காருக்குள் டிவி... எவ்வளவு சிறிய காராக இருந்தாலும் இதை செய்து பாருங்க!! நிஜமாக்கி காட்டிய வேகன்ஆர் ஓனர்!
மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) கார் ஒன்று கேரளாவில் லெவல் 1 அடாஸ் (ADAS) வசதியை பெற்றுள்ளது. இந்த வேகன் ஆர் காரில் அடாஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இந்த வேகன்ஆர் காரின் உரிமையாளரை பற்றியும் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோவை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் மாருதி சுஸுகி ஆகும். இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து கஸ்டமர்கள் அதிகம் வாங்கும் கார்களுள் ஒன்றாக வேகன் ஆர் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 ஆயிரம் வேகன் ஆர் கார்கள் அசால்ட்டாக இந்தியாவில் விற்பனையாகுகின்றன.

அவ்வாறு கேரளாவில் வேகன்ஆர் காரை வாங்கிய ஒருவர், தனது காரில் அடாஸ் தொகுப்பை பொருத்தி உள்ளார். அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் என்பதன் சுருக்கமான அடாஸ் இன்றைய கால மாடர்ன் கார்கள் பெரும்பாலானவற்றில் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் எம்ஜி அஸ்டர் அவற்றுள் சில ஆகும்.
இருப்பினும், மாருதி சுஸுகி வேகன் ஆர் போன்ற விலை குறைவான கார்களுக்கு அடாஸை வழங்கும் அளவிற்கு இன்னும் நாம் தொழிற்நுட்ப வளர்ச்சி அடையவில்லை. ஆனால், கார் உதிரி பாகங்கள் சந்தையில் அடாஸ் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. அவ்வாறு கிடைத்த லெவல் 1 அடாஸ் தொகுப்பையே இந்த கேரள வேகன் ஆர் கார் உரிமையாளர் வாங்கி பொருத்திக் கொண்டுள்ளார்.

அடாஸ் தொகுப்புகள் பல விதமான லெவல்களில் கிடைக்கின்றன. தற்போதைக்கு பெரும்பான்மையான கார்களில் லெவல் 2 அடாஸ் தான் வழங்கப்படுகிறது. எம்ஜி க்ளோஸ்டர் போன்ற சில விலையுயர்ந்த கார்களில் மட்டுமே லெவல் 1 அடாஸ் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்த விலை குறைவான வேகன் ஆர் காரில் லெவல் 1 அடாஸ் பொருத்தப்பட்டுள்ளதாக 'குயின் ஆன் வீல்ஸ்' என்ற யுடியூப் சேனலில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேகன் ஆர் காரில் லெவல் 1 அடாஸ் வசதிகளை கொண்ட டேஸ்போர்டு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. கேமராவில் காட்சிப்படுத்தப்படும் காட்சிகளை காட்டுவதற்காக காரின் டேஸ்போர்டில் நன்கு பெரிய டிஸ்பிளே ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவை பொழுதுப்போக்கிற்கான இன்ஃபோடெயின்மெண்ட் திரையாகவும் பயன்படுத்தலாம்.

இந்த அடாஸ் சிஸ்டத்தை மொபைல் போன் மூலமாக வீடியோவில் கண்ட்ரோல் செய்து காட்டியுள்ளனர். அதாவது, இந்த அடாஸ் தொகுப்பில் இரு கேமராக்கள் செயல்படுகின்றன. இதில் ஒன்று, காரின் முன்பக்கத்தையும், மற்றொன்று காரின் பின்பக்கத்தையும் காட்டும் விதமாக பொருத்தப்பட்டுள்ளன. இதில் எந்த கேமராவின் காட்சிகள் டிஸ்பிளேவில் தெரிய வேண்டும் என்பதை மொபைல் போன் மூலமாகவே தேர்வு செய்துக் கொள்ளலாம்.
கேமராக்கள் மட்டுமின்றி, சென்சார்களும் இந்த வேகன் ஆர் காரில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், ஏதேனும் பொருளுக்கு மிக நெருக்கமாக இந்த கார் சென்றால், இது பீப் சவுண்ட்டை கொடுக்கும். அதேபோல், ஹைவேயில் வெள்ளை கோட்டை கார் தாண்டி சென்றாலும் இந்த பீப் சவுண்ட் ஒலிக்கும். இந்த கார் ஆக்ஸஸரீயை AOCCI என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரைவருக்கு சவுகரியத்தை வழங்குவதாலும், விபத்துகளை குறைப்பதாலும் அடாஸ் கார்களில் ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறிவருகிறது. அதாவது, இன்னும் சில வருடங்களில் நிறைய கார்களில் அடாஸ் வழங்கப்படும். அதேபோல், இவ்வாறான ஆஃப்டர்-மார்க்கெட் அடாஸை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும். இந்த வேகன் ஆர் காரில் லெவல் 1 அடாஸை பொருத்துவதற்கு எவ்வளவு செலவாகியது என்பது குறித்த விபரங்கள் இல்லை.


Click it and Unblock the Notifications









