டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்!

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக, அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை, தனது கார் மூலமாக இடித்து தள்ளிக்கொண்டே சென்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

By Arun

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக, அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை, தனது கார் மூலமாக இடித்து தள்ளிக்கொண்டே சென்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை பேரிகார்டு சம்பவத்தை போல் மும்பையில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

டோல்கேட்களில் தொடரும் மோதல்

டோல்கேட்கள் என்றாலே பலருக்கும் வெறுப்புதான். டோல்கேட்களில் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணம்தான் இதற்கு காரணம். டோல்கேட்களை மூட வேண்டும் என பலரும் போராடி வருகின்றனர். ஆனால் அதற்கு பலன் எதுவும் இல்லை.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

எனவே டோல்கேட்களை தவிர்த்து விட்டு, மாற்று வழியில் செல்வதை பலரும் கடைபிடிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ள கிராமப்புறங்களை தேர்வு செய்து, அந்த சாலைகள் வழியாக பயணித்து டோல்கேட்களை தவிர்க்கின்றனர்.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

மும்பை டெய்லரின் விபரீத முயற்சி

ஆனால் மும்பையில் ஒருவர், டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக விபரீத முயற்சியில் ஈடுபட்டார். டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் செல்வதை தவிர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை, தனது மாருதி சுசூகி ஸ்விப்ட் கார் மூலமாக, சம்பந்தப்பட்ட அந்த நபர் இடித்து தள்ளிக்கொண்டே சென்றார்.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

மும்பை நகருக்கு உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் புள்ளியாக இருக்கும் வாசி பகுதியில் உள்ள டோல்கேட்டில்தான் இந்த துணிகர சம்பவம் நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

கடந்த ஏப்ரல் 21ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இதுகுறித்த தகவல், ஒரு வாரத்திற்கு பின், அதாவது ஏப்ரல் மாதம் 28ம் தேதிதான் மும்பை போலீசாரின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள்.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

முதலில் வழக்கை பதிவு செய்து கொண்ட போலீசார், அதன்பின் விசாரணையை துரிதப்படுத்தினர். கார் மூலமாக பேரிகார்டை தள்ளிச்செல்லும் வீடியோவை முக்கிய ஆதாரமாக போலீசார் வைத்து கொண்டனர். வாசி டோல்கேட்டின் பணியாளர் அர்ஜூன் பராப்பின் வாக்குமூலமும் பதிவு செய்து கொள்ளப்பட்டது.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

இதன்பலனாக, பேரிகார்டை இடித்த தள்ளிக்கொண்டே சென்ற நபரை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். அந்த நபரின் பெயர் அபித் அலி சையத். இவர் டெய்லரிங் ஷாப் வைத்துள்ளார்.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

2 பிரிவுகளின் கீழ் வழக்கு

ஐபிசி செக்ஸன் 279 மற்றும் 427 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரை அடிப்படையாக வைத்து போலீசார் அவரை மடக்கியுள்ளனர்.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

பின்னர் அபித் அலி சையத், நவி மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

போலீசாரின் எச்சரிக்கை

முன்னதாக இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மும்பை போலீசார், ''நீங்கள் ஓடலாம். ஒளிந்து கொள்ளலாம். ஆனால் சட்டத்தின் பிடியில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது'' என கூறியுள்ளனர். அத்துடன் பேரிகார்டை இடித்து தள்ளிச்செல்லும் வீடியோவையும் இணைத்துள்ளனர். அதனை நீங்கள் கீழே காணலாம்.

அபித் அலி சையத் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க முடியும் என்றும், இதனை காப்பியடிக்க நினைப்பவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முடியும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

சென்னையை போல் துணிகரம்

முன்னதாக சென்னையிலும் கூட இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அது டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக அல்ல.

டோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்...!!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட சிலர், சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை இழுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரலாக பரவின. அந்த வீடியோக்களை நீங்கள் கீழே காணலாம்.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய சென்னை போலீசார் 5க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பீட்டர், கதற கதற அழுது கொண்டே மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, May 17, 2018, 11:15 [IST]
English summary
Maruti Swift Driver Who Tried To Evade Toll At Vashi Traced And Booked. read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+