மாருதி ஸ்விஃப்ட் காரை நிசான் ஜிடிஆர் போல மாற்றி அசத்திய கேரள நிறுவனம்!

Written By:

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் இந்தியாவின் சிறந்த கார் மாடல்களில் ஒன்றாக மாருதி ஸ்விஃப்ட் கருதப்படுகிறது. சிறந்த கையாளுமை, அதிக மைலேஜ், கைக்கு தோதான விலை என்பது மட்டுமில்லை, இதன் துறுதுறுப்பான தோற்றம் இந்தியர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. எனவேதான், மாருதி நிறுவனம் கூட ஸ்விஃப்ட் காரில் மாற்றங்களை செய்ய யோசனை செய்கிறது.

இந்த நிலையில், கேரள மாநிலம், கொல்லம் நகரை சேர்ந்த கேடி க்ரூஸ் என்ற கார் மாடிஃபிகேஷன் நிறுவனம், தைரியமாக ஸ்விஃப்ட் காரில் கைவைத்து மாறுதல்களை செய்துள்ளது. அப்படி என்னென்ன மாறுதல்கள் செய்திருக்கின்றனர் என்பதை காண்பதற்காக, அவர்கள் வெளியிட்டிருக்கும் படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

நிசான் ஜிடிஆர்

நிசான் ஜிடிஆர்

உலக அளவில் பிரபலமான நிசான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் சாயலில் இந்த மாருதி ஸ்விஃப்ட் காரின் டிசைனில் மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதன்படி, நிசான் ஜிடிஆர் போன்றே சிவப்பு வண்ணத்தில் பெயிண்ட்டிங் செய்யப்பட்டிருக்கிறது.

முகப்பு

முகப்பு

நிசான் ஜிடிஆர் கொண்டு வருவதற்காக முகப்பில் பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. ஹெட்லைட், க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு ஆகியவற்றை மாற்றியிருக்கின்றனர். மேலும், 17 இன்ச் விட்டமுடைய புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 பின்புற மாறுதல்கள்

பின்புற மாறுதல்கள்

புதிய அலாய் வீல்களை தவிர்த்து, பக்கவாட்டில் அதிக மாறுதல்கள் இல்லை. எனவே, பின்புறத்தில் கைவண்ணத்தை காட்டியிருக்கின்றனர். ரியர் ஸ்பாய்லர், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர், ஸ்கிட் பிளேட், இரண்டு இரட்டைக் குழல் சைலென்சர்கள் என முன்புறத்தை போன்றே, பின்புறமும் மிகவும் சிறப்பான மாறுதல்களை பெற்றிருக்கிறது.

 இன்டீரியர்

இன்டீரியர்

இன்டீரியரில் ஸ்பார்கோ கியர் லிவரும், ஸ்போர்ட்ஸ் கார்களில் இருப்பது போன்ற மோமோ பெடல்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினிலும் மாற்றங்களை செய்து, அதிக சக்தியை வெளிக்கொணரும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. நிச்சயம் இந்த கஸ்டமைஸ் ஸ்விஃப்ட் கார் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று கேடி க்ரூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
English summary
Maruti Swift Redesigned As A GT-R, Looks Surprisingly Good

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark