மாருதி ஸ்விஃப்ட் கபாலி எடிசன்... ஓசூர் டீலரின் அசத்தல்!

Written By:

வரும் 22ந் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் கபாலி திரைப்படம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கபாலி திரைக்கு வருவதை கொண்டாடும் விதத்தில் அவர்களது ரசிகர்கள் பல வித்தியாசமான முயற்சிகளையும், விளம்பரங்களையும் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி ஏர் ஏசியா போன்ற பெரு நிறுவனங்களும், சிறிய நிறுவனங்களும் கபாலி திரைப்படத்தை வைத்து விளம்பர பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கின்றன. கபாலி திரைப்படத்திற்கு தனி விமானத்தை இயக்க இருக்கும் ஏர் ஏசியா, அந்த விமானத்தில் கபாலி போஸ்டர்களையும் ஒட்டி கவர்ந்தது. இந்த நிலையில், கபாலி திரைக்கு வருவதை கொண்டாடும் விதத்தில், ஓசூரை சேர்ந்த மாருதி டீலர் நிர்வாகம் கபாலி எடிசன் ஸ்விஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.

டீலர் விபரம்

டீலர் விபரம்

ஓசூரில் உள்ள ஸ்ரீ அம்மன் கார்ஸ் என்ற மாருதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்தான் தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் இந்த காரை அறிமுகம் செய்துள்ளனர்.

போஸ்டர்

போஸ்டர்

கார் முழுவதும் கபாலி ரஜினியின் போஸ்டர் அலங்கரிக்கிறது. கூரையில் கூட கபாலி ரஜினியின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் கபாலியில் இடம்பெற்றிருக்கும் அதிரடி வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மொத்தத்தில் மிக அசத்தலாக காட்சியளிக்கிறது.

மாடல்

மாடல்

.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட வெள்ளை நிற காரில்தான் இவ்வாறு போஸ்டர்களால் அலங்கரித்துள்ளனர். இன்டீரியரிலும் மாற்றங்கள் இல்லை.

 கவரும்...

கவரும்...

இந்த கார் ஓசூர் ஸ்ரீ அம்மன் கார் ஷோரூமில் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை காண்பதற்காகவே, பலர் ஷோரூமிற்கு வருகை தருவர் என்பதுடன், வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

விற்பனை

விற்பனை

கபாலி திரைக்கு வரும்போது இந்த கார் விற்பனைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் ஒரு ரஜினி ரசிகர் இந்த காரை கொத்திக் கொண்டு போய்விடுவார் என்று நம்பலாம்.

பிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்!

பிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்!

 
English summary
Maruti Swift Kabali Edition Launched by Maruti Dealer.
Story first published: Saturday, July 16, 2016, 10:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark