ஆட்டோ டிரைவரா பார்த்தவங்க எல்லாரும் இப்போ ஆச்சிரியமா பார்க்குறாங்க! எல்லாம் ஓவர் நைட்டுல நடந்திடல!

இளம் வயதில் எளிமையான வேலையை பார்த்து படிப்படியாக முன்னேறிய பணக்காரர்கள் பலரை கேள்விப்பட்டு இருப்போம். அத்தகையவர்களுள் ஒருவர் தான், தொழிலதிபர் சத்யா சங்கர் (Sathya Shankar). கர்நாடகாவின் புத்தூர் என்கிற பகுதியில் ஒரு காலத்தில் ஆட்டோ டிரைவராக இருந்தவரான சத்யா சங்கரின் சொத்து மதிப்பு தற்போதைய நிலவரப்படி ரூ.800 கோடி ஆகும்.

ஆட்டோ டிரைவரில் இருந்து மெதுவாக ஹிந்துஸ்தான் அம்பாசடர் (Hindustan Ambassador) கார் ஓனராக மாறிய தொழிலதிபர் சத்யா சங்கர், 1987ஆம் ஆண்டில் டயர்களை விற்பனை செய்யும் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) ஒன்றை திறந்தார். தொட்டது எல்லாம் தங்கம் என்பதுபோல சத்யா சங்கர் ஆரம்பித்த தொழில் எல்லாம் அவருக்கு கைக் கொடுக்க ஆரம்பித்தது. இதற்கு அவரது கடின உழைப்பு இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

soda company owner sathya shankar

இதன் தொடர்ச்சியாக, 2002ஆம் ஆண்டில் பிந்து ஜீரா மசாலா சோடா (Bindu Jeera Masala Soda) கம்பெனியை நிறுவியதுதான் சத்யா சங்கர் அவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்ததோடு, இன்று அவரை 800 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாகவும் வைத்துள்ளது. இந்த பிந்து ஜீரா மசாலா சோடா ஆனது எவரொருவரும் பருகக்கூடிய வழக்கமான குளிர்பானம் ஆகும்.

தமிழ்நாட்டில் அதிகமாக பார்த்திடாத இந்த மசாலா சோடா ஒருவேளை வட இந்தியாவில் பிரபலமானதாக இருக்கக்கூடும். இந்த கம்பெனி நல்லப்படியாக சென்றுக் கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடாக கடந்த ஏப்ரல் மாதத்தில் பிராண்ட்-நியூ ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் 8 லாங்-வீல்பேஸ் (Rolls-Royce Phantom VIII EWB) என்கிற தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) கார் ஒன்றை தொழிலதிபர் சத்யா சங்கர் வாங்கி இருந்தார்.

அப்போது, புத்தூரில் உள்ள சத்யா சங்கரின் இருப்பிடத்திற்கே சென்று கார் ஹோம் டெலிவிரி (Home Delivery) செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த கன்னட தொழிலதிபரின் புதிய ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் 8 லாங்-வீல்பேஸ் கார் தற்போது பெங்களூருவில் கட்டிட வளாகம் ஒன்றினுள் காட்சி தந்துள்ளது. அப்போது காரினுள் தொழிலதிபர் சத்யா சங்கர் இருந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

soda company owner sathya shankar

சுமார் ரூ.11.3 கோடி விலையில் விற்பனை செய்யப்படும் ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் 8 லாங்-வீல்பேஸ் காரை லைட் சாம்பைன் (LIght Champagne) நிறத்தில் தொழிலதிபர் சத்யா சங்கர் வாங்கி பயன்படுத்தி வருகிறார். இவரது இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காருக்கு உள்ளே அடர் பர்கண்டி (மதுபான நிறம்) மற்றும் கருப்பு நிறங்களில் கேபின் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பொதுவாகவே ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை அவற்றின் உரிமையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வர்.

இதனால், ஒரே மாதிரியான ரோல்ஸ்-ராய்ஸ் கார் மற்றொருவரிடத்தில் இருப்பது இல்லை. அந்த வகையில், தொழிலதிபர் சத்யா சங்கரும் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் 8 காரில் தனது விருப்பத்திற்கு ஏற்ப பல இடங்களில் மாற்றங்களை செய்து கொண்டார். இவரது இந்த பாண்டோம் 8 காரின் உள்ளே டேஸ்போர்டில் கண்ணாடி பேனல்கள் ஒரே சீராக பொருத்தப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டயர்-3 நகரங்கள் அல்லது கிராமங்களில் இருந்து ஒருவர் ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் போன்ற அல்ட்ரா-லக்சரி காரை வாங்குவது மிகவும் அரிதாகும். அதனை தற்போது பெங்களூரு போன்ற லக்சரியான வாழ்க்கை முறையை கொண்ட நகரத்தில் தொழிலதிபர் சத்யா சங்கர் ஜாலியாக பயன்படுத்தி வருகிறார். தோற்றத்தில் மட்டுமில்லாமல் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரில் பவர்ஃபுல்லான 6.75 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி12 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 17, 2025, 5:00 [IST]
English summary
Masala soda company owner sathya shankars rolls royce phantom 8 ewb car spotted
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+