மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் செல்ல மக்களுக்கு உயிர் பயம்..! ஏன் தெரியுமா?

By Balasubramanian

பிரதமர் மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவே ரோட்டில் செல்பவர்களுக்கான பாதுகாப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த ரோட்டில் வாலிபர்கள் பைக்கில் சாகசம் செய்து வருவதாக விடியோ வெளியாகியுள்ளது. இதனால் அந்த ரோட்டில் பயணம் செய்பவர்கள் உயிருக்கு பயந்து பயணம் செய்து வருகின்றனர்.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் செல்ல மக்களுக்கு உயிர் பயம்..! ஏன் தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு டில்லி-மீரட் அருகே எக்ஸ்பிரஸ் ஹைவே ரோட்டை திறந்து வைத்தார்.இந்த ரோடு 14 வழிச்சாலைகளை கொண்டது. நாட்டின் மிகசிறந்த தொழிற்நுட்ப வசதிகளுடன் இந்த ரோடு வடிவைமக்கப்பட்டுள்ளது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் செல்ல மக்களுக்கு உயிர் பயம்..! ஏன் தெரியுமா?

சுமார் 135 கி.மீ. தூரம் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ஹைவே இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் கிரின் ஹைவே ஆகும். இந்த ஹைவே தான் முற்றிலும் சோலார் பவர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹைவேயின் மூலம் டில்லி, காஸியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா, பாஹ்பட், சோனிபட் ஆகிய நகரங்களை இணைக்கிறது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் செல்ல மக்களுக்கு உயிர் பயம்..! ஏன் தெரியுமா?

இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த ஹைவேயில் பாதுகாப்பு வசதிகள் குறித்து சந்தேகம் எழும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியட்ட வீடியோவில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தன் பைக்கில் அந்த ரோட்டில வித்தை காண்பிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் செல்ல மக்களுக்கு உயிர் பயம்..! ஏன் தெரியுமா?

தன் பைக்கில் முன் வீலை தூக்கி கொண்டு பைக் ஓட்டுவது வேகமாக வந்து பின் வீலை தூக்குவது என்று வித்தை காண்பித்து கொண்டிருந்தார். அவர் சாகசம் செய்வதை வேறு சிலர் நின்றுவேடிக்கை பார்ப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காஸியாபாத் அருகே உள்ள தஸ்னா என்ற பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி பிரதமர் மோடி திறப்பு விழா நடந்திய பகுதியில் இருந்து சில கி.மீ. தொலைவில் தான் உள்ளது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் செல்ல மக்களுக்கு உயிர் பயம்..! ஏன் தெரியுமா?

மேலும் இந்த பைக் ஓட்டுநர் அனுமதியில்லாமல் இந்த எக்பிரஸ் ஹைவே பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ஹைவே பகுதியில் சில இடங்களில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த வழியாக இவர் நுழைந்திருக்கலாம் என சிலர் கூறிவருகின்றனர்.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் செல்ல மக்களுக்கு உயிர் பயம்..! ஏன் தெரியுமா?

இச்சம்பவம் இந்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் உள்ள பாதுகாப்பு குறித்து சந்தேகத்தைஎழுப்பியுள்ளது. இளைஞரின் இந்த செயலால் அவரது உயிருக்கும் இன்றி அந்த வழியாக செல்லும் மற்றவர்களின உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விரைவாகவும், விபத்து இல்லாமலும் செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த எக்ஸ்பிரஸ் ஹைவே அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் செல்ல மக்களுக்கு உயிர் பயம்..! ஏன் தெரியுமா?

இந்த எக்ஸ் பிரஸ் ஹைவேயை இபிஇ என்று அழைக்கிறார்கள். டில்லியில் இருந்து கிழக்கு பகுதியில் உள்ள ஹைவேக்களை இணைக்கிறது. இதில் உள்ள 6 லேன்கள் டில்லியில் இருந்து ஹரியான மாநிலம் சேனிபட் அருகே உள்ள பல்வால், குண்டலி பகுதியில் இணைகிறது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் செல்ல மக்களுக்கு உயிர் பயம்..! ஏன் தெரியுமா?

இந்த ஹைவே ரோடுகள் மொத்தம் 135 கி.மீ. நீளம் கொண்டது. இது 56 கி.மீ. பல்வால்- காஸியாபத்தை இணைக்கிறது. மற்ற 49 கி.மீ. காஸியாபாத் சோனிபத் பகுதியை இணைக்கிறது. இந்த சாலை அமைக்க ரூ 11,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் டில்லியில் போக்குவரத்து நெருக்கடியை பெரும் அளவு குறைக்கலாம் என கூறப்படுகிறது.

மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் செல்ல மக்களுக்கு உயிர் பயம்..! ஏன் தெரியுமா?

இனி பரிதாபாத்தில் இருந்து காஸியாபாத்திற்கு செல்வதற்கு டில்லிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சரக்கு வாகனங்கள் விரைவாகவும், சுலபாமாகவும் சென்று வர இந்த சாலை மிகவும் வசதியாக இருக்கும். ஹைவேயில் பைக்கில் இளைஞர் சாகசம் காட்டிய வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இத்திட்டத்திற்காக அரசு கடந்த 2015ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் மிக வேகமாக நடந்தது. சுமார் 3 ஆண்டுகளில் இந்த ரோடு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. இந்த சாலை எவ்வளவு நாட்டிற்கு முக்கியமோ அவ்வளவு தூரம் இந்த சாலையில் பாதுகாப்பும் மிக முக்கியம் அதனால் அரசு இதை கவனத்தில் கொண்டு இந்த சாலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Source: Times Now

Article Published On: Tuesday, May 29, 2018, 17:20 [IST]
English summary
MASSIVE security lapse – Bikers seen stunting on Eastern Peripheral Expressway hours before Prime Minister Modi inaugurated it .Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+