழே விழலாம். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே எந்தவொரு சூழலிலும் கோபத்தை கட்டுப்படுத்துவதுதான் சிறந்தது. இல்லாவிட்டால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் பயணம் செய்யும்போது மற்ற வாகன ஓட்டிகளுடன் பிரச்னை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். முதலில் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்துங்கள். எப்போதும் சாந்தமாக இருப்பது நல்லது. அதேபோல் தேவையில்லாமல் ஹாரன் அடிக்க வேண்டாம்.
மற்றவர்கள் மிகவும் அவசரமாக சென்று கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்களின் வழியை அடைக்க வேண்டாம். அவர்களுக்கு வழி கொடுத்து விட்டு, பொறுமையாக செல்லுங்கள். எங்கு செல்வதாக இருந்தாலும், கொஞ்சம் முன் கூட்டியே கிளம்புவதன் மூலம் உங்களால் இதை செய்ய முடியும். சாலையில் பதற்றமின்றி பொறுமையாக இருக்க வேண்டுமென்றால், முன் கூட்டியே கிளம்புவது அவசியம்.


Click it and Unblock the Notifications








