'செஞ்சூரி' நாயகன் சச்சின் டெண்டுல்கர் கார்கள்- சிறப்பு பார்வை

கிரிக்கெட்டில் பேட்டை கையில் எடுத்து விளாசுவது போல, கார் ஓட்டுவதிலும் சச்சின் மாஸ்டர் பிளாஸ்டர்தான். அதிவேகமாக கார் ஓட்டுவது சச்சினுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு என நண்பர்கள் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டு ஷெட்டில் நின்ற கார்களை பார்த்தவுடன் நமக்கே அவரது அந்த ஆர்வத்தை புரிந்துகொள்ள முடிந்தது.
பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஃபெராரி என அனைத்து கார்களும் சச்சினுக்கு அத்துப்படி. இதில், சில கார்கள் அவரது சாதனைக்காக பரிசாக கிடைத்தவை. இந்த நிலையில், தனது ஃபெராரி காரை கடந்த ஆண்டு சச்சின் விற்பனை செய்துவிட்டார்.
அதற்கு பதிலாக கடந்த ஆண்டு இறுதியில் ரூ.4 கோடியில் நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். இந்த காரில் பயணம் செய்வதென்றால் சச்சினுக்கு கொள்ளை ஆசை. ஓய்வு நேரங்களில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் இந்த காரில் ஒரு ரவுண்டு வருவதை சச்சின் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இதுதவிர,சார்ஜா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்ததற்காக பரிசாக வழங்கப்பட்ட ஒபல் அஸ்ட்ரா மற்றும் சில்வர் கலர் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் சச்சின் கார் ஷெட்டுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. தவிர, சச்சினிடம் 2 பிஎம்டபிள்யூ கார்களும், ஸ்கோடா கார் ஒன்றும் உள்ளது.


Click it and Unblock the Notifications








