பெங்களூரைத் தொடர்ந்து சென்னையில் 250 கார்கள் தீயில் கருகி நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

சென்னையில் தனியார் கார் நிறுவனத்துக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட கார்கள் தீயிற்கு இரையாகியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தனியார் கார் நிறுவனத்துக்கு சொந்தமான 250க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி நாசமாகியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் இதேபோன்று கார்கள் தீப்பற்றி எரிந்து நாசமாகியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சென்னையிலும் இதேபோன்று 250க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்த துயரச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

முன்னதாக, ஏரோ இந்தியா 2019 என்னும் பெயரில் சர்வதேச விமான கண்காட்சி பெங்களூர் எலகங்கா பகுதியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில், சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி சமீபத்தில் விபத்துக்குள்ளனது. இருப்பினும், இந்த விமானக் கண்காட்சி குறித்ததைப்போன்று தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில்தான், விமானக் கண்காட்சியின் ஐந்தாவது நாளான நேற்று முன்தினம் 250க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் அரங்கேறியது. விபத்து நடைபெற்ற அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் பெரும்பலான குடும்பத்தினர் விடுமுறைக் கழிக்கும் நோக்கில் விமானக் கண்காட்சியைப் பார்வியைிட வந்திருந்தனர்.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

பார்வையாளர்களின் வாகனங்களை பார்க்கிங் செய்வதுக்கு வசதியாக பல இடங்களில் வாகன நிறுத்துமிடத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தயார் செய்து வைத்திருந்தனர். அவ்வாறு, கேட் எண் 5ல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. கருமேகம் தரையிறங்கியதைப் போன்று காட்சியளித்த அந்தக்காட்சியானது, மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுவிட்டதோ என பலரை நினைக்கத் தோன்றியது. ஆனால், அதன் பின்னரே தெரியவந்தது, அது கார்களில் பற்றி எரிந்த தீ என்று.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

கார்கள் வெட்டவெளியில் நிறுத்தப்பட்டிருந்ததாலும், அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், தீ மலமலவென அடுத்தடுத்த கார்களின் மீது பரவு ஏரளாமான கார்கள் தீயிற்கு இரையாகின. தொடர்ந்து, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் கருகி நாசமாகின.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

உள்நாட்டு தயாரிப்பு போர் விமானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரக போர் விமானங்கள் இந்த கண்காட்சியில் நிறுத்தப்பட்டிருந்ததால் இந்த விமானக் கண்காட்சி நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், கார்களின் தீ விபத்து பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில், தலைநகர் சென்னையிலும் இதேபோன்று சம்பவம் அரங்கேறியுள்ளது. போரூர் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அருகே சிவலிங்கம் என்பவருக்குச் சொந்தமாக காலி நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் கார் நிறுவனமான யுடூ கேப்ஸ், தனக்குச் சொந்தமான 300க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்குப் பார்க்கிங் செய்திருந்தது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

இந்த நிறுவனம் தனியார் ஐடி நிறுவனங்களுக்கு மட்டுமே கார்களை இயக்கி வருகின்றது. அவ்வாறு, பணி இல்லாத மற்ற நேரங்களில் கார்கள் இந்த இடத்தில் தான் பார்க்கிங் செய்யப்பட்டு வந்தன. இந்த சூழலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் 300க்கும் மேற்பட்ட கார்களை சம்பவ இடத்தில் யுடூ நிறுவனம் பார்க் செய்துள்ளது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

அவ்வாறு, பார்க்கிங் செய்யப்படும் இடமானது, எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி, காய்ந்த புல் மற்றும் குப்பைகளும் இருந்துள்ளன. இந்நிலையில், நேற்று திடீரென கார்களுக்கு மத்தியில் இருந்த புற்களில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. அந்த தீயானது காற்றின் வேகத்தால் மலமலவென கார்கள் மீதும் படர ஆரம்பித்துள்ளது. மேலும், கார்களில் இருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அனைத்து கார்களின் மீதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

கார்களைச் சுற்றிலும் பெரிய அளவில் மதில் சுவர் இருந்தததால், கார்கள் எரிவதை யாராலும் உணர முடியவில்லை. சிறிது நேரத்தில் தீயின் அளவான வானளவு உயர கரும்புகை அப்பகுதியைச் சூழ்ந்துக்கொண்டுள்ளது. பின்னர், அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு போரூர் தீயணைப்புத் துறையினர் விரைந்தனர். தீயின் தீவிரத்தை உணர்ந்து கிண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

ஆனால், அதற்கு முன்னதாகவே கார்களின் சிலிண்டர்கள் வெடித்ததால், அடுத்தடுத்த கார்களுக்கு தீ வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் லாரிகள் கொண்டுவரப்பட்டு கார்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் பற்றி எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட கார்களில் 250க்கும் அதிகான கார்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகியிருப்பதாகவும், சில கார்கள் சிறிதளவு எரிந்து நாசமாகியிருப்பதகவும் யுடூ கேப்ஸ் தெரிவித்துள்ளது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

சம்பவம் நடைபெற்ற இந்த இடத்தில் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். எரிந்த கார்களில் பல கார்களுக்கு காப்பீடு செய்யப்படவில்லை என்றும், 15 கார்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

இந்த விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினார்கள். மேலும், அங்கிருந்த மருத்துவமனைக்கு வந்திருந்த பலர் கண்ணெரிச்சலுக்கு உட்பட்டு பெரும் அவதிக்குள்ளாகினார்கள்.

பெங்களூருவைத் தொடர்ந்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்: பழிவாங்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!

இந்த விபத்திற்கான காரணம் முழுமையாக அறியாத நிலையில், இயற்கையாக காய்ந்த புற்களில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தொழில்போட்டி காரணமாக தீ வைக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Massive Fire Accident In Chennai 300 Cars Gutted In Blaze. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X